அவல் தோசை

தேதி: April 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

பச்சரிசி - மூன்று கப்
உளுந்து - ஒரு கப்
அவல் - ஒரு கப்
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி


 

ப‌ச்ச‌ரிசியை த‌னியாக மூன்று ம‌ணி நேர‌ம் ஊற‌ வைக்க‌வும்.
உளுந்துட‌ன் வெந்த‌ய‌ம் சேர்த்து ஊற ‌வைக்க‌வும்.
அவ‌லை த‌னியாக‌ ஊற ‌வைக்க‌வும்.
அரைக்கும் போது எல்லாவ‌ற்றையும் ஒன்றாக‌ க‌ல‌ந்து அரைக்க‌வும். நன்கு புளிக்க‌ வைத்து தோசைக‌ளாக‌ வார்க்க‌வும்.


ந‌ல்ல‌ ப‌ஞ்சி மாதிரி வ‌ரும். எல்லா வ‌கையான‌ ச‌ட்னி, சாம்பார், குருமாக்க‌ளும் இத‌ற்கு பொருந்தும். இர‌வே அரிசியை ஊற‌வைத்து காலையில் அரைப்ப‌தாக‌ இருந்தால் உளுந்து, அவ‌லை ஊற‌வைத்து பிரிட்ஜில் வைத்து காலையில் எடுத்து அரிசியுட‌ன் சேர்த்து அரைக்க‌வும். அவ‌லை ம‌ண்ணில்லாம‌ல் க‌ளைந்து ஊற‌வைக்க‌வும்.

மேலும் சில குறிப்புகள்