பேப்பர் பை செய்முறை - 2

தேதி: May 4, 2009

4
Average: 3.7 (6 votes)

 

சாட் பேப்பர் 32 x 20
போஸ்டர் கலர்ஸ்
கோல்டன் ரிப்பன்
பெவிக்கால்
ஸ்டபிளர்
கத்திரிக்கோல்

 

பேப்பர் பை செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு சாட் பேப்பரில் 32 செ.மீ நீளம், 20 செ.மீ அகலம் என்ற அளவில் வெட்டிக் எடுத்துக் கொள்ளவும். அதில் 2 செ.மீ அளவு பேப்பரை விட்டு விட்டு பாதியாக மடக்கிகொள்ளவும்.
அதன் பிறகு ஓரத்தில் இருக்கும் 2 செ.மீ பேப்பரில் பெவிக்கால் தடவி வெளிப்பக்கமாக ஒட்டி விடவும்.
ஒட்டிய அந்த பகுதியின் நடுப்பகுதியில் வைத்து மடக்கவும். இப்போது அந்த இடத்தில் ஒரு மையப்பகுதி கிடைக்கும்.
மடக்கிய பகுதியை மையமாகக் கொண்டு அதன் இரண்டு புறத்திலும் இரண்டிரண்டு செ.மீ அளவிற்கு ஒரு புள்ளி வைத்துக் கொள்ளவும். புள்ளி வைத்த இடத்தை மடக்கிக் கொள்ளவும். (படத்தில் உள்ளது போல்)
வாய் திறந்திருக்கும் இடது மற்றும் வலது பகுதிகள் இரண்டிலும் முனையிலிருந்து அளந்து 2 செ.மீ புள்ளி வைத்துக் கொள்ளவும். அதில் ஏதாவது ஒரு பகுதியை மடக்கிக் கொள்ளவும்.
மடக்கிய பகுதியை விரித்து விட்டு இரண்டு ஓரங்களையும் கத்திரிக்கோலால் வெட்டி விடவும். அதே போல் மற்றொரு புறமும் வெட்டவும்.
பின்னர் வெட்டிய இரண்டு ஓரத்திலும் உள்ள நடுப்பகுதியை உள்பக்கமாக மடக்கி அதில் பெவிக்கால் தடவவும். முதலில் ஓரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பகுதியை அதன் மேல் வைத்து ஒட்டவும்.
அந்த பகுதியின் மீது பெவிக்கால் தடவி மற்றொரு பகுதியை ஒட்டவும். இப்போது பையின் அடிப்பாகம் மூடப்பட்டு விடும்.
அதேப் போல் 2 செ.மீ அளவு எடுத்து குறித்து வைத்திருக்கும் மேல் பகுதியின் ஓரத்தில் இருபுறமும் வெட்டி விடவும். அதன் பிறகு வெட்டிய பகுதியின் மையப் பகுதியில் உள்புறம் பெவிக்கால் தடவி உட்பக்கமாக மடக்கி விடவும்.
மற்ற இரண்டு மடக்கிய பகுதிகளிலும் பெவிக்கால் தடவி உட்புறமாக மடக்கி ஒட்டி விடவும்
இப்போது பை தயார். அதில் ஒரு புறத்தில் போஸ்டர் கலரை பயன்படுத்தி அடியில் சிவப்பு நிறமும், மேல் பகுதியில் மஞ்சள் நிறமும் அடிக்கவும். நடுப்பகுதியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை கலந்து அடிக்கவும்.
பெயிண்ட் காய்ந்த பிறகு அதில் நமக்கு தேவையான அல்லது நாம் விரும்பிய படங்களை வரைந்துக் கொள்ளலாம். அதன் மேல் பகுதியில் எதிரெதிர் திசையில் இரண்டிரண்டு துளைகள் போட்டுக் கொள்ளவும்.
மேலே போட்டுள்ள துளைகளில் கோல்டன் லேஸைக் கட்டி விடவும். இப்போது அழகிய பேப்பர் பை ரெடி. இந்த பேப்பர் பையை செய்து காட்டியவர், செல்வி. சிந்து அவர்கள். இவர் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

This is very cute. This is very nice.This is useful to all.thank you very much.

with love
shameema

this is very nice and very easy to make.thank u .

mrs.priyakarthik

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta