வாழைப்பூக் கறி

தேதி: April 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

வாழைப்பூ - 500 கிராம்
மைசூர் பருப்பு - 50 - 75 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பற்கள்
பால் - 100 மி.லி
தேசிக்காய் - பாதி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம் மற்றும் பூண்டை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
கனமான கூர்மையான கத்தியால், வாழைப்பூவை படத்தில் உள்ளபடி வெட்டி அடையாளப்படுத்தவும்.
பின்னர், பலகையில் வைத்து மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும். (மீண்டும் மீண்டும் இதேப்போல் செய்து வெட்டி எடுக்கவும்)
நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் வாழைப்பூவை பிழிந்து எடுத்து ஒரு கடாயில் போட்டு அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் பருப்பை கழுவி தண்ணீர் வடித்து போடவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிரட்டி 200 மி.லி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
வெந்ததும் பால் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
பால் கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தேசிக்காய் பிழிந்து பரிமாறவும். சுவையான வாழைப்பூ கறி ரெடி. அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழைப்பூவின் மடலையும் சேர்த்து நறுக்க வேண்டுமா?
நன்றி
sathy

வாழைப்பூ கறி என்றும் பார்த்ததும் நீங்கள் தான் செய்து அனுப்பியிருப்பீர்கள் என நினைத்தேன்! நானும் இதைப் போல் தான் செய்வேன். ஊரில் இருக்கும் போதும் அம்மா செய்து தரும் போது வேண்டாம் என அடம்பிடித்து சாப்பிடுவது. இங்கு வந்து தேடிதேடி வாங்கி சமைப்பேன்.இல்லாத போது தான் அதன் அருமை தெரிகிறது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஆந்திரா மேடம் உங்கள் தலையிடி சரியகிற்ற. இந்தகறி நன் ஒருபோதுப் சாப்பிட்டது இல்லை செய்து பார்கிறான் குறிப்புக்கு நன்றி. என் அம்மா இதில் வரைதான் வறுப்ப இது வித்தியாசமா இருக்கு.

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அதிரா நீங்கள் எப்போது உஙகளுடைய பெயரை ஆந்திராவாக மாற்றி விட்டீர்கள் அதை பற்றி எனக்கு சொல்லவேயில்லையே எனக்கு தெரிந்தளவில் ஆந்திரா என்பது இந்தியாவின் ஒரு இடம் என்பதே ஆகும் அத்துடன் அதிராவை ஆந்திராவாக மாற்றிய சுகாவிற்கு எனது வாழ்த்துக்கள் நான் இப்படி எழுதியதை அதிரா அல்லது சுகா அல்லது மற்றவர்கள் பிழையாக விளங்கிகொள்ள மாட்டீர்கள் என்று நான் நினைக்கின்றேன் நான் இதை பகிடியாகவே(joke) கூறினேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

நான் தான் பேரை மாத்திவிட்டேன்.அர்வகொலருத என்ன செய்யா.ஹி ஹி ஹி நானும் ஜோக் அடித்தனன்.அதிரா மேடம் சொறி.என்ன செய்வது பதினைத்து வருடத்துக்கு பிறகு தமிழ் எழுதிறன் கொஞ்சம் பிழைஇருக்கும் அறுசுவை தோழிகள் பொருத்தருளவேண்டும். துஷ்யந்தி கலைவேந்தன் சுட்டி காட்டியமைக்கு நன்றி என்னக்கொரு புதுதோழி அய்யா....ஜாலி
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அதிரா இது என்ன புது விதமா வாழைபூவை நருக்குகிறீர்கள்,நாங்க தோலை எல்லாம் எடுத்து விட்டு உள்ளே உள்ள பூவை மட்டும் தான் எடுப்போம்.
நடு மண்டையில் ஒரு தட்டு தடுவங்களே அதான் இதுவா?

Jaleelakamal

அதிரா உங்களுடைய வாழைப்பூக்கறி மிகமிக சுவையாக இருந்தது அந்த குறிப்பை தந்ததிற்கு நன்றி.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

அதிரா,
புது விதமாகத்தான் வாழைப்பூவை நறுக்குகின்றீர்கள்.சிலர் சில காய்,பழங்களில் சத்து அதிகளவுள்ளது என்று தோல் நீக்காமல் சாப்பிடுவார்கள்.அந்த முறையோ என்னவோ?நாங்கள் கடலைபருப்பு சேர்த்து செய்வோம்.உங்கள் முறையில் செய்கின்றேன் இனி.படங்களும் பளிச் என்று அழகாக உள்ளது.உங்கள் வீட்டு கிச்சன் டைல்ஸும் பளிச் என்று அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சுகா நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? அத்துடன் எந்த நாட்டில் இருக்கின்றீர்கள்? இவை யாவற்றையும் பற்றி கூறவிரும்பினாள் கூறுங்கள்.அத்துடன் உங்களுடைய எழுத்துபிழைகளைபற்றி நான்குற்றம் சொல்லவில்லை ஆனால் நான் நினைத்தேன் அதிராவின் பெயரை ஆந்திரா என்று நீங்கள் நினைத்துவிட்டீர்கள் என்று அதனால் தான் அப்படி கூறினேன் இதை பிழையாக விளங்கிகொள்ளமாட்டீர்கள் என நான் நினைக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் துஷ்யந்தி நான் நல்ல இருக்கிறன்.நிங்கள் எப்படி இருகிறிர்கள்?நான் பிரான்ஸ் உங்களுக்கு பக்கத்து நாடுதான்.தமிழ் எழுத்துபில எனக்குபெரிய பிரைசன அதுதான்.மத்தபடி உங்கள தப்பநினகல.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஆமாம் நாங்கள் கேரளாவில் இப்படி தான் நறுக்குவோம்..வாழைப்பூவின் முதல் 3 அல்லது 4 தோல்களை நீக்கி விட்டு மற்ற்தை இப்படி நறுக்குவோம்.கடைசி தண்டு பாகம் வரவர நேராக நறுக்காமல் சைடாக நறுக்கி நடுப்பகுதியை கடைசி 2 இன்ச்சுக்கு களைந்து விடுவோம்.ஆனால் நல்ல ஃப்ரெஷ் வாழைப்பூவாக இருக்க வேண்டும்.இது தான் சத்தானது..எனக்கு இதை நறுக்க ரொம்ப இஷ்டம்..மலயாளத்தில் வாழைப்பூவை குடப்பன் என்போம்.
அதிரா நறுக்கி வைத்திருக்கும் அழகே தனி

சதி, வாழைப்பூ என்பது, முழுப் பொத்தியைத்தான் குறிக்கிறது. வெளியே விரிந்திருக்கும் பகுதியை மட்டும் அகற்றினால் போதும் மற்றும்படி அப்படியே வெட்டிக்கொள்ளலாம். உள்ளே இருக்கும் பூக்களை மட்டும் எடுப்பதில்லை.

வத்சலா, எனக்கு எப்பவுமே இந்தக் கறி விருப்பம். பெரும்பாலும் எனக்குப் பிடித்த கறிகளையே இங்கு செய்து போடுகிறேன்(வீட்டிலும் செய்வேன்). பிடிக்காதவற்றைச் செய்வது குறைவு. எனக்கும் இங்கே கிடைப்பதில்லை. இது கனடாவிலிருந்து இறக்குமதி.

சுகா வறையும் சுவைதான் இதுவும் சுவைதான் செய்து பாருங்கள். உடன் பூவென்றால்தான் இக்கறி அதிகம் சுவையாக இருக்கும். வாடினால் வறைக்குத்தான் சரி.

துஷியந்தி, வேறொன்றுமில்லை, சுகாவுக்கு என்மேல் "ஆ"ழமான விருப்பம்:) அதுதான் "அ"திராவை "ஆ"திரா எனப் போட்டுவிட்டார்.:).

சுகா இதுக்கெல்லாம் ஏன் சொறி "தவறு செய்யாதவன் மனிதன் அல்லவே".

ஜலீலாக்கா இது என்ன புதுக்கதையாக இருக்கு. அப்படியில்லையக்கா. முதல்தடவையாக அறிகிறேன். இத்தனை நாளும் வாழைப்பூ என்றால் உள்ளே இருக்கும் பூவை மட்டுமா குறிப்பிட்டீங்கள்? நான் செல்வியக்காவின் வாழைப்பு கோலா உருண்டை, கதிஜாவின் வாழைப்பூக்கறி எல்லாம் இப்படி வெட்டித்தான் செய்தேன். மொத்தமாக வெட்டுங்கோ... எதுவும் கழிக்க வேண்டாம்.

துஷியந்தி நான் பார்ப்பதற்குள் செய்தும் விட்டீங்களா? மிக்க நன்றி.

ஷாதிகா அக்கா, இப்பத்தானே உண்மை தெரிகிறது. இலங்கையில் நாம் எதுவும் மிச்சம் விடமாட்டோம்:) இப்படித்தான் எல்லோரும் வெட்டுவோம். பூ மட்டுமே பிரித்தெடுப்பதானால், ஒரு கறி செய்ய அதிகம் பொத்திகள் தேவைப்படுமே? பாவம் வாழைமரம்:). இனிமேல் இப்படியே வெட்டுங்கள். ஆகவும் வெளியே விரிவதை/ முத்தலை மட்டுமே பிரிக்க வேண்டும்... மற்றதெல்லாம் உள்ளே போனால் உடலுக்கு நல்லது. பாராட்டுக்கு மிக்க நன்றி. எங்கள் கிச்சின் சுவர் முழுவதுமே ரைல்ஸ்தான், இடைக்கிடை துடைப்பது, இப்போ பாராட்டை வாங்கித் தந்திருக்கு:), ஷாதிகா அக்கா இதைப் பார்த்தபிறகாவது புருஞ்சுகொள்ளுங்கோ அதிரா சும்மா இருப்பதில்லை, கிளீனிங் எல்லாம் செய்கிறேன்:) என்று.

பார்த்தீங்களா? பார்த்தீங்களா? கேரளாவிலும் இப்படித்தானாம். தளிகாவே சொல்லிட்டா. நன்றி தளிகா. UAE ilகிடைக்குமோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பொதுவாக வாழைப்பூ சமைப்பது என்றால் எங்களுக்கெல்லாம் பெரிய வேலையாக இருக்கும். வாழைப்பூ மடல்களை பிரித்து பூக்களை மட்டும் தனியாக எடுத்து அதில் உள்ள காளனையும் நரம்பையும் நீக்கி விட்டு அப்புறம் பூவை பொடியாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டு.........................................சுத்தம் பண்ணி முடிப்பதற்குள் முதுகு வலியே வந்து விடும். அதிரா எவ்வளவு ஈஸியா வாழைப்பூவை மடலொடு சேர்த்து நறுக்கி சமைத்தே முடித்துவிட்டார்கள்....!! அடுத்த தடவை வாழைப்பூ வாங்கும்போது அதிரா ஸ்டைலில் சமைக்கவேண்டும்.

மாலதியக்கா இனிக் கவலையே வேண்டாம். இதே முறையில் நல்ல கூர்க்கத்தி(கனமான) கொண்டு மிகவும் மெல்லியதாக வெட்டிக்கொள்ளுங்கள். சிலர் food processor இலும் துண்டுகளாகப் போட்டு வெட்டி எடுக்கிறார்கள்(அது உடன் பூ என்றால்தான் முடியும்).

நான் கிடைக்கும்போது நிறைய வாங்கி, கதைத்துக் கதைத்தே மடியில் வைத்து வெட்டி எடுத்து பிறீஸரில் போட்டுவிடுவேன். இப்படி வெட்டவும் பொறுமம வேண்டும். எங்கள் வீட்டில் அப்பா நின்றால் வெட்டித் தருவார், அடுத்தது நான் தான் வெட்டுவேன்... பொறுமையாக.......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா முன்பு எங்கள் வீட்டுக்கு பக்கத்திலுள்ளவர்களும் என் அம்மா நறுக்குவதை கண்டு ஆச்சரியமாக கேட்டார்களாம் என்ன அப்படியே நறுக்குகிறீர்கள் என்று அம்மா ஒருநாள் பார்த்தால் அம்மாவுக்கு தலையே சுற்றி விட்டதாம் உள்ளே அக்குவேற ஆணிவேறா எடுத்து சமைப்பதைக் கண்டு...பிறகு எங்கள் வீட்டில் சுவைத்ததும் அவர்களுக்கும் பிடித்துப் போய்விட நிறிய பேர் இன்று முழுவதாக சமைக்க பழகிவிட்டார்கள் எங்களை பார்த்து..இங்கு அறுசுவை பார்த்து இங்கும் நிறிய பேர் இனி இப்படி தான் சமைப்பார்கள்....வாழைமரத்திலிருந்து அப்படியே பரித்து கொண்டு வந்து செய்யும் இந்த பொரியலின் சுவைக்கு ஈடு இணையே இல்லை

தளிகா.
நான் இதில்தான் கேள்விப்பட்டேன் பூவை மட்டும் சமைப்பதென்று. உண்மையே உடன் பூவிலுள்ள சுவை வேறு இல்லை. நாங்கள் இதை வாழைப் பொத்தி என்றுதான் சொல்வோம்.

எங்கள் அட்மின் சுத்த மோசம்:), நான் குறிப்பிலே வாழைப்பொத்தி என்றுதான் போட்டனுப்பினேன், அவர்தான் வாழைப்பூ என மாற்றிப்போட்டுவிட்டார்.(கறியின் பெயர் வாழைப்பூக் கறிதான்).
யாராவது கண்டால் பிடிச்சுத் தாங்கோ:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா வாழைப்பூக் கறி மிகமிக சுவையாக இருக்கிறது..அதெப்படி எண்ணை இல்லாமல் ஒரு கறி அதுவும் இவ்வளவு சுவையில் நம்பவே முடியவில்லை..இன்று காலை சூப் போல செய்து சாப்பிட்டேன் ஆசை தீர.நன்றாக இருக்கிறது..மேலும் இது போல் குறிப்புகள் கைவசம் இருந்தால் வாரிவழங்கவும்

தளிகா, குறிப்புகள் செய்து படங்கள் எடுத்துக்கொண்டும், மெதுவாக அனுப்பிக்கொண்டுமிருக்கிறேன். எண்ணெயில்லாத கறிகளும் வரும் பார்த்துச் சமைத்துச் சொல்லுங்கள். வாழைப்பூக்கறி சுவையாக இருந்ததா? நன்கு சாப்பிட்டதாகச் சொன்னீங்கள் மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்