அவன் சிக்கன் ரைஸ்

தேதி: May 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கோழிக் கால் - ஒரு கிலோ
பாசுமதி அரிசி - 750 கிராம்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
குடைமிளகாய் - ஒன்று
தக்காளி - 2
தந்தூரிப் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 அல்லது 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கோழிக்காலை தோல் நீக்கி சுத்தம் செய்து ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கோழித் துண்டுகளுடன் தந்தூரிப் பவுடர், உப்பு சேர்த்து பிரட்டி 30 நிமிடம் வைத்திருக்கவும். அரிசியை முக்கால் பதத்திற்கு சாதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி உப்பு போட்டு வைக்கவும்.
அவனை முற்சூடு செய்து வைக்கவும். அவன் ட்ரேயில் பட்டர் தடவி கோழித்துண்டுகளை வைத்து அவனில் 200 F ல் வைக்கவும்.
30 நிமிடங்களுக்கு பின்னர் கோழித்துண்டுகளை திருப்பி விடவும்.
10 நிமிடங்களுக்கு பின் வெளியே எடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு மீண்டும் உள்ளே வைக்கவும்.
அதன் பின்னர் 10 நிமிடங்கள் கழித்து எடுத்து 2 கப் தண்ணீரில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கரைத்து அதில் ஊற்றி உள்ளே வைக்கவும்.
15 நிமிடத்திற்கு பின் எடுத்து முக்கால் பதம் வெந்த சாதத்தைப் போட்டு கிளறி அதன் மேல் குடைமிளகாயை தூவி மீண்டும் வைக்கவும்.
10 நிமிடம் ஆனதும் சாதத்தைக் கிளறி அவனில் வைக்கவும். 5 நிமிடத்திற்கு பின்பு வெளியே எடுக்கவும். அவனில் வைத்திருந்தால் சாதம் காய்ந்து விடும்.
சிக்கன் ரைஸ் ரெடி. வெங்காய தயிர் பச்சடி மற்றும் முட்டையுடன் பரிமாறவும். அறுசுவை நேயர்களுக்காக இந்த சிக்கன் ரைஸை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வத்சலா... வத்சலா.... பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் குறிப்பு முன்னால் வந்து என்னைத் தடுமாற வைக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை வேறு. கொஞ்சப் பொருட்களோடு அழகாகச் செய்திருக்கிறீங்கள். மிகவும் நன்றாக இருக்கு. அதுவும் அவித்த முட்டையை மேலே வைத்திருப்பதால் எனக்கு பொறுமையே போய் விட்டது.

இதைப் பார்த்ததும்தான் நினைவு வருகிறது. போனகிழமை ஜலீலாக்காவின் BBQ சிக்கின் செய்து படமும் எடுத்தேன், இன்னும் சொல்லவேயில்லை.

ஒவ்வொரு குறிப்பின் கீழும், மெல்லிய பெண்ணின் படத்தைப் போட்டு எம் உடம்பைக் குறைக்கும்படி ஞாபகப்படுத்துவதுபோலிருக்கு அட்மினின் "அட்", அதைப் பார்த்ததும் எனக்கு சமைத்துச் சாப்பிடும் ஆசை போய்விடுகிறதே:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹலோ வத்சலா உங்களுடைய பிரியாணி வாயுறுது நல்ல சுகமானமுறை குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அதிரா, இன்று வெள்ளிக்கிழமை நாளை சாப்பிடலாம் தானே! உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
சுகா,உங்களுக்கு வாய்யூறுகிறதா செய்து பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நான் செய்யும் பொழுது, முதலில் வதக்க வேண்டியவைகளை அடி கனமான பாத்திரத்தில் வதக்கி அதில் சிக்கனையும் கலந்து நன்கு வேகும் வரை வதக்கிக் கொள்வேன். எலெக்ட்ரிக் குக்கரில் ஒரு மணி நேரம் வூற வைத்த பாஸ்மதி அரிசியை அரை வேக்காடு சமைத்து அதை உதிரியாக அவனில் வைக்கும் பாத்திரத்தில் கொட்டி அதில் சிக்கன் கலவையையும் கொட்டி கலந்து அலுமினியம் பேப்பர் வைத்து நன்றாக மூடிவிடுவேன். இதை 300 டிகிரி முற்சூடு செய்த அவனில் நாற்பது நிமிடங்கள் வைத்து அவனை ஆப் செய்து, பத்து நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்தால் தம் பிரியாணி போல் நன்றாக சாதத்தில் மசாலா இறங்கி இருக்கும். ஒரு முறை கலக்கி விட்டு "fried onion" தூவி பரிமாறலாம்.
"Tough times never last, but tough people do
& Tough minded faith for tender hearted people" -Robert H. Schuller

"Tough times never last, but tough people do
& Tough minded faith for tender hearted people" -Robert H. Schuller