சன்னா மசாலா

தேதி: April 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

சன்னா - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 3 ஸ்பூன்
தாளித்து வதக்கி அரைக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - 1
வெங்காயம் - 2
தக்காளி - 2 பெரியது
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்


 

சன்னாவை ஊறவைத்து உப்பு போட்டு வேகவைக்கவும்.
சிறிது எண்ணெயில் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, மல்லி, மிளகாய் தூள்கள், உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி ஆறவைக்கவும்,
ஆறவைத்ததை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சன்னாவையும், அரைத்த கலவையையும் ஒன்று சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு தயிர் சேர்த்து குருமா திக் ஆனதும் இறக்கவும் சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Romba easya irruku..taste agavum irrunthathu...
Thank you for ur recipe..
Nan kadaisiyil chenna masala thool serthen...

Sujitha

ஹாய் ரேணுகா சன்னா மசாலா செய்வதற்கு எளிதாகவும் சுவையாகவும் மணமாகவும் இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அனாமிகா உண்மையில் இது ரெம்பவும் ஈசி தான்,உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி,மிக்க நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா