வாழைக்காய் பிரட்டல்

தேதி: April 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 400 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4 அல்லது 5 பற்கள்
கறித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
பால் - 100 மி.லி
சுடுத் தண்ணீர் - 100 மி.லி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
தேசிக்காய் - பாதி.
கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாழைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
வாழைக்காயை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் அதனுடன் கறித்தூள் சேர்த்து கிளறி விடவும்.
அதன் பின்னர் பாலையும் தண்ணீரையும் ஊற்றி உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் பொரித்து வைத்திருக்கும் வாழைக்காயை சேர்த்து பிரட்டி விட்டு வேக விடவும்.
குழம்பு நன்கு திக்கானதும் கறிவேப்பிலை, கரம் மசாலா தூள் போட்டு பிரட்டி விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைத்து மேலே தேசிக்காயை பிழிந்து விட்டு பிரட்டி வைக்கவும்.
சுவையான வாழைக்காய் பிரட்டல். சூடாக பரிமாறினால் நன்கு சுவையாக இருக்கும். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதிராங்கோ நான் முகப்பை (பிலைட்) பார்த்ததுமே நினைத்தேன் இது அதிரா குற்ப்பா இருக்கும்னு வந்து பார்த்தேன் உங்களோடதேதான்...நான் வாழைக்காயை மட்டனுக்குதான் போடுவோம் இப்படி பண்ணியது இல்லை இப்ப ஊர் போகும் பிஸியில் இருக்கேன் வந்ததும் செய்து பார்த்துட்டு பதில் போடுகிறேன் :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கலோ அதிரா! வாழைக்காய் பிரட்டல் செய்யும் முறையை படத்துடன் காட்டியமைக்கு மிகவும் நன்றி, நான் இதேபோல் கத்தரிக்காய் பிரட்டல் செய்வேன்.வாழைக்காய் பிரட்டல் ட்ரை பன்னி பார்த்து பின் கருத்து தெருவிக்கின்றேன்.நன்றி அதிரா மீண்டும் சந்திப்போம்:)anpudan Rani.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் அதிரா மேடம்
எப்படி இருக்கிறிங்கள்?இது வித்தியாசமான பிரட்டல் கட்டாயம் செய்துபர்கிறேன் குறிப்புக்கு நன்றி. கரம் மசாலா தூள் எண்டால் என்ன. கடையில வேண்டிரிங்கல அல்லது செய்வத நேரம் இருந்த பதில் போடவும் நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

கட்டாயம் செய்து பார்க்கனும்,அதுக்கு முன்னால டவுட்..எதுக்கு பால் சேர்க்கனும்?பால் சேர்த்தால் கொஞ்சம் இனிப்பா இருக்காதா?இல்ல காரம் சேர்ப்பதால் இனிப்பு தெரியாதா? பால் சேர்த்ததும் திரிஞ்சு போகாதா? இல்ல தேங்காய் பாலா? கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது விளக்குங்க..

வாழைக்காய் பிரட்டல் பார்க்கும்பொழுதே நாக்கில் எச்சில் ஊறுகிறது.ஆனால் கலரைபார்த்தால் ரொம்ப காரமாக தெரிகிறது.இந்தவாரம் செய்துபார்க்கவேண்டும்.
சவுதி செல்வி

சவுதி செல்வி

சமையலில் கில்லாடியாகத்தான் இருப்பிர்கள் போல் இருக்கின்றதே?சூப்பர் ஆக சமைத்து அசத்துகின்றீர்கள்?பொறுமையாக படமும் எடுத்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுகின்றீர்கள்.சபாஷ். வாழைக்காய் பிரட்டல் பார்க்கவே அழகாக உள்ளது.கண்டிப்பாக செய்து பார்த்து விடுகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

என் வாழைக்காய்...
கறியை ரசித்து கருத்துச் சொல்லியுள்ள அனைவருக்கும் மிக்க நன்றி.

மர்ழியா, நன்றி. ஊருக்குப் போய் வந்து மறந்துவிடக்கூடாது.

ராணி மிக்க நன்றி. இதுவரை நான் உங்களை எங்கேயும் காணவில்லையே... இது ஊர் வாழைக்காயில் செய்தால்தான் அதிக சுவையாக இருக்கென்று அம்மா சொல்லுவா. எனக்கு இந்த சூப்பர் மார்கட் வாழைக்காய்தான் கிடைக்கும்.

சுகா செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும். கரம் மசாலா தூள் என்பது கடைகளில் கிடைக்கும். வாசனைக்காக போடுவது. எனக்கு அம்மாதான் செய்து அனுப்புவா. பெருன்ஞ்சீரகமும் வாசனைப்பொருட்களும் சேர்த்து வறுத்து அரைப்பது. அத்துடன் கறியையும் நல்ல கலராக காட்டும்.

சந்தோ, விரும்பாவிட்டால் பால் சேர்க்காமலும் விடலாம். ஆனால் என் கறித்தூள் காரம் அதிகமென்பதால் பால் சேர்ப்பேன். திரையாது. இலங்கையிலே பால் சேர்க்காமல் இக் கறி செய்வதில்லை. இங்குவந்தபின்னர்தான் பால் சேர்க்காமலும் செய்யப் பழகிவிட்டோம். நான் எப்பவுமே பசுப்பால்தான் பாவிக்கிறேன். தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். அதிகம் இனிமையாக இருக்காது.

சவூதி செல்வி. உங்கள் அளவுக்கேற்ப காரத்தைக் குறையுங்கள். குழம்பாக இருந்தால்தான் உறைப்பாக இருக்கும். இப்படி பிரட்டலாக எடுக்கிறபோது எந்தக் காரமும் குறைந்துவிடும்.

ஷாதிகா அக்கா, நான் சமைக்கத் தொடங்கி சில வருடங்களே ஆகிறது. ஆனால் சின்ன வயதிலிருந்தே, அம்மா சமைக்கும்போது பக்கத்திலேயே நிற்பேன். அம்மாவும் ஒவ்வொரு கறிக்கும் விளக்கம் சொல்லுவா.
இதுக்கு முதல்பால் மட்டும்தான்....
இதுக்கு கப்பிப்பால் மட்டும்தான்...
இதுக்கு கட்டாயம் வெந்தயம் போடவேண்டும்...
இதுக்கு பழப்புளிதான் சுவை....
இப்படி சின்னச் சின்ன விஷயங்கள் சொல்லச் சொல்ல என் மனதில் எல்லாமே பதிந்திருந்தது. பின்னர் நான், பொறுப்பாகச் சமைக்கத் தொடங்கியபோது பெரிய கஸ்டமாகத் தெரியவில்லை எனக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிகவும் நன்றாக இருந்தது

நன்றி
தியாகு

தியாகு செய்துபார்த்துவிட்டுப் பேசாமல் இருக்காமல், அதை இங்கு தெரிவித்தமைக்கு மிக்க மிக்க நன்றிகள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா வாழக்காய் கறி பார்க்க வே நல்ல இருக்கு நீங்கள் எல்லாத்துக்கும் பால் மற்றும் எலுமிச்சையை பாவிக்கிறீர்கள், அதான் எனக்கு ஒரே எபப்டி செய்வது என்று பால் சேர்த்து செய்ததிலலை இபப் தான் வாழைப்பூவை ஒரு வெட்டு மட்டையில் போட்டு தோலோடு உங்கள் முறையில் செய்து பார்க்க வாங்கி வந்துள்ளேன்

Jaleelakamal

ஜலீலாக்கா செய்து பாருங்கோ.

வாழைப்பொத்தி வாங்கினனீங்களோ? மிகவும் மெல்லிசாக வெட்ட வேண்டும். பம்பிளிமாஸ்மாதிரி துண்டு போட்டுவிட்டுப் பிறகு அதிராவைக் குறை சொல்லப்படாது:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா.... வாழைக்காய் பிரட்டல் வித்தியாசமான சுவை. நல்லா இருந்தது. நாங்க எப்பவும் பால், எலுமிச்சை சேர்த்ததில்லை. இதுவே முதல் முறை. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா... மிக்க நன்றி. நான் இங்கிருப்பேனா? அங்கிருப்பேனா? அங்கே பூஷா ரைத்தான் காவலுக்கு விட்டுவிட்டு வந்திருக்கிறேன்:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதரா நிங்கல் சைத வாலைகாய் வருவல் நன்ராக இருந்தது அனால் கரித்தூள் ஏண்றால் என்ன

உங்களுடைய இந்த குறிப்பு செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது .நன்றி...

Anything is good for something