மஞ்ச சோறு

தேதி: April 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

தரமான வெள்ளைப்பொன்னி புழுங்கல் அரிசி - 2 கப்
தேங்காய் - 1
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
ரம்பை இலை - 1
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 4
ஏலம் - 3


 

தேங்காயைத்துருவிக்கொள்ளவும். 1/4 கப் அளவு தேங்காய்த்துருவலை தனியாக எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள தேங்காயை மிக்ஸியில் அரைத்து 6 டம்ளர் அளவு பால் எடுத்துக்கொள்ளவும்.
அரிசியை களைந்து நீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
1/4கப் தேங்காய்த்துருவலில் சோம்பு, மஞ்சள்பொடி சேர்த்து சன்னமாக நீர் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
ரம்பை இலையை அனலில் காட்டி வாசனை வந்ததும் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை தாளித்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து தனியாக வைக்கவும்.
தேங்காய்ப்பாலை பெரிய பாத்திரம் அல்லது எலெக்ட்ரிக் குக்கர் ஏதாவது ஒன்றில் வைத்து அரைத்த மஞ்சள்நிற தேங்காய் விழுது வெந்தயம், இரண்டாக நறுக்கிய பூண்டுபற்கள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து வரும் பொழுது ஊறிய அரிசியை சேர்க்கவும்.
மேலும் கொதித்து வரும் பொழுது தாளித்தவற்றை சேர்த்து கிளறி விடவும்,
அரிசி வேகும் வரை குறைந்தது 2, 3 முறையாவது கம்பால் கிளறி விட வேண்டும்.
சாதம் சமைத்ததும், மேலும் 10 நிமிடம் சிம்மில் வைத்து அல்லது எலெக்ட்ரிக் குக்கர் என்றால் தம்மில் வைத்து பரிமாறவும்.


தென் மாவட்டங்களில் கூட்டாஞ்சோறு, திருவிழாக்காலங்கள் போன்ற உற்சாக தினங்களில் இந்த சுவைமிகுந்த மஞ்சள் நிற சாதத்தை சமைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.
இதற்கு சைட் டிஷ்ஷாக கோழி குருமா ஏற்றது. தவிர கருவாட்டு மொச்சை குழம்பு, முருங்கைக்கீரைபொரியல், சிறுபாகற்காய்க்கூட்டு, அவித்த முட்டை என்று பரிமாறினால் ஆஹா..சுவையோ சுவை.

மேலும் சில குறிப்புகள்


Comments

njhvghjhhvhgvh

Mrs.Anantharaman

ஹாய் ஸாதிகா. நலமாக இருக்கீங்களா?. உங்களுடைய மஞ்சட்சோறு செய்துபார்த்தேன். ரெம்ப நல்லாயிருந்தது. அதனுடன் உருளை ரைத்தா, பாகற்காய் சிப்ஸ் ம் செய்திருந்தேன். சூப்பர். நன்றி. அன்புடன் அம்முலு. குறிப்பு; நீங்கள் குறிப்பிட்ட அரிசி கிடைக்கவில்லை. சாதாரண புழுஙக்ளில்தான் செய்தேன்.சைட்டிஷ்சும் நீங்கள் குறிப்பிட்டது செய்யவில்லை. என் ஐடியாதான். ஆனால் உங்க குறிப்பில் எடுத்ததுதான்.

அம்முலு,நான் நலமே.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.இதனை சாதாரண புழுங்கள் அரிசியிலும் செய்யலாம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website