சொதி

தேதி: May 3, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் பால் (முதலில் எடுக்கும் கெட்டிப் பால்) - ஒன்றரை கப்
இரண்டாம் முறை எடுக்கும் தேங்காய்பால் - 2 கப்


 

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்குங்கள்.
பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும், பூண்டை தோலுரித்து நசுக்கி கொள்ளவும்.
இரண்டாம் தேங்காய்ப்பாலை அடுப்பில் வைத்து அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கை விடாமல் கிளறி வேகவிடுங்கள்.
வெங்காயம் வெந்ததும் இறக்கி, முதல் தேங்காய்ப்பால், கறிவேப்பிலை சேருங்கள்.
ஆப்பத்துக்கும் இடியாப்பத்துக்கும் அருமையான சைட்டிஷ்.


மேலும் சில குறிப்புகள்