வீட்டு பஞ்சமிர்தம்

தேதி: April 29, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வாழைப்பழம் -- 2 என்னம்
பேரிச்சம் பழம் -- 5 என்னம்
கல்கண்டு -- 1/4 கப்
வெல்லம் / நாட்டு சர்க்கரை -- 1/2 கப்
ஏலக்காய் -- 2 என்னம்
தேன் -- 2 ஸ்பூன்
நெய் -- 2 ஸ்பூன்


 

நன்றாக பழுத்த வாழைப்பழத்தை நசுக்கி கையால் பிசைந்து கொள்ளவும்.
பேரிச்சம் பழத்தை நீளநீளமாக் நறுக்கவும்.
வெல்லத்தை நன்றாக தட்டி பொடிக்கவும். நாட்டு சர்க்கரை என்றால் நன்றாக இருக்கும். பொடிக்க தேவையில்லை. அப்படியே கலக்கலாம்.
கல்கண்டு, சர்க்கரை, தேன், பேரிச்சம் பழம், வாழைப்பழம் சேர்ந்ததுதான் பஞ்சாமிர்தம்.
இதனுடன் நெய், ஏலக்காய் சேர்த்து கலந்தால் நல்ல ருசியுடன் கூடிய பஞ்சாமிர்தம் கிடைக்கும்.
ரெடி.


இது சத்தான இரும்பு சத்துடன் கூடிய ஒரு இனிப்பு. குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். மிகவும் நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சுபா! பன்சாமிர்தம் செய்து சுவைத்தேன்.
பன்சாமிர்தம் அமிர்தமேதான் செய்வதும் மிகவும் சுலபம்.
சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணலாம். நன்றியுடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.