சிக்கின் ராப்ஸ்

தேதி: April 22, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 500 கிராம் (எலும்பு இல்லாத கோழியின் நெஞ்சுப்பகுதி தான் நல்லது)
ஐஸ்பெர்க் சலாட் - 200 கிராம்
மயோனிஸ் அல்லது விருப்பமான சாஸ் தேவையான அளவு
குடைமிளகாய் - 1
வெள்ளரிக்காய் - 1 கப் (வட்டமாக வெட்டியது)
தக்காளி - 2 (வட்டமாக வெட்டியது)
ராப்ஸ் ரொட்டி - 8
சீஸ் தூள் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி


 

சிக்கனை மெல்லிய நீளத்துண்டுகளாக வெட்டி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிரட்டி 30 நிமிடம் வைக்கவும்.
சலாட்டை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
குடைமிளகாயை மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சிக்கனைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
ராப்ஸ் ரொட்டியை ஒரு நிமிடம் மைக்ரோஓவனில் சூடாக்கவும்.
ஒரு ரொட்டியை எடுத்து வைத்து நடுவில் மயோனிஸை நீளமாக விடவும்.
அதன் மேல் சலாட்டைப் போடவும். பின்பு சீஸ்தூளை தூவவும்.
2 வெள்ளரித்துண்டு, 2 தக்காளித்துண்டு, குடைமிளகாயை வைக்கவும்.
அதன் மேல் பொரித்த சிக்கனை 1-2 துண்டு வைத்து தபால் உறைபோல மடித்து வைக்கவும்.
அதே போல் முழுவதையும் செய்து பரிமாறவும்


இது வேலைக்கு எடுத்து செல்லவும், பிக்னிக் அல்லது வெளியூர் செல்லும் போது எடுத்துச் செல்ல இலகுவான ஒரு உணவு.
ராப்ஸ் ரொட்டி கடைகளில் கிடைக்கும். அப்படி கிடைக்காவிட்டால் மைதாவுடன் உப்பு, பட்டர், தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு பதத்தில் பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும். பின்பு மாவை எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு ஒவ்வொரு பக்கமும் 1-2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

மேலும் சில குறிப்புகள்