விறால் மீன் வறுவல்

தேதி: April 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுத்தம் செய்யப்பட்ட விரால் மீன் துண்டுகள்-12
தேங்காய்த்துருவல்- ஒரு கப்
சின்ன வெங்காயம்-7
சிறிய பூண்டிதழ்கள்-10
இஞ்சித்துருவல்- 1 டீஸ்பூன்
சோம்பு- 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி
தேவையான உப்பு


 

தேங்காய், சோம்பு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவற்றை நன்கு விழுதாக அரைத்து
மீன் துண்டுகளில் சேர்க்கவும்.
அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசிறி வைக்கவும்.
ஒரு மணி நேரம் மசாலா ஊறியதும் சூடான எண்ணெயில் மீன் துண்டுகளை பொன்னிறமாக இரு புறமும் பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

விரால் மீனை ஆங்கிலத்தில் Snake Head Murrel என்று சொல்வார்கள்.

விரால் மீன் என்றால் ஆங்கிலத்தில் எது என்று சொல்லுங்கள் ப்லீஸ்

இது யார் கொடுத்தது 12 துண்டுக்கு ஒரு கப் தேங்காயா?

Jaleelakamal

அன்புள்ள தாளிகா!

விரால் மீனுக்கு ஆங்கிலத்தில் பெயர் தெரியவில்லை. ஆனால் இங்கு எல்லா லூலு சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ஜே மார்ட்டிலும் அல் மனாமா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ‘காணான்’ என்ற பெயரில் கிடைக்கும். விரால் மீன் என்று கேட்டாலும் சொல்வார்கள். தமிழ் நாட்டில் இது குளங்களில் வளர்க்கப்பட்டு பின் விற்பனைக்கு வரும். மீன்களில் மிகவும் காஸ்ட்லியான மீன் அங்கு தற்போது இதுதான்.

அன்புள்ள ஜலீலா!

திடீரென்று புதிதாய் என்ன சந்தேகம்? இந்த சமையல் குறிப்பு என் பகுதியில்தானே வெளியாகி இருக்கிறது? சரியாக கவனிக்கவில்லையா?

இந்த சமையல் குறிப்பு என் மாமியார் காலத்திலிருந்து வழிவழியாய் வருவது. 12 மீன் துண்டுகளுக்கு ஒரு கப் தேங்காய் என்பது அதிகமில்லையே? ஒரு வேளை மிகச் சிறியதாக துண்டுகள் இருந்தால் நாம் கவனித்துப்பார்த்து விருப்பம்போல குறைத்தோ கூட்டியோ செய்து கொள்ளவேண்டியதுதான்.

மனோ அக்கா நல்ல இருக்கீங்களா? வீட்டில் அனைவரும் நலமா?

கவனிக்கல கீழே பெயர் இல்லை அதான் கேட்டேன். சந்தேகம் கேட்க, தேங்காய் அரைத்து ஊற்றும் போது கூட்டு அதிகமாகாதா, ஏனென்றால் நான் தேங்காய் அரைத்து ஊற்றி பொரித்ததில்லை அதான் கேட்டேன்.
முழு மீன் இரண்டுக்கு இந்த மசாலா சரியாக இருக்குமா?இன்று இரவு இதை செய்து பார்க்கத்தான் கேட்டேன்.

Jaleelakamal

அன்புள்ள ஜலீலா!

இந்த விரால் மீன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும். விரால் மட்டுமில்லை, எல்லா மீன் துண்டுகளிலும் இப்படித்தான் வறுவல் செய்வேன். எங்கள் பக்கத்தில் தேங்காய் இல்லாமல் மீன் வறுவல், மீன் குழம்பு எதுவுமே கிடையாது. தேங்காயை மற்ற பொருள்களுடன் கெட்டியாக அரைத்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்புடன் சேர்த்து பிசிற வேண்டும். மீன் துண்டுகள் சற்று மெல்லியதாக ஸ்லைஸ் போடப்பட்டிருந்தால் மசாலா நன்றாக ஊறி மிகவும் சுவையாக இருக்கும். மிளகாய்த்தூளை மட்டும் நம் தேவைக்கேற்ப சிறிது கூட்டலாம். மீனை வறுத்தெடுத்துக் கொண்டு அடியில் தேங்கும் இந்த மசாலாவையும் அதிகம் கறுக்காத நிலையில் அரித்து எடுத்து வைத்து அதையும் சாப்பாட்டுடனோ அல்லது சாதத்தில் பிசைந்தோ சாப்பிடுவது வழக்கம். முழு மீன் இரண்டு என்பது எத்தனை ஸ்லைஸ்கள் வரும் என்பதைப் பொறுத்தது. நான் குறிப்பிட்டுள்ள மசாலா 12 லிருந்து 15 துண்டுகள் வரை சரியாக இருக்கும். என் அளவு கப் என்பது 150 கிராம் வரை சரியாக இருக்கும்.

அன்புள்ள மனோ அக்கா
தற்பொழுது விதவிதமான மீனை சுவைக்கும் ஆவலில் இருக்கிறேன்...ப்லேக் பாம்ஃப்ரெட்,கிங் ஃபிஷ் ,ஷேரி,சுதான் கண்ணன்,சுல்தான் இப்ராஹிம்,ஜெஸ்,முள்ளன்,டோவர் சோல்(நங்கு), இறால் இதையெல்லாம் ட்ரை பன்னியிருக்கிறேன்...இதில் நீங்கள் சொன்வது சுல்தான் கண்ணனா?லேசான சிகப்பு கலந்த நிறத்தில் இருக்கும்...மிகவும் சுவையான மீன் அது

அன்புள்ள தாளிகா!

இந்த காணான் மீன் கறுப்பாக இருக்கும். உருண்டையாக நீளமாக இருக்கும். அதிகமாக முள் கிடையாது.