பருப்பு வகைகளை பூச்சிகள் அண்டாமல் எப்படி பாதுகாப்பது

தோழிகளே,
நான் அருசுவைக்கு புதியவள்.பருப்புகளை (துவரம் பருப்பு,பாசி பருப்பு) பூச்சிகள் வராமல் எப்படி நீன்ட நாட்கள் உபயோகிப்பது.தோழிகளின் பதிலுக்கக காத்திருகிரேன்.

ஹாய் vasulaksh

வாங்க வாங்க அறுசுவைக்கு.
பருப்பில் வேப்பிலை அல்லது வசம்பு போட்டுவைத்தால் பூச்சிகள் வராது.

என்றும் அன்புடன்
மைதிலி

Mb

பருப்பு வகைகள் கொஞ்சம்தான் இருக்கின்றன என்றால், வெறும் வாணலியில் இட்டு சிறிதாக வறுத்து வைத்தால் வண்டு வராது.

ஹாய் மைதிலி,
ரொம்ப நன்றி.என்னை அருசுவைக்கு வரவேட்ரதுக்கும் உங்கள் பதிலுக்கும்.

வாசு

Vasu

ரொம்ப நன்றி உங்கள் பதிலுக்கு.நான் வசிக்கும் நாட்டில் துவரம் பருப்பு,பாசி பருப்பு கிடைபதில்லை.அதனால் இந்தியாவில் இருந்து நிறைய வாங்கி வந்திருகிறேன்.

வாசு

Vasu

வாசுலஷ்மி[பெயர் சரியா]பருப்பில் காய்ந்த மிளகாய் அல்லது துணியில் கல் உப்பை மூட்டை கட்டி போட்டால் எறும்போ பூச்சிகளோ வராது.

நன்றி மேனகா,
ரொம்ப நன்றி உங்கள் பதிலுக்கு. என் பெயர் vasulaksh.

Vasu

மேலும் சில பதிவுகள்