ஆத்தூர் மிளகு கறி

தேதி: May 4, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (11 votes)

 

மட்டன் - அரைக் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
அரைக்க:
மிளகு - 1 1/2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - ஒரு அங்குல துண்டு
கிராம்பு - மூன்று
ஏலக்காய் - ஒன்று
தேங்காய் - ஒரு பத்தை
முந்திரி - ஐந்து
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - ஐந்து பற்கள்
தாளிக்க:
எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஐந்து
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இதழ்
கொத்தமல்லி தழை - சிறிது (கடைசியில் மேலே தூவ)


 

கறியை சுத்தம் செய்து ஜவ்வெடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கறியை போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு தக்காளியை கையால் பிசைந்து விட்டு சேர்க்கவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, தனியா, சோம்பு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்து கறியுடன் சேர்க்கவும்.
அரைத்த மசாலாவை நன்கு கறியுடன் சேர்த்து கலக்கி பத்து நிமிடம் ஊற வைக்கவும். அதில் ஒரு மேசைக்கரண்டி தயிரும் சேர்த்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் ஊற வைத்திருக்கும் கறியை சேர்த்து பிரட்டி விடவும்.
ஐந்து நிமிடம் தீயை மிதமாக வைத்து குக்கரை மூடி போட்டு நான்கு அல்லது ஐந்து விசில் விட்டு இறக்கவும்.
இறக்கியதும் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான ஆத்தூர் மிளகு கறி ரெடி. ப்ரைட் ரைஸுடன் சாப்பிட்ட நன்றாக இருக்கும். அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

ப்ளைன் சாதம், தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றிற்கும் பொருந்தும். குளிர் காலங்களில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். சளி, தொண்டைகட்டு சமையத்திலும் சாப்பிடலாம். பிள்ளை பெற்றவர்களுக்கு இது உடம்பிற்கு ரொம்ப நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஜலீலா மேடம் வாரா வாரம் நீங்க செய்ற டிஷ் தான் போங்க

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு, ஆமென்

ஹ ஹா டியர் ராஜி (கலக்கிட்டங்கய்யா கலக்கிட்டாங்க்யா) இத வடிவேலு மாதிரியே படித்து பார்த்துநல்ல சிரிச்சாச்சு.

Jaleelakamal

ஜலீலா ஆத்தூர் மிளகு கறி ம்ம்ம பார்கவே சுப்பெரா இருக்கு குரிபெடுதுக்கொண்டேன் வெள்ளிக்கிழமைதான் செய்யனும்

நன்றி மேடம்

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு, ஆமென்

நல்லா காரசாரமா குறிப்பு.பார்க்கும் போதே சாப்பிடத் தோனுது ஜலிலாக்கா!!

ஆத்தூர் மிளகு கறி எச்சி ஊறவைக்குது.கட்டி பருப்பு ,ரசம் இந்த மிளகு கறி காம்பினேஷனும் நல்ல இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஜலி,நான் வெஜ் ரெஸிப்பியாக செய்து அசத்துகின்றீர்களே...!பார்க்கவே இப்பொழுதே செய்து விட வேண்டும் போல் உள்ளது.வரும் வெள்ளிக்கிழமை பகாறா கானா..ம்ம்..இப்படி சாப்பிட்டு பிரஷர் ஏறுகின்றது..வெறும் மிளகு கறி மட்டும் செய்கின்றேன்.சரியா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஆத்தூர் மிளகு கறி

டியர் மேனகா, ஆசியா, ஸதிகா அக்கா உங்கள் அனைவரின் பாரட்டுக்கும் மிக்க நன்றீ.
ஸாதிகா அக்கா ஆசியா சொல்வது போல் கட்டி பருப்பு, ரசம் சாதத்துக்கு சூப்பராக இருக்கும், ரொட்டி தோசைக்கும் இன்னும் நல்ல இருக்கும்.

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]ஜலீலா பானு
1,ஆத்தூர் மிளகு கறி மிக அருமையான சுவை,

2,அதெபோல் ஆட்டுகறிக்கு பதில் கோழிகறியைபோட்டு செய்யலாமா.நாட்டுகோழியில் செய்யலாமா,வஸ்ஸலாம்- அன்புடன் சகோதரர் ஷாஹுல் ஹமீத்

அறுசுவை தேன் சுவை

வா அலைக்கும் அஸ்ஸலாம் சகோதரர் ஷாகுல் ஹமீத் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.

1. முதன் முறையாக உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
2. சிக்கனிலும் செய்யலாம், மசாலா கறியை போல் கறீயில் போட்ட பிறகு விரவாமல், முதலில் தக்காளி வெங்காயத்தை நன்கு பிசைந்து கொள்ளுங்கள் மசாலா உடன் பிறகு சிக்கனை போட்டு விறவவும். அதே போல் தாளித்து நன்கு பிறட்டி மூடி விசில் போடும் போது ரொம்ப நேரம் விட வேண்டாம் இல்லை என்றால் பீஸ் குழைந்து விடும்.

இது மிளகாய் தூள் இல்லாமல் பச்சமிளகாயிலும் செய்யலாம்.

ஆத்தூர் மிளகு கறி செய்து பார்த்து மறக்காமல் பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleelakamal

இந்த ஆத்தூர் மிளகு கறி தான் இன்னக்கி எங்க வீட்டில். எனக்கு அவ்வளவாக அசைவம் சமைக்க வராது மேடம் ஆனா இன்னக்கு இந்த கறி அவ்வளவு நல்ல வந்திருந்துச்சு நன்றி எல்லாம் உங்களுக்கு தான். கீ ரைஸுடன் சாப்பிட அஹா சொல்ல வார்த்தை இல்லை. இதுல நான் ஒரு டெஸ்ட் வேற பண்ணேன் மட்டனுக்கு பதில் சிக்கன் சேர்த்து செய்தேன் சுவை அபாரம். நன்றி மேடம்.

ஹாய் ஜலீலா அக்கா assalamu alaikum நல்லா இருக்கீங்களா ?பசங்க எப்படி இருகாங்க உங்க அத்தூர் மிளகு கறி செய்தேன் சுப்பரா இருந்தது ரொம்ப நன்றிக்க

நஸ்ரின் கனி

திவ்யா ஆத்தூர் மிளகு கறி செய்து பார்த்து மறக்காமல் வந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி
கீ ரைஸுடன் நல்ல இருந்ததா> ரொம்ப சந்தோஷம்

ஜலீலா

Jaleelakamal

நஸ்ரின் நல்ல இருக்கேன் , வா அலைக்கும் அஸ்ஸலாம்.

ஆத்தூர் மிளகு கறீ செய்து பார்த்து வந்து கருத்து தெரிவித்தமைக்கு ரொம்ப சந்தோஷம்.

ஜலீலா

Jaleelakamal

I tried it 2day..it wasn't too time consuming and it was so good with plain rice.

akka unga aathur milagu kari sooooper a irundhadhu. samaika theriyadha ennaiye nalla samaika vachidichi. nan ungaloda bahara kana, kari urulai chalna,aathur milagu kari, chicken briyani 2 ellathukum rasigai. seinthu parthu rasichi sapitom. romba nandri akka. nan mutton seidhal nallave irukadhu ana indha recipe romba super a vandhadhu akka. inime guest vandha enaku no problem. thanks akka.....

dhakshina

akka tamil a epadi type pandradhunu solli thangalen.. please akka

dhakshina

கீழே இறக்கி பாருங்க,தமிழ் எழுத்துதவின்னு இருக்கும்,அங்கே போய் பார்த்தால் அதில் எப்படி டைப் செய்வதுன்னு விளக்கம் இருக்கு,போய் பாருங்க!

Eat healthy

ரொம்ப நன்றீ ரசியா அக்கா..... கத்துக்கிட்டேன்...

ஜெபா , தன்ஷிகா, கருத்ட்து தெரிவித்தம்மைக்கு மிக்க நன்றி.
தன்ஷிக்கா என் ரெசிபிகள் அனைத்தும் ரொமப் ஈசியாக எளிதில் கற்று கொள்ள கூடிய்வை தான்,

Jaleelakamal

ஹாய் சிஸ்டர் , இந்த ரெசிபியை செய்து பார்த்தேன் டேஸ்ட் சூப்பர்.ரெசிபிக்கு நன்றி