ஐஸ்க்ரீம் குச்சி பென்ஸ்டாண்டு

தேதி: April 20, 2009

5
Average: 4.4 (8 votes)

 

ஐஸ்க்ரீம் குச்சி
சம்கி
பெவிக்கால்

 

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மூன்று ஐஸ்க்ரீம் குச்சியை படத்தில் காண்பித்திருப்பது போல் முக்கோணம் போல வைத்து பெவிக்காலைக் கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு அடுத்த வரிசை வைக்க, ஒரு குச்சியை ஏதாவது ஒரு முனையில் வைத்து அந்த குச்சியின் மற்றொரு முனையை சற்று தள்ளி வைத்து ஒட்டவும்.
இரண்டாவது குச்சியை வைக்கும் போது முதல் குச்சியின் முடிவில் நேராக வைத்து குச்சியின் எதிர் முனையை சற்று தள்ளி வைத்து ஒட்டவும். அதே போல் மூன்றாவது குச்சியை இரண்டாவது குச்சியின் முனையில் நேராக வைத்து ஒட்டி பிறகு அதன் எதிர் முனையை சற்று தள்ளி வைத்து ஒட்டவும்
இதை போல் சுற்றிலும் ஐஸ்க்ரீம் குச்சியை வைத்து பெவிக்காலால் ஒட்டி தேவையான அளவு உயரம் வரை செய்துக் கொள்ளவும்.
பின்னர் பென்ஸ்டாண்டை திருப்பி அடியில் அதன் துளைத் தெரியாமல் இருக்க ஐஸ்க்ரீம் குச்சிகளை வைத்து நெருக்கமாக ஒட்டி திருப்பிக் கொள்ளவும்.
இதை அலங்கரிக்க ஐஸ்க்ரீம் குச்சிகளின் ஓரங்களிலும் மற்றும் மேலே முதல் வரிசையில் இருக்கும் மூன்று குச்சிகளின் முழுவதிலும் சம்கியை வைத்து பெவிக்கால் தடவி ஒட்டவும்.
இப்போது ஐஸ்கிரீம் குச்சியைக் கொண்டு எளிதில் செய்யக்கூடிய ஸ்டாண்ட் ரெடி. இதில் நம் கற்பனை திறனுக்கேற்ப அலங்கரித்து, பூக்களை வைத்து பூ ஜாடியாகவும் பயன்படுத்தலாம். இந்த ஸ்டாண்டை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. தனலெஷ்மி அவர்கள். இவர் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் தனலக்ஷ்மி,
நம்பவே முடியவில்லை. :-) அதெப்படி என்னை மாதிரியே யோசிக்கிறீர்கள்?
இரண்டு வாரங்கள் முன்புதான் இது போல் நாற்கோண வடிவில் என் குட்டி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். பென்சில் ஸ்டான்ட் ஆகவும், சிறிய செடியோடு கூடிய பூச்சட்டிகளை வைப்பதற்கும் பயன்படுத்தினோம். நான் எளிமையாகத்தான் சொல்லிக் கொடுத்தேன். ஒரு மாணவர் மட்டும் நீங்கள் செய்தது போல் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். இப்போது விடுமுறை. எல்லோரும் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டார்கள். ஒருவர் மட்டும் தான் செய்ததை எனக்கே அன்புளிப்பாகத் தந்து விட்டார். :-) படம் எடுத்து அனுப்புகிறேன். பாருங்கள்.
தொடர்ந்து குறிப்புக்கள் கொடுங்கள். என் மாணவர்கட்குப் பொருத்தமானதாக இருந்தால் சொல்லிக் கொடுப்பேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

Wow........super......

அன்பே வாழ்வை வழமாக்கும்

அன்பே வாழ்வை வழமாக்கும்

திருமதி. இமா அவர்கள் தனது கற்பனைத் திறனில் உருவாக்கி, மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்த பென்ஸ்டாண்ட்டின் மாடல் இது. அவரது மாணவர் ஒருவர் இதை செய்து அவருக்கு கொடுத்துள்ளார்.

<img src="files/pictures/icecreamstick-penstand.jpg" alt="picture" />

இங்கு நான் அனுப்பிய படம், மற்றும் அது பற்றிய குறிப்பினை இணைத்ததற்கு மிக்க நன்றி அட்மின். :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta