காய் பருப்பு குழம்பு

தேதி: May 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

துவரம் பருப்பு - 2 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பூசணிக்காய் - சிறு துண்டு
முருங்கைக்காய் - ஒன்று
சிறிய உருளைக்கிழங்கு - ஒன்று
சிறிய மாங்காய் - ஒன்று
கத்தரிக்காய் - 2
தேங்காய் துருவல் - 3/4 கப்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பழுத்த தக்காளி - ஒன்று (6 துண்டுகளாக நறுக்கியது)


 

துவரம்பருப்பை கழுவி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு விசில் வர வேக விடவும்
காய்கறிகளில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அளவாக உடையாமல் வேக விடவும்.
தேங்காயை மையாக அரைத்து விழுதாக்கவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிக்க கொடுத்துள்ளப் பொருட்களை வரிசையாக போட்டு தாளிக்கவும்.
பிறகு வேகவைத்த காய்கறிகள், பருப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து ஒரு கப் தண்ணீரும் சேர்த்து உப்பு சரிபார்த்து 2 கொதி வந்ததும் இறக்கவும்.


மதியம் சாதத்துக்கு செய்தால் இரவு சப்பாத்தி, இட்லிக்கும் சேர்த்து செய்து வைக்கலாம். நன்றாக பொருந்தும். குழம்பை அதிகம் கொதிக்க விட்டால் சுவை போய்விடும். இதனுடன் பலாக்கொட்டையையும் சேர்த்து வேக வைக்கலாம். அப்பளம், எலுமிச்சை ஊறுகாய்க்கு அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்