எங்கட செல்லங்கள்(பிராணிகள்) பற்றிக் கதைக்க வாங்கோ..

இலங்கைத் தோழிகள் தலைப்பிலே, தாம் வழர்த்த செல்லப் பிராணிகள் பற்றிக் கதைத்தார்கள். அப்போ தொடங்கி தலைப்பு ஒன்று போட நினைத்து, இன்றுதான்
கொஞ்சம் நேரம் கிடைத்துள்ளது. இதிலே நீங்கள் வழர்த்த, வழர்க்கின்ற, வழர்க்கப்போகும் செல்லங்களின் சேட்டைகள், கூத்துக்கள், கொடுமைகள்:), விரும்பினால் பெயர் எல்லாம் வந்து சொல்லுங்கள். நானும் சொல்கிறேன்.

பூனையாரின் கதை
ஊரில் இருந்த காலத்தில் எப்பவுமே பூனையும் நாயும் வழர்ப்பதுண்டு. அனைத்துக்குமே, ஒரே பெயரைத்தான் வைப்போம் (பரம்பரைப்பெயர்போல்:)). வழர்க்கும் பூனை எல்லாத்துக்கும் ஒரே பெயர், அதேபோல் நாய் எல்லாத்துக்கும் ஒரே பெயர். ஒரே ஒரு பூனை மட்டும் மறக்கமுடியாமல் என் மனதிலே நிற்கிறது அதன் கதையை சொல்கிறேன்.

வெள்ளை நிறம். வயிற்றிலே பெரிய பிறவுண் வட்டம். பெரிய பூனை. கம்பீரமாக இருக்கும் பார்க்க. அதற்கு செல்லம் அதிகம். நான்தான் அதிகம் செல்லம் கொடுப்பேன். நான் ஈசி செயாரில் படுத்திருப்பேன், அவர் உடனே ஏறி என் மடியிலே படுத்து நல்ல நித்திரையாகி விடுவார். குழப்பக்கூடாதே என்று, நானும் எழும்பாமல் படுப்பேன். இரவில் என் கால் விறைத்துவிட்டதுபோல் கனவெல்லாம் வரும். விழித்துப் பார்ப்பேன், என் மேல், பெட் சீட்டின் மேலே பூனையார் படுத்திருப்பார். எப்படியோ கண்டு பிடிக்கும், நான் எங்கே படுத்திருக்கிறேன் என்று.

விடுமுறை நாட்களிலே, மதியம் சாப்பாடு முடிந்ததும், நாம் எல்லோரும் ஹோலிலே இருப்போம். நடுவிலே கீழே காப்பெட்டில் பூனையார், உடம்பை நீட்டியபடி
படுத்திருப்பார். கண்ணை மூடிக்கொண்டு, நாம் கதைப்பதைக் கேட்டபடியே படுத்திருப்பார். அவர் முழிப்பென்னது, வாலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வாலை இருபுறமும் ஆட்டிக்கொண்டே படுத்திருப்பார்.

அப்போ ஒரு ஹேம் வைப்போம், என்னவென்றால், ஒவ்வொருவராக பூனையின் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவோம். யாருக்கு பூனை, பதில் கொடுக்கிறது என்று பார்ப்போம். முதலில் ஒவ்வொருவராகா கூப்பிடுவார்கள், பூனையார், வாலை மட்டுமே பலமாக போட்டடித்தபடி படுப்பார்,சத்தம் செய்ய மாட்டார். கடைசியில் அண்ணன் சொல்வார், "சரி இப்போ அதிரா கூப்பிடு பார்க்கலாம்" என்று. உடனே நான் ஒரு தடவைதான் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன். உடனே,பூனையார் "ம்........................ .......................ம்" என்று பெரிதாக சொல்வார். எல்லோரும் சிரிப்பார்கள். அதற்குக் காரணம் நான் எப்பவுமே ஒரேமாதிரியே இருப்பேன். ஆனால் மற்றவர்கள் தமக்குப் பொழுது போகவில்லையென்றால் பூனையோடு தனகுவார்கள். மற்றும்படி பூனையைக் கிட்ட எடுக்க மாட்டார்கள்.

நான் அப்படியில்லை எப்பவுமே செல்லம் கொடுப்பேன். அதனால்தான் அதுவும் என்னுடன் செல்லமாக இருந்திருக்கலாம். இப்பவும் அந்த "ம்......" சத்தம் எனக்கு நினைவிலே நிற்கிறது.

சரி, நீங்களும் உங்கள் கதைகளை வந்து சொல்லுங்கள். நான் அடுத்த முறை, இமயவரம்பனின்(செல்லத்தின் பெயர்) கதையோடு வருகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா ஒரு காலத்தில் எங்கள் வீட்டு செல்லமாக ஒரு அணில் இருந்து வந்தது.புஸூ புஸுன்னு பார்க்க அழகாக இருக்கும்.நான் தினமும் ஜன்னல் கிட்ட போய் நின்றால் வந்துவிடும்.அதற்கு பழம் ,தானியம் போட்டால் கொறித்து விட்டு போகும்.அதன் போட்டோ கூட இருக்கு.ஊரில் போனால் எடுத்து பார்க்கணும்.நாங்கள் திருச்சியில் இருக்கும் போது பழகியது,பின்பு நாங்கள் சொந்த ஊர் போய்விட்டோம்.அதன் பின்பு எப்பவாவது அந்த அணில் நினைவு வரும்.இப்ப நீங்கள் என் செல்லத்தை நினைவு படுத்திவிட்டிர்கள்.அது பார்ப்பது இன்னும் என் கண்ணிற்குள் இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா நீங்கள் அடிக்கடி பூனை மூளைய யுஸ் பண்ணனோம் என்பீர்கள், இப்பதான் அதன் அர்த்தம் புரிந்தது.

நான் சிறுவயதில் வெங்காய கூண்டில் வைத்து இரண்டு கோழிஅது வீடு முழுவதும் குஞ்சி வளர்த்தேன். அது துள்ளி ஓடுவதை பார்க்க.எனக்கு ரொமப் பிடிக்கும்
இப்ப அதை ஞாபகப்படித்தி விட்டீர்கள்.

Jaleelakamal

ஆசியா உங்கள் அணில்க் கதையைக் கேட்க ஆசையாக இருக்கு. பழகிவிட்டால் எந்தப் பிராணியும் எம்மை விட்டுப் போகாது, எம் மனமும் மறக்காது.

ஜலீலாக்கா, சின்னனாக இருக்கும்போது எங்கள் வீட்டிலும் கோழிக்குஞ்சுகள் இருந்தது, நான் கையிலே வைத்து உணவூட்டிவிடுவேன்.ஊரிலேயே இருந்திருந்தாலும் எதனுடைய அருமையும் தெரிந்திருக்காது. வெளியே வந்தபின்னர்தான் தெரிகிறது. இங்கும் கோழிகள் வழர்க்கலாமாம். எனக்கு விருப்பம். எங்களுக்கு பின் காணி இருக்கு. ஆனால் அயலவர்களிடமிருந்து பெர்மிஷன் வாங்க வேண்டுமாம். ஏனெனில் காலையில் சேவல் கூவினால், அது அடுத்தவர்களை டிஸ்ரேப் பண்ணுமென்று.

பார்ப்போம், கொஞ்சக்காலம் போகட்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நாங்கள் வீடு கட்டிய சமயம் தளவாடச்சாமான்களை பாதுகாக்க வாட்ச்மேன் போட்டிருந்தோம்.அவர் தெருவில் உள்ள அழகான வெள்ளை நாயை வளர்த்து வந்தார்.அதனை அவரும் ராணி என்று கூப்பிடுவார்.நானும் அவ்வாறே கூப்பிட்டு வந்தேன்.அது நான் எப்பவாவது போகும் சமையம் வாலை ஆட்டும்.அதோடு நானும் மறந்துவிடுவேன்.வீடு கட்டி முடிந்து குடி போன பின்பு எப்பவும் விருந்தினர் வருகை.சாப்பிட்டுவிட்டு தினமும் இரவு எலும்பு துண்டுகளை வாசலுக்கு வரும் அந்த நாய்க்கு வைப்பேன்.இந்த நன்றிக்காக அந்த ராணியும் என் வீட்டை சுற்றி சுற்றி வரும்.ஒரு அதிசயம் என்னவென்றால் நான் கேட்டை மூடி விட்டு வெளியே கிளம்பினால் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து படுத்துகொள்ளும்.வீட்டை பாதுக்காக்கும்.நான் திரும்பி வந்து கேட்டை திறந்தால் வெளியே குதித்துோடி விடும்.உறவினர் வந்தாங்க.,நானும் பெருமையாக ராணியை பற்றி சொன்னேன்.அவங்களும் அதனை பார்த்துவிட்டு பயங்கரமாக சிரிச்சாங்க,நானும் ஏன் சிரிக்கிறீங்க என்று கேட்ட பின்பு இது ராணி இல்லை நல்ல பாரு ராஜா என்று சொன்னபோது தான் இத்தனை நாள் கவனிக்காமல் இருந்தது தெரிந்தது.வாட்ச்மேன் ்கூப்பிட்டவுடன் நானும் அவ்வாறே அழைத்தது நினைத்து சிரிப்பு வந்தது.இப்பவும் நான் ஊர் போனால் வரும்.ஆனால் மெலிந்துவிட்டது.பாவம் ராஜாவை யாரும் கவனிக்க வில்லையோ என்னவோ!
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எங்கள் வீட்டிலும் பரம்பரைப் பெயர் பழக்கம் முன்பு இருந்தது. அந்த விதத்தில் இருந்த டொமி (Tommy) கிழவனாகி இறந்து போக காவலுக்கு வேறு ஆள் தேட வேண்டி வந்தது.

என் குட்டி மாணவன் ஒருவர் டொமி மாதிரியே குப்பை மேட்டில் நின்ற ஒரு குட்டியைப் பிடித்து வந்தார். இது பெண். அப்படியே பேத்தைக் குஞ்சு மாதிரி இருந்தது. என் வீட்டுக் குட்டிகளுக்கு இதன் மேல் சட்டென்று பாசம் வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. திரும்பக் கொண்டு போய் விட முடியவில்லை.

இம்முறை அவர்களே பெயர் தெரிவு செய்ய விரும்பினார்கள். டொமி பிடிக்கவில்லையாம். ஆளுக்கொரு பெயர் இருக்க வேண்டும், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றார்கள். இறுதியாக வைத்த பெயர் யமி (Yummy). சாப்பாடு பிரச்சினையே இல்லை. குச்சி, கடதாசி என்று எதுவும் யமிதான். பிறந்த நாளிலிருந்து அதைத்தான் சாப்பிட்டு வளர்ந்திருக்கும் போல. பிற்பாடு அவரைப் பழக்கி எடுத்தோம்.

கடைசிக் காலத்தில் பார்வை கெட்டுப் போயிற்று. ஆயினும் யமி பாசமாக, விசுவாசமாக் கடைசிவரை இருந்து இறந்து போனது.

என்னிடம் நிறையக் கதைகள் இருக்கிறது அதிரா. அவ்வப்போது தவணை முறையில வந்து சொல்கிறேன்.

‍- இமா க்றிஸ்

இந்த இழையில் வரும் பதிவுகள் இனிக்கின்றன......

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நான் இப்போ 1 மாதம் முன்பு நாய் குட்டி வேண்டும் என அடம் பிடிது Pug puppy வாங்கினேன்.பெயர் bruno .2 மாதம் தான் அதன் வயது.1 கிழமைகு முதல் இரவு 10 மணி போல பெட் இல் இருந்து கீலெ விழுந்து அதனால் நடக முடியவில்லை.அழுது கொண்டே இருந்தது.எஙகலாலும் தூங்க முடியவிலை.ஆகையால்emergency எடுது சென்ரொம் .அங்கு பாது விட்டு kaal murrinthuvidathu emergency என்பதால் $1000 அகும் என கூறினார்கள்.பின்பு அடுத்த நாள் காலை வேறு ஒரு vet idam போனொம்..இனும் ஒரு 2 கிழமைஇல் அதன் கால் சரி அகிவிடும் யென கூறினார்.இபோ அதற்கும் health insurance வைது இருகிரோம்.puppy food குடுக சொலி குடுக சொல்லி vet சொன்னார்.but அது athai சாபிடமல் sapidamal fruits salad yelam எலலாம் nanraka சாபிடிகிரது.

இமா நலமா?சமைத்து அசத்தலாமில் விசாரிப்புக்கு மிக்க சந்தோஷம்.யமி பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஊரில் எங்கள் பக்கத்து வீட்டில் பப்பி என்று பொமரேனியன் நாய்குட்டி இருக்கு.எதிர் வீட்டில் ராபி என்று அல்ஷேசன் உண்டு.நாங்கள் வீடு கட்டி புதிதாய் குடி போன சமயம் ,நெய்பர் தோழிகள் இருவரும் காலேஜில் ப்ரபஸர்ஸ்.என்னை அறிமுகப்படுத்த அவர்கள் வீடு போய் அப்பா ,என்னை இந்த ராபியும்,பப்பியும் படுத்திய பாடு.பப்பி இன்னும் என்னை கண்டால் லொள் தான்,ஆனால் ராபி சிரிக்கும்.இந்த பப்பிக்கும் ராபிக்கும் காதல்.நான் இதனை நோட் பண்ணியதில் பப்பிக்கு கோபம்.அதன் பின்பு பப்பி என் வீட்டு பக்கம் போனால் வாக்கிங் போகும் போது லொள் ,ராபி வாக்கிங் போகும் போது நான் எப்பவும் வாச்லில் சிட் அவுட்டில் இருந்து பார்ப்பேன்.சிரிப்பது போலவே இருக்கும்.ராபி சிரித்தான்னு சொன்னால் எங்க வீட்டில் எல்லாரும் கேலி செய்வாங்க. இந்த டாபிக் ரொம்ப பிடித்திருக்கு நேரம் தான் இல்லை.இருந்தால் தினமும் செல்லங்களோட கதை எழுதுவேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்