முதல் நாள் பள்ளி சென்ற குழந்தை

தோழிகளே புலம்பி புலம்பி ஒருவழியாக சன்டே முதல் என் 3 வயது மகளும் ப்ரீஸ்கூல் போகிறாள்...ரெண்டு நாளா இதை நினைத்து எனக்கு தூக்கமும் இல்லை எதிலும் கவனமும் இல்லை பித்துபிடித்தது போல உள்ளது.
கெ ஜி 1 சேர்க்க சொன்னார்கள் எனக்கு விருப்பம் இல்லை 4 வயதில் கெஜி போனால் போதும் என்று நர்சரி விட முடிவு செய்தேன்.
பலபல டென்ஷனும் வந்து மண்டையெல்லாம் வெடிக்கிறது
1)ட்ரான்ஸ்போர்டேஷன் ஸ்கூல் vanல் தான் செல்ல வேண்டும்..சின்ன பிள்ளையை ஏற்றி விட்டு எப்படி பார்க்கநிம்மதியா இருக்க போகிறேனோ கடவுளுக்கு வெளிச்சம்..கொண்டு விட என் கணவரால் சில நாட்களே முடியும் மற்ற நாள் டேக்சியில் தினசரி கொண்டு விடுவதும் சாதியமில்லை
2)ஸ்கூளில் பிள்ளைகள் முரண்டு பிடித்தால் எதுவும் செய்துவிடுவார்களோ என்று ஒரே பயமாக உள்ளது..என் மகள் யார் அடித்தாலும் கூட என்னிடம் சொல்ல மாட்டாள் அதான் பயமே ..வீட்டில் இங்கு வா என்றால் வந்ததாக சரித்திரமே இல்லை வா என்றால் அதற்கு எதிர்திசையில் ஓடத் தான் செய்வாள் அவர்கள் இது போல் செய்தால் பொறுமையாக பார்த்துக் கொள்வார்களா
எல்லாத்துக்கும் பதிலும் யோசித்து நானே சமாதானப்பட்டாலும் திரும்ப திரும்ப இதே யோசனை.ஸ்கூலுக்கு போகிறேன் எஙிறாள் ஆனால் தனியாக தான் போக வேண்டும் நான் வரமாட்டேன் என்றால் முழித்துக் கொண்டு அப்போ நான் கத்துவேன் என்று பயமுறுத்துகிறாள்..எங்கிருந்தோ கற்றுக் கொண்டாளோ தெரியவில்லை டீச்சர் என்னை அடிப்பாங்க எங்கிறாள்
இதெல்லாம் வேண்டாத பயம் தான் இருந்தாலும் என்னைப் போல எல்லா தாய்மார்களும் இப்படி தான் தவித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..உங்கள் பிள்ளையை முதன்முதலாக அனுப்பின அனுபவம் அதன்பிறகு நீங்கள் நிம்மதியாக இருந்தது எப்பொழுது எல்லாம் சொல்லி என்னை தேற்றி விடுங்கள்:-)..அதிரா சொன்னது இன்னும் வரிவரியாக என் மனதில் நிற்கிறது

தளிகா அக்கா,

நலமா? நான் இந்த விஷயத்தில் அனுபவபடவில்லை எனினும் லின்க்கை தக்க வைப்பதற்காக இந்த சின்ன பதிவு.

அனைவரின் குறிப்புகளும் அருமை.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மர்லி சில குழந்தைகள் சாப்பிடும், சில பேர் அபப்டி தான் அப்படியே பத்திரமா கொண்டு வருவார்கள்.
அது போக போக தான் பழகும், காலையில் பால் பிடித்தால் கொடுஙக்ள், இல்லை ஒரு முட்டை அவித்து சாப்பிடவைத்து அனுப்புங்கள்.

டிபனில் பழங்கள் வைத்து அனுப்புங்கள்.

தினம் சொல்லி கொண்டே இருக்கனும், எல்லோரும் சாப்பிடும் போது இத எடுத்து சாப்பிடனும் என்று,.

பரவாயிலலி டிபன் பாக்ஸை அப்படியே கொண்டு வந்தாலே.

சில குழந்தைகள் தினம் ஒரு டிபன் பாக்ஸ், வாட்டர் கேன் மறந்துகிளாசிலேயே வைத்து விட்டு வருவார்கள்.

பிற்கு மீதி எழுதுகிறேன்.

என்ன‌ ரொம்ப‌ விரும்பி சாப்பிடுவாலோ அதை க‌ண்டிப்பா வையுங‌க்ள்.

Jaleelakamal

அக்கா 15 நாளைக்கு ஒரு பாக்ஸ்,3 நாளைக்கு ஒரு ஸ்பூன் அல்லது ஃபோர்க் அதோட வாட்டர் பாட்டில் எல்லாமே தொலச்சுட்டு வாரா!

அதுல நான் சொல்ல வந்தது எதுமே சாப்டுறதில்லைன்னதை அப்படி போட்டு இருக்கேன்

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

இந்த இழையைத்தான் போன வாரத்தில் இருந்து தேடிட்டு இருக்கேன்,இப்ப தான் ஒரு வழியா கண்டுபிடிச்சேன்... என் பொண்ணுக்கு 2 1/4 வயசு ஆகுது..போன வியாழக்கிழமைல இருந்து ப்ளே ஸ்கூல் அனுப்பறோம்,வாரத்தில் 2 நாட்கள் தான், 9 - 1 மணி வரை...சோ, இது வரை முதல் நாள் அனுபவம் மட்டும் தான், ரொம்ம்ம்பவே நல்லா இருந்தது,என் பொண்ணு நான் நினைச்சதை விட ரொம்பவே அழுதுட்டா :( நான் ஸ்கூல் கொண்டு போய் விடும்போது நல்லா தெளிவாத் தான் இருந்தா,திரும்ப 10 மணிக்கு ஒரு முறை போய் பார்த்தேன், அப்பவும் விளையாண்டுட்டு தான் இருந்தா,ஒரு நிம்மதி பெருமூச்சுடன் வீடு வந்து சேர்ந்தேன், ஆனால் வீடு வீடாவே இல்ல, ரொம்பவும் தனிமையை உணர்ந்தேன், வீட்டில் இருந்தால் இப்படி சொல்வாளே,அப்ப்டி சொல்வாளேன்னு ஒரே நியாபகமாவே இருந்தது.. திரும்ப 1 மணிக்கு கூப்பிட போனால், அழுகைன்னா அழுகை அப்படி அழுதுட்டு இருக்கா, எனக்கு உடம்பெல்லாம் பதறி போச்சு, அவங்க மிஸ்-ட்ட கேட்டதுக்கு “கொஞ்சம் அப்படியும் இப்படியுமாத்தான் இருந்தா” அப்படின்னு சொன்னாங்க.... கொடுத்து விட்ட ஸ்னாக்ஸ், லஞ்ச் எதையும் துளி கூட தொடல... ஏன் தண்ணி கூட ஒரு சொட்டு குடிக்கலை, அவங்க அட்லீஸ்ட் தண்ணியாவது குடிக்க வச்சிருக்கலாம்... அவளுக்குரிய இடத்திற்கு வந்து உட்கார்ந்து சாப்பிட சொன்னாங்களாம்,என் பொண்ணுக்கு அது பொறுக்கலை,அதுக்கு அழ ஆரம்பிச்சது தானாம், அப்புறம் ரொம்பவே நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாளாம்.... நான் போய் தூக்கினதும் வீட்டுக்கு போகணும்னு ஒரே அழுகை... இப்படியாக என் பொண்ணோட முதல் நாள் பள்ளி அனுபவம் அழுகையா முடிஞ்சது.

இந்த இழை 2 வருடத்துக்கு முந்தையது இல்லையா? அதனால் இப்ப அவங்கவங்க பிள்ளைங்கல முதன்முதலா ஸ்கூல் அனுப்புறவங்க வந்து பதிவுகள் போட்டு அனுபவத்தையும் பகிர்ந்துகிட்டா ரொம்ப உபயோகமா இருக்கும்...

இந்த இழை படிச்சதும் எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு,என் பொண்ணும் போக போக பழகிடுவான்னு... அப்புறம் இன்னொரு விஷயம், என் பொண்ணை வீட்டில் சாப்பிட வைப்பது ஒன்னும் அவ்வளவு கஷ்டமில்ல, ஆனால் ஸ்கூல் போனா அவளா எப்படி சாப்பிடுவான்னு எனக்கு சந்தேகமும் கவலையுமா இருக்கு..அவளுக்கு ஸ்னாக்ஸும், லஞ்ச்-ம் குடுத்து விடணும்...முதல் நாள் சாப்பிடலைன்றதுக்காக மட்டும் கேட்கலை, பொதுவாகவே அவளா சாப்பிட்றது கஷ்டம் தான்... அவள் ஸ்கூலில் போய் சாப்பிட ஐடியா குடுங்களேன், இந்த வயதில் அவங்களுக்கு சொன்னாலும் புரியாது இல்லயா? எப்படி புரிய வைப்பது? தளிகா பொண்ணு மாதிரி தான் நம்ம வீட்டு சாப்பாடுன்னா நல்லா சாப்பிடுவா, வெளில எதுவும் சாப்பிட மாட்டா... சாண்ட்விச் கூட சாப்பிட மாட்டா... சில உணவுகள் சாப்பிட மாட்டான்றத விட, அதை ட்ரை கூட பண்றது கிடையாது, நான் முயற்சி செஞ்சாலும் கிடைக்கிற பதில் “நோஓஓ” தான்.... இதுக்கு அனுபவமுள்ள தாய்மார்கள் தான் பதில் சொல்லணும்... திரும்பவும் நாளைக்கு அனுப்பணும், எனக்கு இதே யோசனையாத்தான் இருக்கு எப்பவுமே.....பலரின் அனுபவத்தையும்,பதிலையும் ஆவலா எதிர்பார்க்கிறேன்

அனேக அன்புடன்
ஜெயந்தி

என்ன ஆச்சு தோழீஸ் உங்க எல்லோருக்கும்? எத்தனையோ இழைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் குடுத்து போட்டி போட்டு பதிவு போட்டிருக்கீங்க? என்னுடைய இந்த பதிவுக்கு பதில் போட ஒருத்தருமே இல்லயா? நேற்று நைட் பதிவு போட்டு காலையில வந்து பார்த்தா ஒரு பதில் கூட இல்ல, முகப்பில் கூட இந்த தலைப்பு பின்னுக்கு தள்ளப்படும் அளவுக்கு பல பதிவுகளும் இழைகளும் வந்திடுச்சு... அரட்டைக்கு முக்கியத்துவம் குடுக்கும் தோழிகள் இதையும் கொஞ்சம் கவனிக்கலாமே... வெளிநாட்டில் தனியாய் கஷ்டப்படும் என் போன்ற தாய்மார்களுக்கு உங்களை போன்றவர்களின் ஆலோசனை தான் ஒரு வழிகாட்டியா இருக்கு....

அனேக அன்புடன்
ஜெயந்தி

ஜெயந்தி உங்களுக்கு பதில் போடணும் என்று நான் நேற்றே நினைத்தேன்.....நேரமில்லை அதான்.....ரொம்ப பெரிய பதிவு...நேரமாகும்....கொஞ்சம் வேலை இருக்கிறது...முடித்து விட்டு வந்து கட்டாயம் பதில் போடுகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Hi da wat doing

நன்றி லாவண்யா எனக்கு பதிவு போடணும்னு நினைச்சதுக்கு.... உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது போடுங்க, பெரிய்ய்ய்ய பதிவுன்னு சொல்லிருக்கீங்க,ஆவலா எதிர்பார்க்கிறேன். என்னோட பதிவு உங்க ஒருத்தர் கண்ணிலாவது பட்டதேன்னு கொஞ்சம் ஆறுதலா இருக்கு

அனேக அன்புடன்
ஜெயந்தி

நானும் இது பற்றி எழுதலாம்ன்னா... பெரிசா ஒன்னும் இல்ல.........
ஜெயந்தி, லாவண்யா.... உங்க அனுபவம் எல்லாம் வேறன்னு நினைக்கிறேன். ஜெயந்தி நானும் பார்த்தேன் உங்க பதிவை ஆனா எனக்கு நேரம் இல்லை பதில் போட!!!

என் பையன் ஒரே அழுகை தான்.... அதிகமா அழுதா கத்தி வாமிட் பண்ணுவான்... பிறகு தாமே சமாதானம் ஆகிறதுன்னு போகும் கதை... இது கடைசி வரை (இரண்டு வயது முதல் மூன்றரை வயது வரை) தொடர்ந்தது.
இப்போ சம்மர் ஹாலிடேசுக்கு பிறகு நாளை முதல் (Spet 1st - Pre KG) தொடங்குகிறது. கண்டிப்பாக இந்த இழை உள்ளே போகலைன்னா........ முக்கியமா எனக்கு டைம் இருந்தால் எழுதறேன்.

நாம் நம் குழந்தைகள் பெரியவர்கள் ஆனவுடன் அவர்களிடம் இதெல்லாம் சொல்ல வேண்டும் என்று பெரிய லிஸ்ட்டே வைத்திருப்போம், அதில் கண்டிப்பாக அவர்களின் முதல் நாள் பள்ளி சென்ற அனுபவமும் இருக்கு. அனுப்பும் போது எவ்வளவு வேதனைகள் வலிகள் இருந்ததோ அதெல்லாம் மறைந்துபோய் அது ஒரு பசுமையான நினைவாகி விடும்.

என் கணவரும் நானும் சேர்ந்து என் மகளை பள்ளிக்கு அனுப்பி விடுவது என்று முடிவு செய்தோம்......இருந்தாலும் என் மனதிற்குள் அதுக்குல்லாகவே அனுப்ப வேண்டுமா (இரண்டே கால்) என்ற பட்டி மன்றம் நடந்தது.......அவளை பள்ளிக்கு அனுப்பனும் என்று நான் தான் எப்பொழுதுமே விளையாட்டாக சொல்லிக் கொண்டே இருப்பேன்.....(என்னால் அவளின் அட்டகாசம் வீட்டில் தாங்க முடியவில்லை)...சரி போகட்டும் என்று முடிவு செய்து பல பள்ளிகளை தேடி பிடித்து கடைசியில் இரண்டை மட்டுமே தேர்வு செய்து டூர் ஒன்றுக்கு புக் செய்தோம். முதலில் ஒரு பள்ளிக்கு சென்றோம் அங்கே அவர்கள் எங்களுக்கு அவர்களின் கல்வி கற்பிக்கும் முறை, அவர்கள் சாப்பிடும் இடம், விளையாடும் இடம், என்னென்ன வைத்து விளையாடுவார்கள் எப்படி சொல்லிக்கொடுப்பார்கள், ஒருவேளை குழந்தை சொல்வதை கேட்கவில்லை என்றால் என்ன செய்வார்கள், எங்கே சிறுநீர் கழிக்க வேண்டும், எங்கே தூங்குவார்கள் என்று எல்லாத்தையும் காட்டி விளக்கினார்கள். எனக்கு அப்படியே கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. எல்லாம் குட்டி குட்டியாக அழகாக இருந்தது. இருந்தாலும் நம் பிள்ளை சொல்வதை கேட்ப்பாளா என்று தான் என்னையே நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். பிறகு அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்றேன்...அதற்க்கு அவர்கள் அதெல்லாம் அவர்கள் நன்றாக பிக் அப் பண்ணி விடுவார்கள் என்றனர். பள்ளியில் சேர்க்கும் போது அவர்கள் கண்டிப்பாக முழுமையாக பொட்டி ட்ரைண்டு ஆக இருக்க வேண்டும் என்றார்கள். அவர்கள் என்னிடம் எல்லாத்தையும் விளக்கி சொல்லும் போது என் மகள் அங்குள்ள விளையாட்டு பொருட்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்...பார்க்கவே ஆசையாக இருந்தது. அதனால் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் பூம் பூம் மாடு போல தலை ஆட்டி வைத்தேன். பிறகு அவர்களுடன் எனக்கு பதினைந்து நாட்கள் டைம் வேண்டும்...அதன் பிறகு சேர்க்கிறேன் என்று சொல்லி விட்டு சென்றேன். (இந்த இடத்தில் என் மகள் விளையாடியதை பார்த்த வுடன் அவளிடம் கேட்டேன்....உனக்கு இங்கே பிடித்திருக்கிறதா என்றேன்....அவளும் சிரித்துக் கொண்டே உம் என்றால்...அதனால் மற்ற பள்ளியை போய் கூட பார்க்கவில்லை). பதினைந்து நாள் அவள் பூப்பி சென்றவுடன் அவளையே கிளீன் பண்ண செய்தேன்....அது ஒன்றும் சரியாக வருவதாக தெரியவில்லை. சரி என்று நானே செய்தேன்.

இந்த இடைப்பட்ட நாளில் அவளிடம் அடிக்கடி நாம் அங்கே போனோமே நீ கூட அந்த டாய்ஸ் எல்லாம் வைத்து விளையாடினாயே அங்கே போலாமா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்...அவளும் சரி சரி போகலாம் என்று சொல்லுவாள். சரி என் மகள் பள்ளிக்கு தயார் என்று என் மனது ஓரளவுக்கு சமாதானம் ஆனது. நாள் வர வர ஏதோ கடைசி தேர்வு அதை வைத்து தான் நம் தலையெழுத்தே என்பது போல் அவளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றாலே வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவே ஒரு உருண்டை ஓடும். அவளுக்கு பர்புள் என்றால் ரொம்பவே பிடிக்கும் அதனால் எல்லாம் பர்புள் நிறத்தில் வாங்கியாச்சு. அவளை பள்ளிக்கு அனுப்பும் நாளும் நெருங்கியது. அப்பொழுது பார்த்து என் கணவருக்கு வேறு ஒரு ஊருக்கு மாற்றுதல். அதனால் அவரால் கொண்டு விட முடியாது நான் தான் விட வேண்டும். ஒரு மயிலுக்கும் குறைவான தூரம் தான்....அதனால் ஸ்ட்ராலரிலே போய் வருவது என்று தீர்மானித்தேன்.

அவளை பள்ளிக்கு அனுப்பும் நாளும் வந்தது. அவளை எட்டரைக்கு தான் அனுப்ப வேணும். நான் அவளை இப்பொழுது எழுப்பலாமா இல்லை அப்போவா என்று தடுமாறி (பாவம் குழந்தை இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கட்டுமே....இனி இப்படி அவளால் முடியாதே....என்று எனக்கு அவளை எழுப்பவே மனம் இல்லை....இருந்தாலும் அனுப்பனுமே) ஒருவழியாக ஏழரைக்கு எழுப்பினேன். அவளும் எதற்க்காக அம்மா இவ்வளவு சீக்கிரம் எழுப்பினார்கள் என்று கேட்பதற்குள் அவளை கூட்டிக் கொண்டு போய் பல் தேய்த்து குளிப்பாட்டி புது டிரஸ் போட்டு விட்டேன். அன்னைக்கு போன இடத்திற்கு நாம் இன்று போக போறோம் என்றேன்.....அவளுடைய முகத்தில் ஒரு மாறுதல். இத்தனை நாள் போலாம் என்றவள் இப்பொழுது ஒரு மாதிரி முழித்தாள் இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. முதல் நாள் என்பதால் அவளுக்கு காலை உணவு கூட கொடுக்க முடியவில்லை......பாலும் சரியாக குடித்திருக்கவில்லை. அப்படியே உட்க்கார வைத்துக் கொண்டு போனேன். போகும் போது ரைம்ஸ் பாடிக் கொண்டே ஒரு வழியாக போய் சேர்ந்தோம். போனதும் அவர்களது வெட்டிங் ரூம்மிற்கு கொண்டு சென்றேன். அங்கே குழந்தைகள் சிலர் எழுதிக் கொண்டிருதார்கள், சிலர் வரைந்துக் கொண்டிருந்தார்கள், சிலது அழுதுக் கொண்டிருந்தது. அவளுக்கு பார்த்ததும் புரிந்து விட்டது போலும்....சிணுங்க ஆரம்பித்தாள்...நானும் ஏன் அழற என்றேன்.....சரி என்று அவளை சிறிது நேரம் சமாதானம் சொல்லி க்ராயான் கொடுத்து நான் இப்போ போயிட்டு கொஞ்சம் நேரம் கழித்து வந்து கூட்டி செல்கிறேன் என்றது தான் தாமதம் என் கழுத்தை இருக்க கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்தாள். என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது....இருந்தாலும் அவளை சமாதானம் சொல்லப் பார்த்தேன்.....முடியலை....அவள் அழுகை நிற்பதாக தெரியவில்லை. அவளின் டீச்சர் வந்து நீங்கள் இங்கேயே இருந்தால் அவள் சமாதானம் ஆக மாட்டாள் அதனால் நீங்கள் செல்லுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள்....நான் போகாமல் நின்றேன்.....பிறகு அவர்கள் சொன்னார்கள் அவள் சிறிது நேரம் அழுவாள் பிறகு நிறுத்தி விடுவாள்.....எல்லா குழந்தையும் அப்படி தான்....நாங்கள் இருக்கிறோம்....நீங்கள் கிளம்புங்கள் என்றனர்...அதற்க்கு மேல் நிற்காமல் அவளை ஒரு டீச்சர் தூக்கி கொண்டு போக நான் அப்படியே வெளியே வந்தேன். அந்த தருணம் இப்போ நினைத்தால் கூட ......வெளியே வந்தும் அவளின் சத்ஹம் கேட்டுக் கொண்டே இருந்தது. மனது கேளாமல் வேகமாக நடந்து வீட்டிற்கு போனால் வீட்டில் என்னவோ குறையாகவே இருந்தது. ஒரு வேலையும் செய்யாமல் அப்படியே கவுச்சில் உட்கார்ந்து கடிகாரத்தையே முறைத்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தேன்.....

இப்போவே ரொம்ப நேரம் ஆச்சு.....மீதியை நாளை வந்து போடுகிறேன்....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்