உருளைக்கிழங்கு பட்டாணி கறி

தேதி: May 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

உருளை - 1/4 கிலோ
பச்சைபட்டாணி - 100 கிராம்
கரம்மசாலா - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1
தக்காளி - 2
மல்லி - சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்வற்றல் - 2


 

உருளையை தோல் நீக்கி 2 அங்குல துண்டுகளாக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை நறுக்கி அரைத்துக்கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, மிளகாய்வற்றல் தாளிக்கவும்.
பச்சைமிளகாயை கீறிப்போடவும். உருளை, பட்டாணி சேர்க்கவும்.
கரம் மசாலா சேர்த்துக்கிளறி 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
இரண்டு விசில் வந்ததும் இறக்கி விடவும்.
குக்கரை திறந்ததும் நீர் வற்றாமல் இருந்தால் மேலும் சிறிது நேரம் திறந்த நிலையில் வேக விடவும்.
பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
கரம் மசாலா வாசனையுடன் அபார சுவையுடன் இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்