வேர்க்கடலை அல்வா

தேதி: May 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேர்க்கடலை - 1/2 கிலோ
சர்க்கரை - 400 கிராம்
பால் - 1 லிட்டர்
ஏலப்பொடி - 1 பின்ச்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்


 

வேர்க்கடலையை வறுத்து தோல் அகற்றி ஒரு கப் பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
நாண் ஸ்டிக் கடாயில் மீதமுள்ள பாலை விட்டு அரைத்து விழுதை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
இதனை அடுப்பில் வைத்து கிளறவும். பாதி அளவு வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
வற்றி வரும் பொழுது நெய்யை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.
கெட்டியான பதம் வந்ததும் ஏலப்பொடி சேர்த்துக்கிளறி இறக்கி விடவும்.
இதற்கு பருப்புவகைகள், அதிகப்படியான நெய் எதுவும் தேவை இல்லை.
சுலபமாக செய்யக்கூடிய சுவையான அல்வா இது.
மணமும், சுவையும் மீண்டும் மீண்டும் இந்த அல்வாவை செய்யத்தூண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

படிக்கும் போதே செய்ய ஆசையா இருக்கு செய்து சாப்பிட்டு விட்டு சொல்றேன் ok

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு, ஆமென்

அன்பு ராஜிமகேஷ்,
நன்றி பின்னூட்டத்திற்கு.என் வயதில் நீங்களும் இப்படித்தான் அசத்துவீர்கள்.பொறுத்திருங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website