பருப்பு ரசம்

வழங்கியவர் : mythilibabu
தேதி : Sat, 02/05/2009 - 22:25
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : 20-25நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு
- துவரம் பருப்பு - அரை கப்
- தக்காளி - இரண்டு
- பச்சை மிளகாய் - 2அல்லது3
- மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
- தனியா தூள் - முன்று தேக்கரண்டி
- இஞ்சி - ஒரு துண்டு
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- புளி - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- தாளிக்க:
- நெய் - ஒரு தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- பெருங்காயம் - சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிதளவு
- ஒரு கப் தண்ணீர் ஊற்றி புளியை கரைத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தக்காளி பொடியாக நறுக்கி போடவும், பச்சை மிளகாய் கீறி போடவும், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சியை நசுக்கி போடவும், கொத்தமல்லி, உப்பு சேர்த்து.
- கரைத்த புளியுடன் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- இதற்க்கிடையே துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
- பருப்பு நன்கு வெந்ததும், பருப்பை கரைத்து கொதிக்கும் ரசத்தில் விடவும்.
- மறுபடியும் ஒரு கொதி வந்ததும் ஆப் பண்ணவும்.
- ஒரு வாணலியில் நெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
மைதிலி,
இன்று உங்க பருப்புரசம் செய்தேன்.ரசப்பொடி இல்லாமலே நன்றாக இருந்தது.குறிப்புக்கு நன்றி