அவித்த கொழுக்கட்டை

தேதி: May 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

வறுத்த மாவு - 2 கப்
வெங்காயம் - 2 பெரியது (பொடியாக அரிந்தது)
தேங்காய் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - மூன்று (பொடியாக அரிந்தது)
உப்பு - தேவைக்கு


 

வறுத்த மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு விரவவும்.
தண்ணீரை கொதிக்க விட்டு அதில் உப்பு சேர்த்து மாவில் தெளித்து தெளித்து நன்கு குழைத்து விரவவும்.
கலந்த மாவை பத்து நிமிடம் ஊற விடவும்.
பிறகு சிறிய சிறிய கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பானையில் ஈரத்துணியை விரித்து அவித்து எடுக்கவும்.
இத‌ற்கு தொட்டு கொள்ள‌ மாசி வ‌த‌க்கிய‌து ந‌ன்றாக இருக்கும், பிள்ளைக‌ளுக்கு ச‌ர்க்க‌ரை தொட்டு கொடுக்க‌லாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலா அக்கா,

அரிசி மாவு தானே உபயோகிக்க வேண்டும்? மாசி என்றால் என்ன?

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா