தேங்காய்பால் கருவாட்டுக் குழம்பு சமையல் குறிப்பு - படங்களுடன் - 12605 | அறுசுவை


தேங்காய்பால் கருவாட்டுக் குழம்பு

வழங்கியவர் : shadiqah
தேதி : செவ்வாய், 28/04/2009 - 11:15
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
5
1 vote
Your rating: None

 

 • தேங்காய்பால் - 2 கப்
 • புளிக்கரைசல் - கால் கப்
 • வஞ்சிரம் கருவாடு - 50 கிராம்
 • கத்திரிக்காய் - 2
 • உருளை அல்லது வாழைக்காய் - ஒன்று
 • மாங்காய் - ஒன்று
 • முருங்கைக்காய் - ஒன்று
 • வெங்காயம் - 2
 • தக்காளி - 3
 • பச்சைமிளகாய் - 2
 • கறிவேப்பிலை - சிறிது
 • காய்ந்த மொச்சை - அரை கப்
 • எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
 • மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
 • தனியா பவுடர் - 2 மேசைக்கரண்டி
 • உப்பு - சுவைக்கு

 

உருளை அல்லது வாழைக்காய், தோல் சீவிய மாங்காய், முருங்கைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றை 1 1/2 இஞ்ச் நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும். தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். கருவாட்டை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

எண்ணெய் பிரிந்ததும் அதனுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி சுத்தம் செய்த கருவாட்டுத் துண்டுகளை போட்டு கிளறவும்.

அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் தனியாத் தூள் சேர்த்து கிளறி விடவும்.

இந்த கலவையுடன் புளிக்கரைசலை ஊற்றி எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகும்படி கலக்கி விட்டி கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய்பால் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

வெறும் வாணலியில் மொச்சையை போட்டு வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து வடிகட்டி அதை குழம்பில் சேர்த்து கிளறி விடவும். மேலும் சிறிது நேரம் சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

சுவையான தேங்காய்பால் கருவாட்டுக் குழம்பு ரெடி. இது ப்ளைன் சாதம், சப்பாத்தி, கோதுமை தோசை, இடியாப்பம் போன்றவற்றிற்கு ஏற்றது. அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் <b> திருமதி. ஸாதிகா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள கருவாட்டுக் குழம்பு. நீங்களும் இதனை செய்து பார்த்து தங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

கருவாட்டில் உப்பு சேர்ந்திருப்பதால் குறைந்த அளவான உப்பே போதுமானது.தேங்காய் பால் கருவாட்டு குழம்பு

தேங்காய் பால் கருவாட்டு குழம்பு
ஸாதிகா அக்கா சூப்ப‌ர், ஆனால் க‌ருவாடு தான் இல்லை, ம‌ற்ற‌ எல்லா பொருட்க‌ளும் இருக்கு.
அருமையான‌ தெளிவான‌ குறிப்பு, எத்த‌னை பேர் ஜொள்ளு விட‌ போகிறார்க‌ளோ தெரிய‌ல‌ , இப்ப‌ ந‌ம்ம‌ அருசுவையில் க‌ர்பிணி பெண்க‌ள் தான் அதிக‌ம்.

Jaleelakamal

ஸாதிகா அக்கா,

ஸாதிகா அக்கா,
இப்போதான் திறந்து பார்க்கிறேன். இது உங்கள் முதல்க் குறிப்போ?. நல்ல அழகாக ஒழுங்காகச் செய்திருக்கிறீங்க.

நான் ஆரம்பம் முதல் இது ஜலீலாக்காவாகத்தான் இருக்கும், அவதான் அதிகம் பொருட்கள் சேர்த்துச் செய்யும் குறிப்புக்கள் கொடுக்கிறவ, என எண்ணிக்கொண்டே வந்தேன், முடிவில் நீங்கள். என்னிடம் கருவாடு இருக்கு, ஆனால் ஏனைய எல்லாப் பொருட்களிலும் சிலது இல்லை.

நானும் ஜலீலாக்காவும் கூட்டுச் சேர்ந்தால், செய்திடலாம்:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு ஜலீலா

நன்றி பின்னூட்டத்திற்கு.உண்மைதான்.கருவாடு சாப்பிடும் அனைவரையும் ஜொள்ளு விடத்தான் வைக்கும்.இந்த குழம்பு செய்த அன்று தங்கை தனிஷா போன் செய்து இருந்தார்.அப்பொழுது மதியம் மூன்று மணிக்கு மேல் இருக்கும்."சாப்பிட்டு விட்டீர்களா?"என்று கேட்டார்."இன்னும் இல்லை என்றேன்" அதற்கு அவர் அட,இந்த குழம்பை செய்து விட்டு இதுவரை சாப்பிடாமல் இருக்கின்றீர்களே"என்று ஆச்சர்யம் காட்டினார்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு அதிரா

நானும்ஜலீலா அக்கவும் கூட்டு சேர்ந்தால் செய்திடலாம் என்ற உங்கள் நகைசுவை உணர்வு எனக்கு சிரிப்பை வரவழைத்தது.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

என்னால்

என்னால் இதை நகல் எடுக்க முடியவில்லை.. படதுடன் வரும் குறிபுகள் நகல் எடுப்பது எப்படி

ஹாய் சாதிகா அக்கா

நேத்தே பார்த்துட்டேன். நாக்கில் எச்சு ரொம்ப் வேகமா ஊறிச்சு. வஞ்சிர கருவாடு வாங்கி இன்னைக்கு செய்துட்டேன். சுவை சும்ம சூப்பர். வீடுபுல்லா ஒரே கம கம வாசனைதான். உங்க ப்ரெண்டேசன் சூப்பர் அக்கா. பார்த்தவுடனே எல்லோரையும் இப்படி ஜொள்ளு விட வைப்பது நியாயமா :-(

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

Nimi

அன்பு நிமி,கூட்டாஞ்சோறு குறிப்புகளை நகல் எடுத்து விடலாம்.உங்களிடம் கலர் பிரிண்டர் இருந்தால் பிரிண்ட் போட்டுக்கொள்ளவும்.அல்லது பென் டிரைவில் காப்பி செய்து கலர் ஜெராக்ஸ் எடுக்கலாம்.மேலும் தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு தனிஷா

நினைத்தேன்.நீங்கள் அன்னிக்கு பேசும் பொழுதே வெகு சீக்கிரம் சமைத்து விடுவீர்கள் என்று.பாராட்டுகளுக்கு நன்றி தனி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

நன்றி

நன்றி ஸாதிகா நான் செய்து பார்கிறேன்.. உங்கள் குறிப்புக்ள் நன்றாக உள்ளன நான் எப்பொது தான் இந்த குறிப்புகளை பார்த்து சமையல் பழகுகிறேன்

தேங்காய்பால் கருவாட்டுக் குழம்பு

Shadiqah madam,

All your recipes are nice and specially it's a mouth watering recipe and inspiring us to try this one.We don't have experience in cooking.We have some basic doubts and it will be easy for us to cook this nice if u clear it.

can u give gram measurements for onion,tomato,brinjol,mochai and potato.

how many tablespoon of grated coconut (thengai thuruval) we have to use to get this coconut milk.

we have readymade 'kulambu milagai thool' and not dhaniya thool and chilipowder.instead of 2 teaspoons of chillipowder and 2 tablespoons of dhaniyapowder howmany teaspoons of kulambu milagai thool can i add for this kulambu.

Eagerly expecting your soon reply to make this delicious kulambu.

Thanks.