நெத்திலிக் கருவாட்டுக் கறி

தேதி: April 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (7 votes)

 

நெத்திலிக் கருவாடு - 200 கிராம்
கத்திரிக்காய் - 75 - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 30 கிராம்
எலுமிச்சை - பாதி
பூண்டு - 4 - 5 பற்கள்
கறித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கருவாட்டை கொதிநீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் எடுத்து கழுவிக் கொள்ளவும். கத்திரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். (இதற்கு சின்ன வெங்காயம் உபயோகிப்பது நல்லது, தோலை நீக்கி விட்டு பாதியாக நறுக்கி போட்டால் போதும்)
ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் கருவாடு, கத்திரிக்காய், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்.
அதன் மேல் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வெந்ததும் கறித்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு போட்டு பிரட்டி விடவும். (பெரும்பாலும் நெத்திலி கருவாட்டில் உப்பு இருப்பதில்லை அதனால் கருவாட்டை சுவை பார்த்து உப்பு சேர்க்கவும்.)
நன்கு எல்லாம் ஒன்றாக சேர்ந்து பிரட்டல் ஆனதும் இறக்கி வைத்து எலுமிச்சை பழம் பிழியவும்.
சுவையான நெத்திலி கருவாட்டு கறி ரெடி. அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆகா அதிரா கருவாடு காண்பித்து நாவுறவைத்து விட்டீர்கள். கத்திரிக்காய் சேர்த்து செய்ததில்லை.
கேரட் கருவாடு புளிகுழம்பு செய்து இருக்கிறேன்.
மற்றபடி டீப் பிரை. பிளெயின் தாலுக்கு.
ஆகா ஓஹோ சூப்பர்

Jaleelakamal

ஹாய் அதிரா மேடம்
எப்படி சுகம்?இந்த குறிப்பு உங்கழுடயதயிஇருக்கும் எண்டு நினைத்தனன்.சூப்பர் குறிப்பு நன்றி.நான் இன்தகறி நிரஜவட்டி செய்து பிழைத்திருக்கிறது உங்கள் முறையில் செய்து பார்க்கிறான். நல்லன்னைக்கு பதிலா ஒலிவோயில் பவிக்கலமா.மண் கடிபடாமல் இருக்க என்னசெய்யவேண்டும்
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

புவஹா ஜலீலாக்கா, செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும். கத்தரிக்காய் இல்லாதவேளை உருளைக்கிழங்கு சேர்த்தும் இதே முறையில் நான் செய்வேன்.

அன்பு சுஹா, நான் அளந்து அளந்துதான் செய்துபார்த்து அனுப்புகிறேன், அதனால் நீங்கள் விரும்பினால், என்னுடைய அளவின்படியே அனைத்தையும் எடுத்துச் செய்து பாருங்கள் பிழைக்காது. முக்கியமாக பாத்திரம் நொன் ஸ்ரிக்காக இருந்தால்தான் நல்லது. நீங்கள் எந்த எண்ணெயும் பாவிக்கலாம் ஆனால் நல்லெண்ணெய்தான் அதிக சுவையைத் தரும். வெளிநாட்டில் நெத்தலிக் கருவாட்டில் மண் இருப்பதே இல்லையே. தலை இல்லாமல்தானே வருகிறது. தலையுடன் கிடைத்தால் தலையை நீக்கிவிடுங்கள், அதில்தான் மண் இருக்கும். மற்றும்படி நல்ல சுடு தண்ணீர் ஊற்றி ஊறவிட்டு, பின்னர் பல தடவை கழுவி எடுங்கள் மண் வராது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உடன் பதில் தந்ததுக்கு நன்றி அதிரா மேடம். செய்து பாத்திற்று பதில் எழுதிறன்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் அதிரா மேடம்,
சூப்பரான நெத்திலிக் கருவாடு கறி.நாங்கள் நெத்திலிக் கருவாட்டை வேறு முறையில் செய்வோம்.இது வித்தியாசமாக இருக்கிறது.இதில் கறித்தூள் என்றால் என்ன?.கொத்தமல்லி தூள், மிளகய் தூள் கலவையா அல்லது கடையில் கிடைக்கும் கறித்தூளா?

நன்றி
சுபாஷினி ரகுஹரன்

ஹாய் அதிரா மேடம்.
உங்களுடைய நெத்திலிக் கருவாடு கறி செய்தனன் சூப்பர வந்தது நன்றி. என் கணவரும் உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னவர்.உங்கள் குறிப்புகள் என்னும் எதிர் பார்கிறான்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்.

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

சுபாஷினி,மிக்க நன்றி. இதே முறையில் செய்யுங்கள் நல்ல சுவையாக இருக்கும், செய்வதும் சுலபம். கறித்தூள் என்பது, இங்கே இலங்கைக் குறிப்பில் இருக்கு நர்மதா கொடுத்திருக்கிறா. கடையிலும் வாங்கலாம். அல்லது நீங்கள் உறைப்புக் கறிகளுக்கு சேர்ப்பதுபோல், மிளகாய்த்தூள் மல்லித்தூளும் சேர்க்கலாம்.

இந்த கறித்தூள் பற்றி ஒவ்வொரு குறிப்பிலும் சொல்லிச் சொல்லியே எனக்கு கையும் வாயும் உளைஞ்சு போச்சு:).

சுகா மிக்க நன்றி. உங்களவருக்கும் என் நன்றியச் சொல்லுங்கோ. இனிமேல் அடிக்கடி செய்யுங்கோ.

நான் நிறையக் குறிப்புக்கள் செய்து அனுப்பிட்டேன், ஆனால் அட்மின்தான்:) இன்னும் போடாமல் வைத்திருக்கிறார்:). ( ஐயையோ நான் பகிடிக்குச் சொல்கிறேன், அட்மினைக் கனநாளாகக் காணவில்லை இந்தப் பக்கம், அந்தத் தைரியத்தில்தான் இப்படி எல்லாம் எழுதுகிறேன்:) ).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா,
உங்க கருவாடு செய்முறை படி இன்று செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.சுவையாக இருந்தது.நன்றி அதிரா.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

திவ்யா, நன்றாக வந்ததா... மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிராங்கோ இன்று உங்கள் நெத்தலி கருவாட்டு கறி செய்தேன். உங்கள் முறைப்படி செய்து பார்த்தேன். கறி சூப்பராய் வந்தது. ருசி, மனம் நன்று. அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் அதிரா அக்கா

கருவாட்டுக் கறி ரொம்ப நன்றாக இருந்தது.
சாப்புடுவதற்கு நல்ல சுவை.

அன்புடன் அதி

ராணி, அதி
மிக்க நன்றி. பதில் தாமதமாகத் தருவதற்காக என்னை மன்னிக்கவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Hi,

I have been trying to cook this recipe for a while now. However, the curry always end up watery. I am using either a sauce pan or a heavy based pan. Do you think a woke will be ideal.

Regards,
Piraba

ஹாய் அதிரா மேடம் .... இது நல்ல இருக்குது ,,,,, இதற்கு பால் சேர்க்க தேவை இல்லையா ?

ஹாய் இண்டைக்கு உங்கட கருவாடு கத்தரிக்காய் பிரட்டல் செய்தன் . ஆனா பழப்புளி, கொஞ்சம் தேங்காய் பாலும் சேர்த்ததன்.நல்லா வந்தது . நன்றி இந்த குறிப்புக்கு .. இதுதான் முதல் தரம் நான் இந்த கறி செய்தது ... நல்லா வந்தது .....

அதிரா மேடம்,உங்கள் தமிழ் அவ்வளவு அழகு.எனக்கு இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.