பார்லி காய்கறி சூப்

image

வழங்கியவர் : Jaleela Banu

தேதி : ஞாயிறு, 26/04/2009 - 14:49

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • பார்லி - ஒரு கைப்பிடி
  • காய்கறிகள் (காலிஃப்ளவர், முட்டைகோஸ், பீன்ஸ், அவரை, பட்டாணி) - ஒரு டம்ளர் பொடியாக அரிந்தது
  • உப்பு - சிறிது
  • மிளகு தூள் - கால் தேக்கரண்டி
  • சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
  • ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்
  • வெங்காயம் - கால்

 

  • பார்லியை நன்கு ஊறவைத்து அதில் காய்கறிகளை பொடியாக அரிந்து சேர்த்து உப்பு போட்டு மூன்று இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
  • வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து பெரிய கண் வடிகட்டி புளி வடிகட்டுவதில் வடிகட்டவும்.
  • தனியாக ஆலிவ் ஆயில் ஊற்றி வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி அதில் வடித்து வைத்த தண்ணீரை சேர்த்து மிளகு தூள் தூவி கொதிக்க விடவும்.
  • கடைசியாக சோளமாவு கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டால் சிறிது கிரிப்பாகும்.
  • சூடாக பவுளில் ஊற்றி குடிக்கவும்.

Note:

பார்லி டயட்டுக்கு என்பதால் இதில் கிழங்கு வகை காய்கள் பயன்படுத்த வேண்டாம். கர்பிணி பெண்களுக்கு ஏழு மாதம் மேல் கால் பாதம் வீங்கும் அதற்கும், சுகர் பிராப்ளம் உள்ளவர்களும் இதை குடிக்கலாம்.







ஜலீலா அக்கா 7 மாதத்துக்கு மேல்தான் குடிக்க வேணுமா ? ஆரம்பத்தில் இருந்து குடித்தால் தவறா?