இட்லி ச்ரியாக்வே வ்ர் மாட்டுது

எனக்கு இட்லி ச்ரியாக்வே வ்ர் மாட்டுது பச்சரிசி தான் போடுறேன் கால் ப்டிக்கு 1/2 கால் ப்டி உளுந்து போடுறேன் வ்ர மாட்டுது எப்ப்டி போடுறதுனு சொல்லுங்க கொடுக்குறீங்க்ளே அது எப்ப்டி பார்ப்ப்து தேடுக போட்டு பார்த்தேன் சரியா தெரியலை சொல்லுங்க

இட்லிக்குப் பச்சரிசி போடக்கூடாது. புழுங்கல் அரிசி 3 கப், உளுந்து 1 கப், வெந்தயம் கால் டீஸ்பூன் எல்லாம் கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்து, உப்பு சேர்த்து கையால் கலக்கி வைத்து, நன்கு புளிக்க விடவும் (குறைந்தது 8 மணி நேரம்). மாவு அப்படியே பொங்கி வரும். பின் இட்லி ஊற்றினால் பஞ்சு போல் வரும்.

இட்லி அடுப்பில் வைக்கும்போது, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வேண்டும். இட்லி தட்டு வைத்து மூடிய பின் தீயை ரொம்பக் குறைத்து விடக்கூடாது. 10 நிமிடம் கழித்து அணைத்து, எடுத்து, இட்லிகள் மீது தண்ணீர் தெளித்து 5 நிமிடம் கழித்து எடுத்தால் ஒட்டாமல் வரும்.

துபாயில் இட்லி அரிசி என்று தனியாகக் கிடைக்கும். அது பயன்படுத்தலாம். அல்லது ராயல் செஃப் பிராண்ட் பொன்னி புழுங்கல் அரிசி வாங்கி பயன்படுத்தலாம். முழு உளுந்து சில தமிழ் கடைகளில் கிடைக்கும். அது போட்டால் நல்லது.

ரொம்ப் ந்ன்றி போட்டு பார்த்துவிட்டு சொல்கிறேன் தோசைக்கும் இத use ப்ண்ண்லாமா த்னி த்னியாதான் அரைத்து வைத்துக்கனுமா dosa and idli

ஹாய் ஃபர்வின்,

இட்லி சாப்டாக வருவதற்க்கு...

ராயல் செஃப் பொன்னி இட்லி அரிசி -4 கப்,
முழு உளுத்ததம்பருப்பு(அங்கு lulu muzu uZundhu kidaithaal use pannalam) - 1 கப்,சிறிது வெந்தயம்.
ஊறவைக்கும் time கூட முக்கியம்.நிரய time like இரவு முழுவதும் ஊறவைப்பது,காலையில் ஊறவைத்து even ஆட்டுவது என வேண்டாம்.
அரிசி ஊற -2hrs 30 mts போதும்.
உளுந்து 20mts ஊறினாலே போதும்.
ஆட்டும் time முக்கியம்.உளுந்து குரைந்தது 1 hr ஆட்ட வேண்டும்.நிரய தண்ணீர் ஊற்றி ஆட்ட கூடாது.
5 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து ஆட்ட வேண்டும்(அப்பொதுதான் உளுந்து மாவு fluffy ஆக இருக்கும்.)பிரகு அரிசியை நிரய நெரம் மைபொல ஆட்டாமல் நெரனெரப்பு இருக்கும்(ரவைபொல) இருக்கும்பொதெ எடுத்துவிட வேண்டும்.
அரைத்த மாவு ரொம்ப liquid ஆகவொ/ரொம்ப கெட்டியாகவும் இருக்காமல் ஊற்றும் பதத்துக்கு இருக்க வேண்டும்.உப்பு போட்டு மிக்ச் பண்ணி 8-10 hrs வைக்கவும்.
if u get udaiththa uznthu paruppu (கருப்பு/வெள்ளை)
ஃப்ரொம் இண்டியா means adhu 3/4 cup pottale podhum..illaiyenraal muzu uzundhu(lulu ve podavum...(or) angu kidakkum uzundhu like homeline brand...podavum)
all the best
elu from qatar

change is the unchanging thing in the changing world

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் ஃபர்வீன்,இவர்கள் சொன்னது போல் உள்ள அளவில் வெந்தயம் இருப்பதால் தோசையும் வரும்.ஆனால் ஹோட்டல் தோசைப் போல் மனமும்,மொறு மொறுவென்றும் வேண்டும் என்றால்,இதே அளவுடன் 3 ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்தால் தோசை சும்மா சூப்பராக இருக்கும்.ஆனால் கடலைப்பருப்பு போட்டால்,இட்லிக்கு சரி வராது.நம் வீட்டில் தோசை விரும்பிகள் இருந்தால்,இதுப்போல் செய்யலாம்.விரும்பி சாப்பிடுவார்கள்.

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா,நான் சொன்ன மாவிலும் தோசைக்கு எனில் நான் அதிலிருந்து தனியாக கொஞ்சம் மாவை எடுத்து
1 ஸ்பூன் ரவை(மொருகலாக வர),1டீஸ்பூன் நல்லெண்ணெய்(holes niraya vara),1/2டீஸ்பூன் சர்க்கரை(சிவந்த நிறம் வர)
சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஊற்றுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் செய்வேன்.நன்றாக வரும்...ஃபர்வின் இதுபோல் ட்ரை பண்ணுங்க.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நான் இப்படி இட்லி செய்கிறனான், ரொம்ப soft ஆக வரும்.try பண்ணிப்பாருங்க,
1 cup-உழுந்து
1 cup-ரவை
1-பெரிய வெங்காயம்
உழுந்தை 3 மணித்தியாலங்கள் ஊற வைக்கனும்,பின் ரவை பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்தெடுத்து சிறிது ஆற வைக்கனும்,பின் உழுந்து,வெங்காயம் தனியாக மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து,அடுத்து ரவையுடன் சிறிது நீர் கலந்தால் தான் நன்றாக அரைபடும்,அரைத்து எடுத்து இரண்டையும் நன்றாக கையால் கலந்து சிறிது baking soda சேர்த்து குழைத்து 11-13 மணித்தியாலங்கள் வைத்தால் நன்றாக புழித்திருக்கும்....... ரொம்ப solft &சத்தானதும் கூட,try பண்ணிப்பாருங்க friend.

ஹாய் அனைவரும் காலை வணக்கம். அனைவரும் நலமா?

நான் இட்லி செய்யும் விதம்.

இட்லி அரிசி - 4 கப்
உளுந்து - 1 கப்
வெந்தயம் - 3 டீஸ்பூன்
ஜவ்வரிசி - 2 டீஸ்பூன்
அவல் - 2 கைப்பிடி ( வெள்ளை அவல் )

அனைத்தையும் 4 மணி நேரம் ஊற விட்டு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைத்துடனும்.

மருநாள் இட்லி ஊற்றினால் இட்லி மிகவும் மிருதுவாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.

சூடாக சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் தர்சி! உங்கள் முறைப்படி இட்லி செய்து பார்த்தேன், மிகவும் நன்றாக வந்தது.நல்ல குறிப்பு தந்தமைக்கு நன்றி.
இனி பிரபாவின் குறிப்பின் படியும் ஒரு முறை செய்து பார்க்க வுள்ளேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Hello friends. naanum marriage aagi vandha 1 1/2 varushama try panndren idli soft ah varala. nan irukirathu vera Maryland US. pulikavum maatenuthu maavu. ippa neega ellarum sonna ingreadients ellam pottu naanum try pandren . result solren . thanks a bunch...

Priya Benjamin

ஹாய் ப்ரியா, நான் Njல இருகேன்.. குளிர் காலத்துல மாவு புளிக்க ஒவென் min temp ku முர்சூடு செஞ்சு off பன்னிடுங்க. அதுல மாவு வெச்சா மறு நாள் புளிச்சிடும்

Archana Radhakrishnan

மேலும் சில பதிவுகள்