ரஸமலாய் (அவன் செய்முறை)

தேதி: April 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரிக்கோட்டா சீஸ் - ஒரு டப்பா
சர்க்கரை - ஒரு கப்
ஏலத்தூள் - அரை தேக்கரண்டி
பாதாம் & பிஸ்தா - அரை தேக்கரண்டி (உடைத்தது)
க்ரீம் உள்ள பால் - அரை டப்பா


 

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி குறைந்த தணலில் வைத்து காய்ச்சவும்.
பால் கெட்டியாக ஆனதும் அரை கப் சர்க்கரையை சேர்த்து மீண்டும் பாலை 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் பாலை நன்கு ஆற வைத்து அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.
மலாய் செய்ய: ரிக்கோட்டா சீஸுடன் அரை கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
இந்த கலவையை பேக்கிங் பாத்திரத்தில் அல்லது கப் கேக் செய்ய பயன்படுத்தும் கப் மோல்டில் முக்கால் பாகத்திற்கு ஊற்றி வைக்கவும்.
அவனை 350 டிகிரி முற்சூடு செய்து அதில் ட்ரேயை வைத்து 35 நிமிடங்கள் பேக் செய்து இளம் பொன்நிறமாக துவங்கியதும் எடுத்து விடவும். வெந்ததா என்பதை பார்க்க டுத் பிக் அல்லது போர்க்கை வைத்து சரி பார்த்துக் கொள்ளவும்.
பேக் செய்த மலாயை எடுத்து ஆற விடவும். ஆறியதும் அதன் மேல் கொதிக்க வைத்துள்ள பாலை ஊற்றி மேலே உலர்ந்த பருப்புகளை தூவி அலங்கரிக்கவும். இதை அப்படியேவும் பரிமாறலாம், அல்லது ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம். அறுசுவை நேயர்களுக்காக கேரள உணவுக்குறிப்புகளை வழங்கி வரும் <b> திருமதி. விஜி சத்யா </b> அவர்கள் இந்த ரஸமலாயை தயாரித்து காட்டியுள்ளார். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் விஜி,
ரசமலாய் ரொம்ப அழகா செய்து காட்டி இருக்கிங்க. நான்கூட இந்த முறையில் (ரிக்கோட்டா சீஸ் உபயோகித்து) பார்ட்டிஸ் வைக்கும்போது ரசமலாய் தயாரிப்பேன். ஆனால், நீங்க அதை மபிஃன் பேக் செய்யும் பேனில் போட்டு பேக் செய்து எடுத்தவிதம் ரொம்ப நீட், நல்ல ஐடியா!. பார்க்க ரொம்ப அழகா இருக்கு. பிரெஸண்டேஷனும் நைஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

வாவ் சூப்பர் விஜி... இவ்வளவு ஈஸியா இந்த
ரசமலாய், எனக்கு பாலில் செய்யும் எல்லா இனிப்பும் பிடிக்கும்... நான் இதுவரைக்கும் ரிக்கோட்டா சீஸ் உபயோகித்து ஜாமுன் மட்டும்தான் செய்து இருக்கேன்... இதை சீக்கிரம் பன்னி பாக்கனும்.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

சூப்பர் ஐடியா, மஃபின் டின்னில் பேக் செய்வது. எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போச்சு. நான் கேக் பானில்தான் பேக் செய்வேன். உங்க மெத்தட் நல்லா இருக்கு. ஃபோட்டோஸ் ரொம்ப நல்லா இருக்கு. நல்லா செய்து இருக்கீங்க விஜி.

மிக அழகாக செய்து காட்டியிருக்கிறீங்க. நானும் இப்படியான குறிப்புக்கள், விதம் விதமாகச் செய்து பழகவேண்டும் என நினைப்பேன்... நினைப்பது மட்டும்தான்.... இனிச் செய்து பார்க்கப்போகிறேன். பார்க்கவே சாப்பிடத் தூண்டுகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

விஜி ரஸமலாய் ஒரு புதிய முறையில் போட்டு அசத்தி இருக்கீங்க. நான் வேறு முறையில் செய்து அனுப்பி உளேன், இது ரஸமலாய் குறீப்பு வந்ததும் என்னுடையது தான் என்று நினைத்தேன்.

இது ஒரு விபெரெண்டா இருக்கு. சூப்பர்

Jaleelakamal

ஹாய் சத்யா மேடம்,

நான் சிங்கப்பூர் இருக்கிறேன்...இங்கு ரிக்கோட்டா சீஸ் எங்கு கிடைக்கும் என தெரியவில்லை...•ரிக்கோட்டா சீஸ் கு பதிலா cream cheese use பணலமா....இல்லை, எனில் வேறு எந்த cheese use பண்லாம்?....சிங்கப்பூர் friends... "ரிக்கோட்டா சீஸ் " எங்கு கிடைக்கும் என சொலவும் .......

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் மேடம்,

நான் சிங்கப்பூர் இருக்கிறேன்...இங்கு ரிக்கோட்டா சீஸ் எங்கு கிடைக்கும் என தெரியவில்லை...•ரிக்கோட்டா சீஸ் கு பதிலா cream cheese use பணலமா....இல்லை, எனில் வேறு எந்த cheese use பண்லாம்?....சிங்கப்பூர் friends... "ரிக்கோட்டா சீஸ் " எங்கு கிடைக்கும் என சொலவும் .......

அன்புடன்
ஸ்ரீ

ரிக்கோட்ட சீஸ் எங்கு கிடைக்கும் அவன் இல்லைன்ன என்ன செய்ரது ப்லீஸ் சொல்லுங்கப்பா நான் இன்னக்கி செய்யலாம்னு இருக்கேன்