தக்காளி சட்னி

தேதி: May 3, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பழுத்த தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 4
பச்சை மிளகாய் - 3-4
உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி


 

சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் எல்லாம் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, சின்னவெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.
வதக்கியவை ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
பின்பு தாளிப்பு கரண்டியில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்ததில் கொட்டவும்.
சுவையான தக்காளி சட்னி ரெடி. சூடான இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மைதிலி, இன்று உங்கள் தக்காளி சட்னி செய்தேன். செய்வது மிகவும் சுலபமாகவும் ருசியாகவும் இருந்தது.

நல்ல ரேசப்பி தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.