சாக்கோநட்

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மேரி பிஸ்கெட் - 15
முந்திரி - அரை கப்
திராட்சை - அரை கப்
அக்ரூட் - அரை கப்
பாதாம் - அரை கப்
வெண்ணெய் - கால் கப்
கோக்கோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
மில்க் மெய்ட் - கால் கப்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி


 

பிஸ்கெட்டை நன்கு பொடி செய்து கொள்ளவும். முந்திரி, பாதாம், அக்ரூட்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பிஸ்கெட் தூளுடன் திராட்சை, கோக்கோ பவுடர், சர்க்கரை நறுக்கிய பருப்புகள் சேர்த்து மில்க் மெய்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
வெண்ணெயை உருக்கி சூடாக பிஸ்கட் கலவையில் சேர்த்துப் பிசையவும்.
அதை இரண்டு, மூன்று பகுதிகளாக பிரித்து சற்று கனமாக நீளவாக்கில் உருட்டி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து ஸ்லைஸ் செய்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்