curryக்கு எப்படி அலவாக உப்பு போடுவது?

curryக்கு எப்படி அலவாக உப்பு போடுவது?

சமையலுக்கு புதிதுன்னு நினைக்கிறேன்...அருசுவையில் நிறைய குறிப்புகள் இருக்கு செய்து பாருங்க செய்ய செய்ய உங்களுக்கே அளவா வந்துடும்..

ஆப்ஷன் 2 : தாளித்ததும் மசாலா கறியெல்லாம் போட்டு தண்ணிர் விட்ட பின் கொஞ்சம் உப்பு போட்டு டேஸ்ட் பாருங்க போதாதனுன்னா இன்னும் கொஞ்சம் போடுங்க பலக பலக எல்லாமே வ்ந்துடும் :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கலக்கிட்டீங்க போங்க... இதுவரைக்கும் எனக்குத்தான் இப்படி அடிப்படை சந்தேகங்கள் வந்துகிட்டு இருந்தது... இப்ப உங்க கேள்வி எல்லாத்தையும் மிஞ்சிடுச்சு... :-)

புதுசா சமைக்க ஆரம்பிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. எனக்கு தெரிந்த ஒரு சிம்பிள் உபாயம் - நீங்க அப்படியே சால்ட் டப்பாவிலேர்ந்து ஸ்ப்ரே பண்ணினா அளவு சரியா வராது... ஏற்க்கனவே சமைக்க தெரிஞ்சிருந்தாலும், இங்க வந்த முதல் நாள் இப்படித்தான் தடுமாறிகிட்டு இருந்தேன். அப்புறம் தான் தப்புன்னு தோனுச்சு. அதை ஒரு பாட்டிலில் கொட்டி வச்சு ஒரு சின்ன ஸ்பூன் கொண்டு போட்டு பழகுங்க... நாளாக நாளாக உங்களுக்கு அளவு புரிஞ்சிடும்... எதுக்கு அரை ஸ்பூன், எதுக்கு கால் ஸ்பூன், எதுக்கு முழு ஸ்பூன் போடனும்ன்னு உங்களுக்கே தெரிஞ்சிடும். அதே மாதிரி கெட்டியா செய்யும் சட்னி, பொரியல் வகைகளுக்கு உப்பு கம்மியாவும், curry வகைகளுக்கு மீடியமாவும், தண்ணியா செய்யும் சாம்பார், ரசம் வகைகளுக்கு அதிகமாவும் தேவைப்படும்...

அப்புறம் இது ரொம்பவே basic - முதல்ல கம்மியா போட்டு பார்த்துட்டு அப்புறம் தேவைக்கேற்ப சேத்திக்கிறது - இது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்