தேங்காய் பால் ரசம்

வழங்கியவர் : Jaleela Banu
தேதி : ஞாயிறு, 26/04/2009 - 11:37
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- ஒன்றாக கலக்கி கொள்ள:
- தேங்காய் பால் - இரண்டு கப்
- புளி - சிறிதளவு
- தக்காளி - ஒன்று
- ஒன்றும் பாதியுமாக தட்டி கொள்ள:
- மிளகு - அரை தேக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- சோம்பு - அரை தேக்கரண்டி
- பச்சைமிளகாய் - ஒன்று
- பூண்டு - மூன்று பற்கள்
- கறிவேப்பிலை - கால் கைப்பிடி
- கொத்தமல்லித்தழை - கால் கைப்பிடி
- தக்காளியை நன்கு பிசைந்து அதில் புளி தண்ணீர் மற்றும் தேங்காய் பாலை சேர்த்து கொள்ளவும்.
- கொரகொரப்பாக தட்ட வேண்டிய பொருட்களை தட்டி கொள்ள வேண்டும்.
- சட்டியை காயவைத்து அதில் எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்தமிளகாய் தாளித்து அதில் பெருங்காய பொடியை சேர்க்கவும். லேசாக தட்டி வைத்துள்ளதை சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ள மூன்று கலவையையும் சேர்த்து உப்பு சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.
- லேசாக நுரைத்து வரும் போது இறக்கிவிடவும்.
Note:
வாய் புண், அல்சர் ப்ராப்ளம், வயிற்று புண் உள்ளவர்கள், பிள்ளை பெற்றவர்களுக்கு ஏற்ற அருமையான ரசமாகும. இதில் முதலே கூட தட்டிய மசாலாக்களை (புளி, தேங்காய், தக்காளி ) கலவையில் சேர்த்து கொள்ளலாம்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
9 நிமிடங்கள் 10 sec முன்பு
38 நிமிடங்கள் 28 sec முன்பு
53 நிமிடங்கள் 7 sec முன்பு
59 நிமிடங்கள் 7 sec முன்பு
ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் முன்பு