மஞ்சள்பூசணி எரிச்சேரி

தேதி: May 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மஞ்சள் பூசணி - ஒன்று
காராமணி பயிறு - ஒரு கப்
தேங்காய் - 3 துண்டு
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மஞ்சள் பூசணியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். காராமணி பயிறை வேக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின மஞ்சள் பூசணிக்காயை போட்டு உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
பூசணிக்காய் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை அதில் சேர்த்து கிளறி விடவும்.
5 நிமிடங்கள் கழித்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பயிறை போட்டு கிளறவும்.
இந்த கலவை 10 நிமிடம் வரை நன்கு கொதித்ததும் இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கி வைத்திருக்கும் எரிச்சேரியில் கொட்டவும்.
சுவையான எரிச்சேரி தயார். இது ஒரு கேரளா வகை கூட்டு.
அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. மைதிலி பாபு </b> அவர்கள் இந்த மஞ்சள் பூசணி எரிச்சேரி குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எங்க ஊறு கூட்டு ரொம்ப நன்றாக இருக்கும். சூடு சாத்திற்க்கு தொட்டு சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயில் தாளிட்து கொட்டினால் கேரளா சுவை அப்படியே இருக்கும். நன்றாக இருக்கு.

மைதிலி, மஞ்சள் பூசணியும் காராமணியும் சேர்த்து செய்தது பார்க்க அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கு.

இரு குட்டீசும் உங்கள் குழந்தைகளா? அழகாக இருக்கிறார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்