i need your ideas

ஹாய் தோழிகளே நான் india போக் போகிறேன் vocation என்னலாம் வாங்கிட்டு போக்லாம் இங்க என் husbandku தேவையானது என்ன செஞ்சி வச்சிட்டு போக்லாம் கொஞ்ச்ம் idea சொல்லுங்கலேன்

இட்லி, சப்பாத்தி, பரோட்டா, இடியப்பம், புட்டு,பூரி, தோசை, மசாலத்தோசை, பிரியாணி, பிரைட்ரைஸ் விரும்பிய கறிவகைகள், துவையல் வகைகள் ஆகீய வற்றில் விரும்பியதை செய்து அதனை நன்றாக ஆற விடவும் இவை யாவும் ஆறிய பின்பு ஒவ்வொன் றையும் சுத்தமான சிறிய சிறிய பைகளில் போட்டு காற்று உட்புகாதவாறு நன்றாக கட்டிய பின்பு அதனை குளிர்சாதன பெட்டியின் மேற்பகுதியில் (பிறீசரில்) போட்டு வைத்து விட்டு இந்தியாவிற்கு நீங்கள் செல்லலாம். நீங்கள் இந்தியாவிற்கு சென்ற பின்பு உங்களுடைய வீட்டுகாரருக்கு(கணவர்) பசிக்கும் போது அவருக்கு தேவையான பைகளை அவர் பிரீசரில் இருந்து எடுத்து அதனை சூடாக்கி சாப்பிட வசதியாக இருக்கும் அத்துடன் நீங்கள் செய்து வைத்ததையே அவர் சாப்பிடுவதால் உங்களுக்கும் திருப்தியாக இருக்கும்(1பையில் அவர்க்கு தேவையான அதாவது இட்லி என்றால் (5 - 8) இட்லி இதை ஒரு பையில் போட்டு கட்டவும்.இன்னொரு பையில் அதற்கு தேவையானளவு கறி அல்லது சாம்பார் அல்லது துவையல் இதில் ஏதாவது ஒன்று(ஒவ்வொன்றையும் தனி தனியாகவும் ஒரு நேரத்திற்கு ஒரு நபருக்கு தேவையான அளவு).

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்