கிட்ஸ் ப்ரெட் கட்லெட்

தேதி: April 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

இந்த ப்ரெட் கட்லெட் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

 

சிறிய ப்ரெட் - 8 துண்டுகள்
உருளைக்கிழங்கு - ஒன்று
கேரட் - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)
பீன்ஸ் - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)
வெங்காயம் - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)
பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்)
மல்லி இலை - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
சில்லி பவுடர் - கால் தேக்கரண்டி
மல்லி பவுடர் - கால் தேக்கரண்டி
சீரகப் பவுடர் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மைதா - 3 மேசைக்கரண்டி
முட்டை - 2 (விரும்பினால்)


 

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். ப்ரெட்டின் ஓரங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மைதா மாவை ஒரு கப் தண்ணீரில் திக்கான பேஸ்டாக கலந்து வைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி விட்டு கேரட், பீன்ஸ், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு வதக்கி விடவும்.
காய்கள் வெந்ததும் அதில் மசாலா பொடிகளை போட்டு வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, மல்லி இலை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேரும்படி நன்கு கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடவும்.
ஒரு ப்ரெட் துண்டின் நடுவில் செய்து வைத்திருக்கும் மசாலா கலவையை வைத்து மற்றொரு ப்ரெட்டினால் மூடவும்.
இரண்டு ப்ரெட்டையும் சேர்த்து மூடிய பின்னர் அடித்து வைத்திருக்கும் முட்டையை அதன் மேல் ஸ்பூனினால் எடுத்து ஊற்றவும்.
அதன் பின்னர் முட்டை கலவையின் மேல் கலந்து வைத்திருக்கும் மைதா கலவையை ஊற்றவும்.
இதைப் போல் ப்ரெட்டின் இருபுறமும் தடவிக் கொள்ளவும். மற்ற ப்ரெட் துண்டுகளிலும் செய்து வைத்துக் கொள்ளவும். மைதா, முட்டை கலவையில் ப்ரெட் ஒட்டிக் கொள்ளும்.
தவாவில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு ப்ரெட் துண்டாக போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான ப்ரெட் கட்லெட் ரெடி. இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும். இதனை காலை அல்லது மாலை உணவாக பரிமாறலாம். முட்டை விரும்பாதவர்கள் மைதா மட்டும் சேர்த்து செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஆசியா உமர் மேடம் குழந்தைகளுக்கு நல்லது இந்த ப்ரெட் கட்லெட். குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஐ என் மகளுக்கு ஒரு உணவு தந்துவிட்டீர்கள் ஆசியாக்கா..thank u

டியர் ஆசியா, நல்ல அருமையான சத்தான காலை உண‌வு.

Jaleelakamal

கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.செய்து பார்த்தீர்களா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

This item is very super.The kidsislike herecutlet.

with love
shameema

உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் இந்த recipe நேற்று என் குழந்தைக்கு செய்து கொடுத்தேன்.காய்களை blenderல்அரைந்து விட்டேன்.என் மகள் விரும்பி சாப்பிட்டாள்.thaz 4 ur recipe madam.