tanning

hi,
Do anyone knows tanning means.I have many round whites in my face my skin is dark.
I want to look brighter pls help.
bala

ஹாய் வினோபாலா,
டேனிங் என்பது நமது சருமம் சூரிய ஒளிப்பட்டு நிறம் மாறுவதையே குறிக்கும். வெளிநாடுகளில் இந்த டேனிங் நிறம் வர செயற்கையான ஸ்ப்ரேக்களும், லோஷன்களும் விற்கின்றனர். சிலர் சூரிய ஒளிக்கு பதிலாக ஸ்பாக்களில் கூட இந்த டேனிங் ட்ரீட்மெண்டை செய்து கொள்கிறார்கள். வெள்ளை நிறமாக இருக்கும் சருமம் சூரிய ஒளி அதிகம் படும்போது பிரவுன் நிறமாக மாறுவதைத்தான் டேனிங் என்கிறோம். நமது இந்திய சருமம் ஏற்கனவே நல்ல பிரவுன் நிற சருமமாக இருப்பதால் இயற்கையான டேனிங் உள்ள சருமம் நம்முடையது. இதில் தனியாக டேனிங் ட்ரீட்மெண்ட்கள் தேவைப்படாது. அது ஆரோக்கியமான விஷயமும் அல்ல. டேனிங் கலர் போன்று விற்கும் ஸ்ப்ரேக்களை ஷார்ட் ஸ்லீவ் டிரஸ், மினி ஸ்கர்ட் என்று போடும்போது போட்டுக் கொள்ளலாம். சருமம் லேசான மினு மினுப்புடன் கவர்ச்சியாக இருக்கும்.

இப்படி அதிக அளவில் டேனிங் ஏற்பட்டு முகம் கறுத்திருந்தால் அதனை நீக்க நல்ல பேஸ் பேக்கும், நைட் க்ரீமும் அவசியம். உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளைத் திட்டுக்களுக்கு சரும நிபுணரை அணுகுவதே முதலில் அவசியமானது. தோல் மருத்துவர், இது எதுவும் தொற்றால் வந்ததா, தேமலா என்று பரிசோதித்து அதற்கான மருந்துகளை பரிந்துரைப்பார். முகம் நன்றாக வெளிப்பாக தினமும் உருளைக்கிழங்கு சாறை தடவி உலரவிட்டு பிறகு கழுவுங்கள். குளிக்கும் முன்பு தயிர், கடலைமாவு, எலுமிச்சை, சந்தனம் கலந்த பேக்கை போட்டு நன்றாக உலரவிட்டு பின்பு குளியுங்கள். ஆலிவ் ஆயில் ஒத்துக் கொண்டால் அதனைக் கொண்டும் முகத்தை தினமும் மசாஜ் செய்யலாம்.

நில்லுங்க தேவா

உங்களை இப்போ தான் பார்த்தேன் - எனக்கும் ஒரு உதவி தேவை - எனக்கு கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் பெரிதாக உள்ளன. என்ன செய்யணும் இது குறைய?

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்