வெள்ளை கற்களில் நெக்லஸ்

தேதி: April 23, 2009

4
Average: 3.3 (4 votes)

இந்த அழகிய நெக்லஸ் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிப்ரியா அவர்கள். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கவர். தற்பொழுது கைவினைப் பொருட்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

 

ஒயிட் ஸ்டோன்
குங்குரு
மணி (கோல்டன் நிறம்)
வளையம்
பொடிமணி
கியர் ஒயர்
கோல்டன் ரோப்
கட்டர்
குரடு
முக்கோண வடிவ ஸ்டோன்

 

நெக்லஸ் செய்ய தேவையான மணிகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குரடு, கட்டர், கோல்டன் ரோப், கியர் ஒயர் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
நெக்லஸ் எந்த அளவிற்கு வேண்டுமோ அதற்கு தகுந்தாற்போல் இரண்டு கியர் ஒயர் எடுத்துக் கொள்ளவும். முக்கோண வடிவமுள்ள ஸ்டோனில் பின்பக்கத்தின் வழியாக கியர் ஒயரின் ஒரு முனையை அடிப்பாகத்தில் உள்ள இரண்டு துளைகளில் முதல் துளையில் விட்டு கோர்த்து வெளியே வராமல் இருப்பதற்காக முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
பிறகு திருப்பி வைத்து கியர் ஒயரின் வழியாக ஒரு கோல்டன் மணி கோர்க்கவும். அடுத்து ஒரு குங்குரு, ஒரு கோல்டன் மணி அதன் பிறகு ஒரு ஒயிட் ஸ்டோன் மணி கோர்க்கவும். இதேப் போல் 21 மணிகள் கோர்த்து கொண்டே வரவும்.
கடைசியில் ஒரு கோல்டன் மணி, ஒரு குங்குரு, ஒரு கோல்டன் மணி என்று கோர்த்ததும் மற்றொரு முக்கோண வடிவ ஸ்டோனில் கியர் ஒயரை கோர்த்து முதல் துளையில் விட்டு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். மற்றொரு கியர் ஒயரை எடுத்து முதலில் கோர்த்த முக்கோண வடிவ ஸ்டோனின் அடுத்த துளையில் கியர் ஒயரை விட்டு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
அந்த ஒயரில் ஒரு கோல்டன் மணி, ஒரு குங்குரு, ஒரு கோல்டன் மணி என்று கோர்க்கவும். அந்த ஒயரை எடுத்து ஒயிட் ஸ்டோனின் நடுவில் இருக்கும் துளையில் விட்டு கோர்க்கவும். இதேப் போல் கோர்த்து வைத்திருக்கும் ஒயிட் ஸ்டோனில் எல்லாம் நடுப்பகுதியிலும் கோர்த்து கொண்டே வரவும். இடையிடையே ஒரு கோல்டன் மணி, ஒரு குங்குரு, ஒரு கோல்டன் மணி கோர்க்கவும்.
கடைசியில் மற்றொரு முனையில் இருக்கும் முக்கோண வடிவ ஸ்டோனில் கியர் ஒயரை கோர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அடுத்து ஐந்து பொடி மணி கோர்த்த வளையத்தை ஒவ்வொரு ஒயிட் ஸ்டோன் அடியிலும் கோர்த்து விடவும். நடுவில் இரண்டு ஸ்டோனில் மட்டும் கோர்க்க வேண்டாம்.
ஒரு ஒயிட் ஸ்டோன் அடியில் ஐந்து பொடிமணிகள் கோர்த்த வளையத்தை கோர்த்து நெருக்கி விடவும். அந்த ஒயிட் ஸ்டோனில் மேலே ஒரு வளையத்தை கோர்த்து கொள்ளவும். இதேப் போல் மூன்று ஸ்டோன் செய்துக் கொள்ளவும். அதில் ஒன்றில் மட்டும் வளையம் கோர்த்ததில் இன்னொரு ஒயிட் ஸ்டோன் கோர்த்து அதன் மேல் ஒரு வளையம் கோர்த்து வைக்கவும்.
குங்குரு கோர்க்கப்படாத ஸ்டோன்களின் இடைவெளியின் நடுப்பகுதியில், இரண்டு ஸ்டோன் கோர்த்த வளையத்தை மாட்டிவிட்டு வளையத்தை நெருக்கி விடவும். மற்ற ஸ்டோன்களையும் இடைவெளிகளில் கோர்த்து விடவும்.
நெக்லஸின் இருமுனையிலும் உள்ள துளையில் ஒரு வளையத்தை மாட்டி அதில் கோல்டன் ரோப்பை கோர்த்து விடவும்.
ஜொலிக்கும் ஒயிட் ஸ்டோன் நெக்லஸ் தயார். இதைப் போல் அவரவர்க்கு பிடித்த வண்ணங்களிலும் டிசைன்களிலும் நம் கற்பனைகேற்ப செய்துக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாக இருக்கிறது கவிப்ப்ரியா. :-)
செய்முறை தெளிவாக இருக்கிறது. 'குங்குரு' என்பது மட்டும் என்னவென்று புரியவில்லை.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா மேடம் எனக்கும் அதே சந்தேகம் தான் .... நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.மிகவும் அழகாக இருக்கிறது கவிப்பிரியா.நன்றாக படங்களும் விளக்குகின்றன.எனக்கும் கைவினை பொருட்கள் செய்வதில் கொள்ளை ஆசை உண்டு.நேரம் தான் கிடைப்பதில்லை.
கவிப்பிரியா முடிந்தால் பதில் கொடுங்களேன்.

அன்புடன்
உமா.

என் பதிவுகளே மீண்டும் மீண்டும் வந்துவிட்டது.

அன்புடன்
உமா.

என் பதிவுகளே மீண்டும் மீண்டும் வந்துவிட்டது.

அன்புடன்
உமா.

என் பதிவுகளே மீண்டும் மீண்டும் வந்துவிட்டது.

அன்புடன்
உமா.

எவ்வளவு அழகாக இருக்கு!!!!!. ஆனால் சரியான பொறுமை வேண்டும் செய்ய.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

its beautiful

மிக மிக அழகிய கழுத்தணி...எங்கே கிடைக்கும் இதற்கான பொருட்கள்?
சொல்லுங்கள் தோழி.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

Nanum ungalai pola jewel panuvane but eppadi sales panrathunu than therila athuku vazhi sollungalane pls.........