வேப்பம்பூ துவையல்

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உலர்ந்த வேப்பம்பூ - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 5
புளி - சிறு எலுமிச்சை அளவு
பெருங்காயம் - பட்டாணி அளவு
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வேப்பம்பூவை சுத்தம் செய்து, நீர் விட்டு அலசி காய வைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் வேப்பம்பூ, மிளகாய் வற்றல், புளி, பெருங்காயம், மஞ்சள்தூள் எல்லாம் போட்டு வறுத்து எடுக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து எடுத்த எல்லாவற்றையும் சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.
சுவைக்காக சிறிது அச்சு வெல்லம் கடைசியாக சேர்க்கவும்.
இது வாதம், பித்தம், கபம் எல்லாவற்றிற்கும் சிறந்த நிவாரணி.


மேலும் சில குறிப்புகள்