கேபேஜ் ட்ரை மஞ்சுரியன்

தேதி: April 24, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேபேஜ் துறுவியது - 1 கப்
உருளை - 1 வேகவைத்து துறுவியது
பச்சமிளகாய் - 1
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
மைதா மாவு - 1 தே.க
கடலை மாவு - 2 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
எண்ணெய் - பொரிக்க


 

கேபேஜ்+உருளை+பச்சமிளகாய் சின்னதாக கட் செய்தது,கொததமல்லி இலை
பொடியாக கட் செய்தது எல்லாவற்றையும் ஒன்றாக
கலந்து ஒரு பௌலில் வைக்கவும்.
மைதா மாவு+கடலை மாவு, மிளகாய் தூள்+உப்பு எல்லாவற்றயும் நன்றாக
கலந்து காய்கறி கலவையில் போட்டு கொஞ்சம் தண்ணிர் விட்டு பிசையவும்.
உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக சூடானதும் காய்கறி கலவையில் இருந்து
சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன் நிறத்தில்
பொரித்தெடுக்கவும்.

இதை ஸ்னாக்காக சாப்பிடலாம்.


இதை க்ரேவியில் போட்டு சைட் டிஷ்ஷாக செய்து பூரி,ரொட்டிக்கு தொட்டு சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு விஜி,
புதிய முயற்சி.புது விதமாக இருந்தது.கடலை மாவுக்கு பதிலாக பொட்டுக்கடலை மாவு சேர்த்தேன்.சாஸுடன் சாப்பிட சுவையாக இருந்தது.அடுத்த முரை செய்யும் பொழுது கண்டிப்பாக போட்டொ எடுத்து அனுப்புகின்றென்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா, நலமா? ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் தோழி வீட்டில் சாப்பிட்டது, ரொம்ப நன்றாக இருந்தது. எப்பவும் கேபேஜ் பொரியல்,கூட்டு, இது தான் , அதனால் இதை இப்படி செய்து குடுத்தேன் எல்லாருக்கும் பிடித்தது, உடனே நம்ம அருசுவைக்கும் குடுக்கலாம் என்று குடுத்தே. நன்றி அக்கா.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. சாதிகா அவர்கள் தயாரித்த கேபேஜ் ட்ரை மஞ்சூரியனின் படம்

<img src="files/pictures/aa240.jpg" alt="picture" />

ஸாதிகா நிங்க ரொம்ப நன்றாக ப்ரசண்டேஷன்+நல்ல செய்திருக்கிங்க. இப்பவே சாப்பிடனும் போல இருக்கு. நானும் இப்ப எல்லாம் அடிக்கடி செய்வேன்.
என் தோழி கொஞ்சம் ரெட் கலர் சேர்ட்து பார்டிஸ்க்கு செய்தாங்க. நானும் இது மாதிரி தான் செய்தேன்.
ரொம்ப ரொம்ப நன்றி+ சந்தோஷமா இருக்கு.

ஸாதிகா அக்கா செய்து படம் அனுப்பியதற்க்கும் அதை இங்கு போட்டதற்க்கும் நன்றி...........அருசுவைக்கும் நன்றி.

நல்ல அருமையான ரெசிப்பி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.