செயற்கை பூச்செடி செய்வது எப்படி?

தேதி: May 1, 2009

3
Average: 3 (1 vote)

 

ஒயர்(பச்சை நிறம்)
கம் டேப்
கத்திரிக்கோல்
இலைகள் - 6
பூக்கள் - 12
பூ செடி செய்ய கம்பி
மொட்டு(வெள்ளை நிறம்) - 11

 

முதலில் பச்சை நிற ஒயரை 3 இஞ்ச் அளவில் 5 துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். 6 இஞ்ச் அளவில் 12 துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். அதே 6 இஞ்ச் அளவில் 6 துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். மேலே கொடுத்திருக்கும் மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒயரின் முனைகளை கூர்மையாக வெட்டிக் கொள்ளவும். அதில் 3 இஞ்ச் அளவில் இருக்கும் ஒயர்களின் முனைகளில் மொக்குகளை மட்டும் சொருகவும்.
6 இஞ்ச் அளவில் இருக்கும் 12 ஒயர்களில் பூக்களை மட்டும் சொருகவும். மேலும் 6 இஞ்ச் அளவில் இருக்கும் 6 ஒயர்களில் முதலில் மொக்கை சொருகிவிட்டு ஒயரின் அடிவழியாக இலைகளை சொருகவும். இதைப் போல் எல்லாவற்றிலும் சொருகி வைத்துக் கொள்ளவும்.
பூ செடி செய்யும் கம்பியில் பச்சை நிற ஒயரை அடிவழியாக விட்டு இறுக்கமாக முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். பிறகு ஒயரை ஒரு முறை கம்பியில் சுற்றி விடவும்.
அதன் பிறகு மறுமுறை கம்பியில் ஒயரை சுற்றும் போது ஒயரை மேலே எடுத்து கட்டை விரலால் பிடித்து கொண்டு, ஒயரின் முனையை கம்பியின் அடிவழியாக எடுத்து மேலே பிடித்திருக்கும் ஒயரின் ஓட்டையில் விட்டு இழுக்கவும்.
அந்த ஒயரை மேல் நோக்கி இழுத்தால் கம்பியின் மேல் இப்போது கூர்மையான ஒரு முடிச்சு போல் இருக்கும்.
இதைப்போல ஒரு சுற்று மற்றும் ஒரு முடிச்சி போட்டு கம்பி முழுவதும் ஆரம்பித்த இடம் வரை போட்டு முடித்துக் கொள்ளவும். கடைசியில் முடிச்சி போட்டு ஒயரை வெட்டி விடவும்.
கம்பியின் மேல் முனையில் இருந்து கம் டேப்பை அரை இஞ்ச் அளவிற்கு சுற்றி விட்டு அதில் மொக்கு மட்டும் சொருகி வைத்திருக்கும் 5 ஒயர்களையும் விரித்தாற்ப் போல வைத்து கம் டேப்பை இறுக்கமாக சுற்றவும்.
அதன் பிறகு பூக்கள் சொருகி வைத்திருக்கும் ஒயர்களை எதிர் எதிர் திசையில் இருப்பதுப் போல் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து டேப்பை சுற்றவும்.
பூக்களை வைத்த பிறகு அதற்கு அடியில் மொட்டுடன் இருக்கும் இலைகள் சொருகிய ஒயரை எடுத்து எதிர் எதிர் திசையில் இருப்பதுப் போல் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து அதன் மேல் டேப்பை சுற்றவும்.
அதன் பின்னர் கீழ் பகுதியில் இருக்கும் கம்பி தெரியாமல் இருக்க கம்பி முழுவதும் கம் டேப்பை சுற்றி விடவும்.
அழகிய செயற்கை பூக்கள் கொண்ட பூச்செடி தயார். இதைப்போல் நம் விருப்பத்திற்கு ஏற்ற பூக்களைக் கொண்டு தயார் செய்யலாம்.
இந்த செயற்கை பூச்செடியை செய்து காட்டியவர் திருமதி. எஸ்தர் அவர்கள். கூடைகள் பின்னுதல், அலங்காரப் பொருட்கள் செய்தல், பொம்மைகள் செய்தல் என அனைத்து வகை கைவினைப்பொருட்கள் செய்வதிலும் முறையான பயிற்சி எடுத்து திறன் வளர்த்துக்கொண்டவர்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிகவும் அழகாக இருக்கு. கிட்டத்தட்ட இதேபோல் ஒன்று என்னிடமும் இருக்கு.

பேப்பர் வாங்கி, மெழுகு ஊத்தி, பூக்கள் செய்து, பின்னர் இப்படிச் செய்வார்கள், பார்த்திருக்கிறேன், அப்படிக்குறிப்பும் இருந்தால் சொல்லுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்கள் கைவேலை மிகவும் அழகாக இருக்கிறது எஸ்தர். அந்த ஸ்டான்ட் அப்படியே வாங்கியதா அல்லது நீங்கள் செய்தீர்களா?

‍- இமா க்றிஸ்

அன்பு சகோதரி எஸ்தர்! உங்கள் பூச்செடி ரொம்ப சூப்பர்! இதே ஸ்டேண்ட் வைத்து நெல்லிமரம் செய்துள்ளேன். நீங்கள் பயன்படுத்தியுள்ள பூ, துணி பூவா, ப்ளாஸ்டிக் பூவா? ஃப்ளவர் வாஷ் செய்வதற்காக இதுபோன்ற பூதான் தேடினேன். கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கிறது? முடிந்தால் சொல்லுங்கள்.

அன்புள்ள இமா! நலமா? அந்த ஸ்டேண்ட் அப்படியே கிடைக்கும். இதற்கு முன்பு யாரோ ஒரு குடை செய்து காட்டியிருந்தார்களே, அதுகூட ரெடிமேட் கம்பிதான். பல வடிவங்களில் கம்பிகள் கிடைக்கிறது.

குடைக் குறிப்பு பார்த்தபோதே நினைத்தேன். தகவலுக்கு நன்றி அஸ்மா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்