புரோசன் பீஸ் ரைஸ்

தேதி: May 4, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாசுமதி அரிசி - ஒரு கப்
புரோசன் பீஸ்(பட்டாணி) - கால் கப்
எண்ணெய் + பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகு - ஐந்து
சீரகம் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்க‌ர‌ண்டி (அ) தேவைக்கு
கேரட் - ஒரு தேக்கரண்டி (பொடியாக அரிந்தது)


 

அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் + பட்டரை ஊற்றி மிளகு, சீரகம், கேரட், பீஸ் போட்டு லேசாக வதக்கவும்.
த‌ண்ணீர் ஒன்றுக்கு ஒன்றரை க‌ப் வீத‌ம் ஊற்றி ஊறிய‌ அரிசி சேர்த்து உப்பு போட்டு கொதிக்க‌ விட‌வும்.
பாதி கொதித்து வ‌ரும் போது குக்க‌ரை மூடி வெயிட் போட்டு இர‌ண்டு விசில் விட்டு மூன்றாவ‌து விசிலில் அடுப்பை அணைக்க‌வும்.
குக்க‌ர் ஆவி அட‌ங்கிய‌தும் லேசாக‌ பிர‌ட்டி விட்டு வேறு ஒரு ப‌வுளில் சாதத்தை மாற்ற‌வும்.
சுவையான‌ ஈசி புரோசன் பீஸ் ரைஸ் ரெடி கொத்தம‌ல்லி துவைய‌லுட‌ன் சாப்பிட‌வும்.


குக்க‌ரில் செய்வ‌தால் ஈசியாக‌ சீக்கிர‌ம் த‌யாரித்து விட‌லாம். இதை டூர் செல்லும் போதும் நொடியில் செய்து கொத்தம‌ல்லி துவைய‌லுட‌ன் கொண்டு செல்ல‌லாம். குழ‌ந்தைக‌ளுக்கு ப‌ள்ளிக்கும் கொடுத்து அனுப்ப‌லாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

dear mam
can i powder the pepper and sprinkle in the rice instead of sauting it along with jeera as the kids may not like it
can u pls send me areceipe of hw to cook
veg biriyani inbasmathi rice exclusively using all the curd and masalas
since iam from hyderabad i tasted veg biriyani from the famous paradise hotel here
as in need i want to make it at home. pls guide me
thx
harinisridhar

டியர் ஹரினி ஸ்ரீதர் வாங்க புது வரவா?
பெப்பர் பொடி போட்டால் சாதம் கலர் மாறும், இது பார்க்க கலர் புல்லா இருக்கும். வெள்ளை கலரில் லைட் ஆரஞ்ச், கொஞ்சம் பிளாக், கிரீன்,
ஆனால் படத்தில் அது எடுக்கும் போது அது அடியில் தங்கி விட்டது,
மிளகு முழு மிளகு 5 சொல்லி இருக்கேன், அது பிடிக்க வில்லை என்றால் சாப்பிடும் போது எடுத்து விடுங்கள்.
சீரகம் செமிக்க வைக்கும்

Jaleelakamal

டியர் ஹரினி ஸ்ரீதர் வாங்க புது வரவா?
பெப்பர் பொடி போட்டால் சாதம் கலர் மாறும், இது பார்க்க கலர் புல்லா இருக்கும். வெள்ளை கலரில் லைட் ஆரஞ்ச், கொஞ்சம் பிளாக், கிரீன்,
ஆனால் படத்தில் அது எடுக்கும் போது அது அடியில் தங்கி விட்டது,
மிளகு முழு மிளகு 5 சொல்லி இருக்கேன், அது பிடிக்க வில்லை என்றால் சாப்பிடும் போது எடுத்து விடுங்கள்.
சீரகம் செமிக்க வைக்கும்

Jaleelakamal

இங்கு என்னுடைய குறிப்பில் வெஜ் பிரியாணி இருக்கும் டிரை பண்ணி பாருங்கள்.
படத்துடன் நிறைய பிரியாணிகள் இருக்கு அதையும் வெஜ் சேர்த்து செய்து பாருங்கள்.ஹரினி ஸ்ரீதர் கூட்டாஞ்சோறு கிளிக் ப‌ண்ணுங்க‌ள் நிறைய‌ தோழிக‌ள் வ‌ருசையாக‌ குறிப்பு கொடுத்து இருப்பார்க‌ள். அதை கிளிக் செய்து பிடித்த‌தை செய்து பாருங்க‌ள்.
லின்ங் எடுத்து கொடுக்க‌லாம் பார்த்தால் என‌க்கு ஓப்ப‌ன் செய்வ‌து பிராப்ள‌மா இருக்கு.

Jaleelakamal