முதல் நாள் பள்ளி சென்ற குழந்தை

தோழிகளே புலம்பி புலம்பி ஒருவழியாக சன்டே முதல் என் 3 வயது மகளும் ப்ரீஸ்கூல் போகிறாள்...ரெண்டு நாளா இதை நினைத்து எனக்கு தூக்கமும் இல்லை எதிலும் கவனமும் இல்லை பித்துபிடித்தது போல உள்ளது.
கெ ஜி 1 சேர்க்க சொன்னார்கள் எனக்கு விருப்பம் இல்லை 4 வயதில் கெஜி போனால் போதும் என்று நர்சரி விட முடிவு செய்தேன்.
பலபல டென்ஷனும் வந்து மண்டையெல்லாம் வெடிக்கிறது
1)ட்ரான்ஸ்போர்டேஷன் ஸ்கூல் vanல் தான் செல்ல வேண்டும்..சின்ன பிள்ளையை ஏற்றி விட்டு எப்படி பார்க்கநிம்மதியா இருக்க போகிறேனோ கடவுளுக்கு வெளிச்சம்..கொண்டு விட என் கணவரால் சில நாட்களே முடியும் மற்ற நாள் டேக்சியில் தினசரி கொண்டு விடுவதும் சாதியமில்லை
2)ஸ்கூளில் பிள்ளைகள் முரண்டு பிடித்தால் எதுவும் செய்துவிடுவார்களோ என்று ஒரே பயமாக உள்ளது..என் மகள் யார் அடித்தாலும் கூட என்னிடம் சொல்ல மாட்டாள் அதான் பயமே ..வீட்டில் இங்கு வா என்றால் வந்ததாக சரித்திரமே இல்லை வா என்றால் அதற்கு எதிர்திசையில் ஓடத் தான் செய்வாள் அவர்கள் இது போல் செய்தால் பொறுமையாக பார்த்துக் கொள்வார்களா
எல்லாத்துக்கும் பதிலும் யோசித்து நானே சமாதானப்பட்டாலும் திரும்ப திரும்ப இதே யோசனை.ஸ்கூலுக்கு போகிறேன் எஙிறாள் ஆனால் தனியாக தான் போக வேண்டும் நான் வரமாட்டேன் என்றால் முழித்துக் கொண்டு அப்போ நான் கத்துவேன் என்று பயமுறுத்துகிறாள்..எங்கிருந்தோ கற்றுக் கொண்டாளோ தெரியவில்லை டீச்சர் என்னை அடிப்பாங்க எங்கிறாள்
இதெல்லாம் வேண்டாத பயம் தான் இருந்தாலும் என்னைப் போல எல்லா தாய்மார்களும் இப்படி தான் தவித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..உங்கள் பிள்ளையை முதன்முதலாக அனுப்பின அனுபவம் அதன்பிறகு நீங்கள் நிம்மதியாக இருந்தது எப்பொழுது எல்லாம் சொல்லி என்னை தேற்றி விடுங்கள்:-)..அதிரா சொன்னது இன்னும் வரிவரியாக என் மனதில் நிற்கிறது

ஹாய் தோழீஸ்......ஜெயந்தி.......நான் எங்க பாப்பாவை 1 1/2 வயதிலேயே எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ப்ளே ஸ்கூலில் தினமும் ஒரு மணி நேரம் விட்டுப் பழக்கினேன். எங்க அம்மா, மாமியார், உறவினர்கள் என் அனைவரும் வெளியூரில் இருப்பதால் அவள் தனிமையை அதிகம் விரும்பாததால் தினமும் அந்த ப்ளே ஸ்கூலிற்கு அழைத்துச்சென்று விளையாட விடுவேன். எப்படி இருப்பாள் என்ற் பயத்தோடுதான் சென்றேன். ஆனால் அங்க சென்றதுமே இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் என்பதுபோல அங்கிருக்கும் குழந்தைகளோடு ரொம்ப ஆசையாஇ பழகி விளையாட ஆரம்பித்து விட்டாள். ரொம்ப சின்ன பிள்ளையாக இருக்காளே என்று எண்ணி சேர்த்துக்கொள்ள தயங்கிய மேடம் கூட இவள் என் ஜாய் செய்வதைப் பார்த்து சேர்த்துக்கொள்ள சம்மதித்து விட்டார். டாய்லெட் வந்தாலும் சொல்லி விடுவாள். ஆனால் சரியாகப் பேசத்தெரியாது. தற்ப்போது 2 1/2 வயது ஆகின்றது. 5 ரைம்ஸ், 1 டூ 20 வரை சொல்லுகிறாள். நன்றாகப் பேசுகிறாள். அடுத்த கல்வியாண்டில் எல்.கே.ஜி சேர்க்கனும். ஆனால் அவள் பள்ளி சென்ற புதிதில் முதல் ஒரு வாரத்திற்க்கு வீடே வெறுமையாக இருந்தது தான் தாங்கிக்கவே முடியலை. இன்று வரை கூட பள்ளியிலிருந்து அழைத்துவர நான் சென்றால் சீக்கிரம் பள்ளியை விட்டு வர அவளுக்கு மனசே இருக்காது. நான் தான் கெஞ்சி கூத்தாடி அழைத்து வர வேண்டும். இந்த வருடத்திலிருந்து அவளுக்கு யூனிஃபார்ம். இன்னைக்கு காலையில் எழுந்ததும் அம்மா ஸ்கூலுக்கு டைம் ஆச்சு சீக்கிரம் யூனிஃபார்ம் போட்டு விடுங்க என்றாள். இன்னைக்கு லீவ்னு அவளே சொன்னாலும் இன்னும் அர்த்தம் தெரியல போல அவளுக்கு. அப்போதிலிருந்து இப்போவரைக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை என்னன்னா சாப்பிடுவத்ர்க்கு தான்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் ப்ரியா உங்க பொண்ணு ரொம்ப சீக்கிரமா தான் ஸ்கூல் சேர்த்துவிட்டுட்டீங்க. வீட்டுல குழந்தைகளுக்கு துணையா வீட்டுல பெரியவங்க இருந்தா தனிமை தெரிந்துச்சு இருக்காது. 21/2 வயசுலேயே ரைம்ஸ் எல்லாம் பாட ஆரம்பிச்சுட்டாங்களா. உங்கள மாதிரியே உங்க பொண்ணு நல்ல ப்ரிலியண்ட் ஸ்டூடண்டா வரட்டும். பாப்பா பேரு என்ன ப்ரியா.

ஹாய் உமா!! நீங்களும் உங்க குட்டி ஜுனியரும் நலமா? ஓ, உங்க பையன் இப்ப கே.ஜி போக போறாரா? எப்படியும் கடந்த ஒன்றரை வருஷமா ஸ்கூல் போன அனுபவம் இருப்பதால் இப்ப சமத்தா போய்ட்டு வருவாருன்னு நினைக்கிறேன்... உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அந்த அனுபத்தையும் எழுதுங்க

அனேக அன்புடன்
ஜெயந்தி

லாவண்யா, உங்க பதிவ படிக்கிறப்பவே நானும் உங்க கூடவே ட்ராவல் பண்ணின மாதிரி ஒரு ஃபீலிங், அந்த அளவுக்கு விரிவா சொல்லிருகீங்க... உங்களை போல் தான் எனக்கும் இவ ஸ்கூல் போறதுக்கு முந்தைய வாரம் எல்லாம் ஒரே டென்ஷன், அங்க போய் எப்படி இருப்பா? அவங்க சொல்றது இவளுக்கு புரியுமா? ஏதாவது சாப்பிடுவாளா? அவ சாப்பிட்ற மாதிரி என்ன என்ன குடுத்து விடலாம்? மற்ற பிள்ளைங்க கூட எப்படி பழகுவா? இப்படி இன்னும் பல யோசனையோடு தலையே சுத்துற மாதிரி இருந்தது... உங்களுக்கு இப்ப அதை நினைச்சு பார்த்தா சிரிப்பா இருக்கும்ல... இன்னும் நிறைய எழுதுங்க.... நான் இன்னுமொரு ஆலோசனையும் கேட்டிருந்தேனே? எப்படி என் பொண்ணை சாப்பிட வைப்பது,அதை அவளுக்கு புரியும் படியா எப்படி சொல்வது? நீங்க என்னென்ன வழிமுறைகள் பண்ணி உங்க பொண்ணை சாப்பிட வச்சீங்க? அதையும் சொன்னா எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

அனேக அன்புடன்
ஜெயந்தி

ஹாய் ஆனந்தப்ரியா, உங்க பொண்ணு 1 1/2 வயசுலயே ப்ளே ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டாளா? அதுவும் ரொம்ப சமத்தா வேற இருந்தது ஆச்சர்யம் தாங்க... எவ்வளவு நேரம் அங்க விடுவீங்க? மதியம் லஞ்ச் டைம் கூட்டிட்டு வந்திடுவீங்களா? என் பொண்ணு இப்பதான் ஸ்கூல் போறான்னாலும் 1 டூ 20 வரை நம்பர்ஸ் சொல்லுவா, 2 டூ 3 ரைம்ஸ் பாடுவா, நாங்க வீட்டில் தமிழ் தான் பேசுவோம், நடைமுறை தமிழ் என்பதால் நிறைய வார்த்தைக்கு ஆங்கிலத்திலும் சொல்வா, ஆனால் ஸ்கூல்-ல அவங்க பேசுற அமெரிக்கன் இங்க்லீஷ் தான் புரியுமான்னு தெரியல, பார்க்கலாம் இன்னும் கொஞ்ச நாளில் எனக்கே சொல்லி கொடுக்கும் அளவு வந்தாலும் ஆச்சரியபடுவற்கில்லை... நானும் சாப்பாடு பத்தி தாங்க ரொம்ப கவலை பட்றேன், வீட்லனா அவளை எப்படியாவது சாப்பிட வச்சுடுவேன், அங்க போய் எப்படி சாப்பிடுவான்னு தான் கவலையா இருக்கு... அவளுக்கு இப்ப வரை ஜீஸே பிடிக்காது, அது என் தப்பு தான் நான் தான் பழக்கப்படுத்தாமலே விட்டுட்டேன், இப்ப ஃபீல் பண்ண வேண்டிருக்கு... உங்க பொண்ணுக்கும் சாப்பாடு தான் பிரச்சினையா? ப்ளே ஸ்கூலில் என்ன சாப்பிட குடுத்து விடுவீங்க? எந்த அளவு சாப்பிடுவா? ஆனால் இது மட்டும் எல்லார் வீட்டிலும் இருக்கும் பிரச்சினை தான் போல.... :)

அனேக அன்புடன்
ஜெயந்தி

அன்புத்தோழிகள் வினோ, ஜெயந்தி...... எங்க பாப்பா பெயர் ஐஸ்வர்யா. சென்ற வருடம் ஆயுத பூஜைக்கு தான் ப்ளே ஸ்கூலில் சேர்த்தோம்.
சேர்த்த ஒரு மாதம் வரை ஒரு மணி நேரம் தான் இருக்க சொன்னார்கள். ஸ்கூலிற்கு சென்ற முதல் நாளிலிருந்தே நான் தான் போய் ட்ராப் செய்வேன்.

ஸ்கூல் வாசலில் இறங்கியதுமே ஸ்கூலுக்குள்ள ஓடிவிடுவாள். நான் தான் பாவம் போல கையை டாட்டா காட்டிகிட்டே திரும்பிபார்க்க மாட்டாளா என்ற ஏக்கத்தோட வாசலிலேயே நின்னுகிட்டு இருப்பேன்.
ஏன்னா அழுகின்ற பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு மட்டும் தான் ஸ்கூலுக்குள்ள அனுமதி. அப்போ அவளுக்கு பேச தெரியாது என்பதால் மழலை மொழியிலேயே அழும் குழந்தைகளை சமாதானம் செய்வாள். சமீப 2 மாதங்களாகத்தான் நன்றாகபேசுகிறாள்.

நான் வீட்டில் நிறைய ஏ, பி,சி,டி சார்ட்ஸ், தமிழ் எழுத்துக்கள் போன்றவற்றை காட்டி அவற்றை சொல்ல வைத்துப் பழக்கனும். தற்போது கடைகளின் பெயர் பலகைகளில் இருக்கும் உயிர் எழுத்துக்களை அடையாளம் காட்டி உச்சரிக்கிறாள். வாகனங்களில் நெம்பர் பிளேட்களில் இருக்கும் எண்களையும் எழுத்துக்களையும் வாசித்துகாட்டுவாள். ஆரம்பத்தில் இவற்றையெல்லாம் நாம் தான் அடிக்கடி சுட்டிக்காட்டி சொல்லிக்கொடுத்து அவர்களின் ஆர்வத்தை தூண்டனும்.

ஸ்கூலில் அவர்களோடு படிக்கும் பிள்ளைகளின் பெயர்களை சொல்லிக்கொடுக்கணும்.

அவ்வப்போது ஃபிரெண்டுகளின் பெயர்களைச் சொல்லி அவர்களோடு என்ன் விளையாடினீங்க நு கேட்க ஆரம் பித்தாலே அவர்கள் ஸ்கூலில் நடந்தவற்றை சொல்லப் பழகிவிடுவார்கள்.

மிஸ் என்ன சொன்னாங்க, நீ என்ன செய்தாய் அப்படீனு அவர்களிடம் அவர்களுக்குப் புரியும் வகையில் அடிக்கடி கேட்ட்க ஆரம்பித்தாலே ஸ்கூலில் படித்த ரைம்ஸ் லாம் தானாகவே சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

அதைத்தவிர நானே அவளுக்கு வாட் இஸ் யுவர் நேம் நு கேட்டா மை நேம் இஸ் ஐஸ்வர்யானு சொல்லிக்கொடுத்தேன். ஆனால் எதையும் விளையாட்டாக தான் ஆரம்பிக்கனும்.

குழந்தைகள் சீகிரம் புரிந்துகொள்வார்கள். எப்பவும் எந்த புது விஷயத்திற்கும் ஸ்ட்டார்ட் செய்யும்போது கொன்சம் கஷ்ட்டம்.
அவர்களுக்கு புரிந்துவிட்டால் நாமே வியந்து போகும் அளவிற்கு ஆர்வமாக இருப்பார்கள்.
ஸோ அவர்களுக்கு புரிதலையும் ஆர்வத்தையும் ஏர்படுத்தும் பக்குவம்மும் பொறுப்பும் 100% அம்மா கையில் தான் இருக்கு.

எனவே முயர்ச்சி செய்யுங்கள் தோழீஸ். கண்டிப்பா வியத்தகு மாற்றங்களைக் காண்பீங்க.
வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்