வெஜ் சன்னா பிரட் சாண்விட்ச்

தேதி: April 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட், பீட்ரூட், உருளை துருவியது - 1 1/2 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்
தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
வேகவைத்த சன்னா - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
ப்ரெட் ஸ்லைஸ் - 6
வெண்ணெய் டோஸ்ட் செய்ய


 

பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.
பிறகு தக்காளியை கரையும் வரை வதக்கி காய்களை போட்டு வதக்கவும்.
காய்கள் பாதி வெந்ததும், மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு போட்டு காய்கள் மசியும் வரை வேக வைக்கவும்.
சன்னாவை தண்ணீர் வடித்து மிக்ஸியில் அரைத்து காயில் சேர்க்கவும். எல்லா கலவையும் ஒன்றாகும்படி கிளறி விடவும்.
மிகவும் ட்ரையாக இல்லாமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்க்கவும். ப்ரெட்டில் இந்த கலவையை தடவி, இன்னொரு ப்ரெட்டால் மூடி விட்டு சிறிது வெண்ணெய் போட்டு டோஸ்ட் செய்யவும்.


இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரம் குறைத்தும் போடலாம், காய்கள் நைசாக துருவி இருந்தால் சீக்கரம் வேகும், வாயிலும் தட்டுபடாது, தனித்தனி காய்களாகவும் போட்டு செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ரேணுகா உங்களுடைய குறிப்பில் வெஜ் சன்னா பிரட் சாண்விச் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் ரேணு,

இந்த வெஜ் சன்னா சாண்ட்விச் இன்று காலை செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. ஒன்னு சாப்பிடும்போதே நல்லா பில்லிங்கா இருக்கு. ஆக்சுவலா இது குழந்தைங்க லன்ச் பாக்ஸ்க்கு நல்லதொரு ஐடியாவாவும் இருக்கு. (காரம் மட்டும் கொஞ்சம் பிள்ளைகளுக்கு ஏற்றார்ப்போல் குறைத்து போட்டுக்கொள்ள வேண்டும்.) நல்ல சத்தான, சுவையான சாண்ட்விச்! குறிப்புக்கு ரொம்ப நன்றி ரேணு!.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

துஷ்யந்தி நான் இப்ப தான் பார்த்தேன் உங்க பதிவை,தாமதமானதுக்கு மன்னிக்கவும்,உங்கள் பின்னுட்டத்திற்க்கு மிக்க நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஸ்ரீ இதை அவசரமா ஒரு நாள் செய்தேன் இருப்பதை யெல்லாம் போட்டேன்,சன்னா இருந்தது அதையும் போட்டேன்,டேஸ்ட் ரெம்ப நல்லா இருந்தது,பையனுக்கு ஸ்கூலுக்கு இது தான் கொடுப்பேன்,அவனும் இது தான் கேட்பான்,ஆனால் இதில் இருப்பது காய்ன்னு தெரியாது
பிரட்டில் ரெட் கலரா ஒன்னு வைச்சு டோஸ்ட் பன்னிதா என்று சும்மா சொல்லுவான்,உங்க பின்னுட்டத்திற்க்கு நன்றி ஸ்ரீ

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா