டோனற்

தேதி: April 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 1/8 லிட்டர்
பட்டர் - 90 கிராம்
வெனிலா சுகர் - 1/2 தேக்கரண்டி
மைதாமா - 500 கிராம்
ஈஸ்ட் - 40 கிராம்
சீனி - 1 தேக்கரண்டி
மெல்லிய சுடுநீர் - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
முட்டை - 1
சீனி - 65 கிராம்
ஐஸிங் சுகர் - 50 கிராம்


 

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, பட்டர், வெனிலா சுகரைச் சேர்த்து மெல்லிய சூடாக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் மைதாவைப் போட்டு நடுவில் குழியாக்கவும். அதற்குள் சீனி 1/2 தேக்கரண்டி, ஈஸ்ட்டைப் போட்டு அதன் மேல் மெல்லிய சுடுநீரை ஊற்றி சிறிது நேரம் விடவும்.
பின்பு முட்டை, சீனி, உப்பு போட்டு பாலை ஊற்றிக் குழைக்கவும். தேவையாயின் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
மாவை உருண்டையாக்கி ஒரு மணிநேரம் மூடி வைக்கவும். பின்பு மாவை எடுத்து உருளையால் உருட்டவும். 2,5 செ.மீ தடிப்பாக இருக்க வேண்டும்.
ஒரு கிளாசால் உருட்டிய மாவின் மேல் வட்டமாக வெட்டவும். பின்பு அந்த வட்டத்தின் நடுவில் ஒரு சின்ன கிளாஸால் வட்டம் வெட்டவும். பெரிய வட்டத்தை எடுத்து வைக்கவும்.
அப்படியே முழுவதையும் செய்து எடுத்து மூடி 15 நிமிடம் வைக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த மாவைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரித்த டோனற்றை கிச்சன் பேப்பரால் எண்ணெயை ஒற்றி எடுக்கவும். அதன் மேல் ஐஸிங் சுகரை தூவவும்.
நன்கு ஆறிய பின்பு பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வத்சலா மெடம். எத்தனையோ நாளாய் டோனற் ரெசிபி தெரியாமல் எப்படி செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் தந்துவிட்டீர்கள். நன்றி மெடம். ஆனால் ஒரு சந்தேகம் வனிலா சுகர் என்றால் என்ன?

அன்புடன்
ரிகா.

ஹாய் ரிகா, வனிலா சுகர் என்றால் வனிலா எசன்ஸ் மாதிரி தான் .இது பவுடராக இருக்கும். சுப்பமார்க்கற்ரில் கேக் அயிட்டங்களுடன் இருக்கும் பாருங்கள். அது கிடைக்காவிட்டால் வனிலா எசன்ஸைப் பாவியுங்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"