வேர்க்கடலை வடை

தேதி: May 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சை வேர்க்கடலை - 200 கிராம்
அவல் - 75 கிராம்
பொட்டுக்கடலை மாவு - 50 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
காய்ந்த மிளகாய் - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது) - 5 மேசைக்கரண்டி
கீரை - 25 கிராம்
வெங்காயம் - 75 கிராம்
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

வடை செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அவலுடன் தண்ணீர் ஊற்றி கழுவி உடனேயே தண்ணீரை நன்கு வடித்து விடவும். கீரை மற்றும் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
அவல், வேர்க்கடலை, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்தெடுத்த கலவையுடன் நறுக்கின இலைகள், வெங்காயம், சோம்பு, பொட்டுக்கடலை மாவு, உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
மாவை தண்ணீரை கையில் தொட்டுக் கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து கையில் வைத்து தட்டையாக தட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான வேர்க்கடலை வடை ரெடி. தக்காளி சாஸுடன் பரிமாறலாம். இந்த வேர்க்கடலை வடை திருமதி. மனோ அவர்களின் குறிப்பினை பார்த்து இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்தது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

graceraviடியர் அதிரா
உங்கள் குறிப்புகள் எல்லாம் அருமை.but i am using netcard only that's why iam not able to send my commends. but everyday i will see ur all arataies and receipes in the site. my humble request i want boiled receipes. all are in fry items only. so if u have receipes in boiled items please tell about it. iam graceravichandran from kuwait. convey my wishes and regards to all the members. actually i wil type in tamil i will do all the magazine works for our church magazine activites but this font is and also the net connection is low so iam not able to reply in tamil. but i like to type in tamil. iam expecting ur receipes in boiled items. thank u

விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்! கிரேஸ்ரவி

அதிரா,வேர்க்கடலையில் வடையா?பலே.கிட்னியை நன்கு யூஸ் பண்ணி யோசித்து புது விதமான ரெஸிப்பீஸ் போடுகின்றீர்கள்.இனி உங்கள் ரெஸிப்பியை படத்துடன் சந்திக்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஆதிரா மேடம்
நான் கேள்விப்படாத ரேசப்பி இது பார்க்க நல்ல அழகாக இருக்கு.குறிப்புக்கு நன்றி.உங்களுடைய குறிப்புகள பாத்ததும் இந்த டயட்டிங் மறந்து போகுது
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

கிரேஷ்ரவி,
பாராட்டுக்கு மிக்க நன்றி. எனக்கு தெரிந்த குறிப்புக்களை, யாரும் சமைக்கலாம் பகுதியில் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இங்கேயுள்ள அனுபவசாலிகளுக்கு முன்னால், நான் பெரிய சமையல்காரி இல்லை. இருப்பினும் என்னை பாராட்டும்போது உற்சாகம் அதிகமாகிறது. இக் குறிப்பு மனோ அக்காவின் குறிப்பைப் பார்த்துச் செய்தேன். யாரும் சமைக்கலாமில் பொரியல் இல்லாத அவியல் கறிகள் குறிப்பும் என்னுடையது இருக்கிறதே. எனக்கு குறிப்புக்களைச் செய்து படமெடுப்பது சுலபம், ஆனால் அவற்றை எடிற் பண்ணி அனுப்புவதுதான் பெரிய வேலையாக இருக்கிறது. பல குறிப்புக்கள் படமெடுத்து இன்னும் அனுப்பாமல் வைத்திருக்கிறேன். என்ன இருந்தாலும் அத்தனை பெருமையும் அறுசுவையையே சேரும். அதனால்தான் எனக்கு ஊக்கம் பிறந்துள்ளது. நீங்கள் இங்கு குறிப்புக்கள் பார்த்துச் சமைப்பவராக இருந்தால், நேரமுள்ளபோது, சமைத்தவற்றுக்கு பதில் அனுப்பினால் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். உங்கள் பதிலுக்கு நன்றி.

ஸாதிகா அக்கா, நீங்க எனக்கு அடிவாங்கித் தருவதென்றே முடிவுகட்டிவிட்டீங்களா:)? வடிவாப் பாருங்கோ... இது மனோ அக்காவின் குறிப்பைப் பார்த்துச் செய்தேன்... கிட்னியை யூஸ் பண்ணிச் செய்தது நிறைய படமெடுத்திருக்கிறேன், அட்மின், இங்கும் ஆட்களை அனுப்பி சேகரித்தாரென்றால், எவ்வளவு வசது, நான் படங்களையும் அளவுக் கொப்பியையும் அப்படியே தூக்கிக் கொடுத்துவிடுவேன். இது நானே எல்லாம் செய்வது அலுப்பாக இருக்கும் சில வேளைகளில். பாராட்டுக்கு நன்றி.

சுகா பாராட்டுக்கு நன்றி. நெடுகவும் டயட் பண்ணக்கூடாது தெரியுமோ:)?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்