KFC சிக்கன்

தேதி: April 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (9 votes)

 

ஊறவைக்க:
சிக்கன் எலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள் போட்டது)(அ) லெக் பீஸ் - ஒரு கிலோ
வெங்காயம் பெரியது - ஒன்று
பெரிய தக்காளி - ஒன்று
இஞ்சி - மூன்று அங்குல துண்டு
பூண்டு - ஆறு பல்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
டிப் செய்து பொரிக்க:
மைதா - ஒரு கப்
கார்ன் ஃப்ளார் மாவு - கால் கப்
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் + பட்டர் - பொரிக்க தேவையான அளவு


 

சிக்கனை கழுவி சுத்தம் செய்து அதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளியை அரைத்து கலந்து பேக்கிங் பவுடர் கலந்து சிக்கன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய சிக்கனை நன்கு தண்ணீர் வடித்து விட்டு வைக்கவும்.
டிப் செய்ய கொடுத்துள்ளவைகளை கலந்து அதில் வடித்த சிக்கனில் லேசாக எல்லா இடத்திலும் படும்படி டிப் செய்து எண்ணெய் + பட்டர் இரண்டையும் சூடுப்படுத்தி தீயை மிதமாக வைத்து பொரித்து எடுக்கவும்.
பொரிக்கும் போது தீயை மீடியமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய விட்டு பிறகு தீயை ஹையில் வைத்து பொரித்து எடுக்கவும்.


இது என் ருசிக்கேற்ப நான் செய்தது, ஓரளவிற்கு அந்த டேஸ்ட் வருது. நீங்களும் செய்து பாருங்கள்
இது நான் நான்கு ஐந்து முறை செய்து பார்த்தாச்சு, இந்தியன் மசாலா சேர்த்தும் செய்து பார்த்தேன் ஓரளவிற்கு நல்ல வந்தது நீங்களும் சுவைத்து மகிழுங்கள். எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சி போச்சி, மசாலா வகைகள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூட சேர்த்து கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று என் மகன் ஊருக்கு போவதால் அவனுக்கு KFC சிக்கன் செய்து கொடுத்தேன். அவனுக்கு காது வரை பல் தெரிந்த்தது :-) மிக்க நன்றி.

லதா ஹைஷ்

இப்படிக்கு
லதா

வாங்க லதாஹைஷ்126

காது வரை பல் தெரிந்தது ஒகே நல்ல இருந்ததா? டேஸ்ட் எப்படி இருந்தது. என்ன இப்படி கேட்கிறீங்க என்று கேட்கவேண்டாம். ஏன்னா இது புதுசா டிரை செய்தது, என் பையனும் ஊருக்கு போகிறான் அவனுக்காதான் இதை செய்தது. அவனுக்கும் அப்படிதான் காது வரை பல் தெரிந்தது அதான் கேட்டேன்.
வந்ததும் உடனே செய்து பார்த்து விட்டீர்களா?

அன்பு தோழியே உடனே பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

Jaleelakamal

திருமதி செல்வம் பார்த்துட்டு இப்பதான் உங்க பதிவை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்த்து. நேரம் இன்மையால் 1 ½ மணிநேரம்தான் ஊறவைத்தேன். என் சின்ன மாமியாருக்கு சூடாக கொடுதவுடன் மிகவும் சந்தோஷப்பட்டு “லேயர் லேயரா இந்த சிக்கன் வருதுமா” என்று சொன்னார்கள். நன்றி. நான் இங்கு ஏப்பரல் 17 வந்தேன்.

லதா ஹைஷ்

இப்படிக்கு
லதா

லதா உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி

Jaleelakamal

டியர் யோக ராணி KFC சிக்கன் செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி, சமையலில் 20 வருடம் போட்டு இருக்கிறீர்கள், உங்கள் சுவையான சமையலையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?

Jaleelakamal

இன்று KFG சிக்கன் செய்தேன். என் கணவன் வேலையால் வந்து சாப்பிட்டுவிட்டு அகா என்ன ருசி, என்ன உண் கைவரிசை என பாராட்டினார்.அந்த பாராட்டேலாம் உங்களுக்குத்தான் பானு மிகவும் நன்றி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

எப்படி இருக்கீங்க ஜலீலா?இதிலேயே ஒரு சில மாற்றங்களுடன் நானும் செய்துள்ளேன்ங்க.நன்றாக இருக்கும்.முதலில் உங்கள் அசாத்தலான சமையல் தொகுப்புக்கு பாராட்டும்,வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்.நானும் துபை தாங்க.நீங்க எங்கே இருக்கீங்க?முக்கியமா நம்ம சொந்த ஊரு எதுங்க?ஏன் கேட்கிறேன்னா,இந்த அருசுவையில் சேர்ந்ததும் நம்ம ஊரு ஐயிட்டம் இது பண்ணுவோமா,அது பண்ணுவோமண்ணு பார்த்தா எல்லாம் வந்திருக்கு.பேரை பார்த்தா தங்களுடையதா இருக்கு.அப்படியே முக்கால் வாசி செய்முறையெல்லாம் நாங்கள் செய்வதுப் போலவே உள்ளது.பெருமையாக இருந்தது.தற்போதுதான் தங்கள் முழு விவரத்தையும் பார்த்தேன். நீங்க வேலைக்கு போறிங்களா?இவ்வளவு சமையலை தெரிந்துக்கொண்டு,வேலைக்கும் போய்க்கோண்டு இந்த அருசுவையிலும் உங்கள் பங்கை அளிப்பது என்னை பொறுத்தவரை ரொம்ப பெரிய விஷயம்ங்க.அதான் பாராட்டணும் என்று தோணுச்சி.அதான் சொல்லிட்டேன்.தாங்கள் விருப்ப பட்டால் தங்களை பற்றி சொல்லலாம்.நட்பும் தொடரலாம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

டியர் அப்சாரா உங்கள் பாராட்டுக்கு நனறி, நான் சென்னை தான் ஏற்கனவே பழைய மன்றத்தை ஒரு வலம் வாஙக் என்னை பற்றி எல்லாம் தெரியும்.

உங்களுக்கு பதில் போட்டு அது பதிவாக வே இல்லை அருசுவை முன்று மாத காலமாக பதிவுகள் ஏதும் பார்க்க முடியல‌

KFC செய்து பார்த்து பின்னூட்டத்திற்கு நன்றி

Jaleelakamal