மைதா சுருள் கேக்

தேதி: May 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (2 votes)

 

மைதா - 300 கிராம்
கெட்டித்தேங்காய்ப்பால் - 1 1/2கப்
சர்க்கரை - 200 கிராம்
ஏலப்பொடி - 1 பின்ச்
முட்டை - 1
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
சமையல் சோடா - 2 பின்ச்


 

தேங்காய்ப்பாலில், முட்டை, சர்க்கரை, ஏலப்பொடி, நெய், சோடா ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
சர்க்கரை நன்கு கரைந்து இருக்க வேண்டும்
இந்தக்கலவையில் மைதாவை சிறிது, சிறிதாக தூவி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
சாத்துக்குடிப்பழ அளவு மாவை எடுத்து உருண்டையாக்கி சப்பாத்திக்கட்டையில் வைத்து பெரிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
சப்பாத்தியை பாய் போல் இறுக்கமாக சுருட்டவும்.
இப்பொழுது குழாய்ப்போல் வடிவம் கிடைக்கும்.
இதனை ஒரு இன்ச் பருமனுக்கு சிறிய சக்கரங்களாக கத்தியால் வெட்டிக்கொள்ளவும்.
சூடான எண்ணெயில் இளம் நெருப்பில் பொன்னிறத்தில் மொறு மொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.
குழந்தைகள் விரும்பும் அருமையான ஸ்நாக்ஸ்


மேலும் சில குறிப்புகள்