மைக்ரோவேவ் ப்ரெட் புட்டிங்

தேதி: May 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (6 votes)

 

சுவீட் ப்ரெட் - 4 (சிறியது)
பால் - 200 மில்லி
முட்டை - ஒன்று
சீனி - 1 - 2 மேசைக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி


 

புட்டிங் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சீனி சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
அடித்து வைத்திருக்கும் பால் கலவையுடன் ப்ரெட்டை உதிரித்து போட்டு கலந்துக் கொள்ளவும்.
எல்லாம் சேர்ந்து ஒன்றாகும்படி கலந்து, மைக்ரோஓவன் ப்ரூஃப் பவுலில் நெய் தடவி கலவையை ஊற்றி வைக்கவும்.
பவுலில் ஊற்றி தயாராக வைத்திருக்கும் கலவையை அவனில் 6 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பின்னர் எடுத்து 2 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். எடுக்கும் பொழுது கவனமாக எடுக்கவும்.
அந்த பவுலை ஒரு தட்டில் தலை கீழாக சாய்க்கவும். பார்க்க அழகான வடிவத்தில் சுவையான ப்ரெட் புட்டிங் ரெடி. மாலை நேர டிபனாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். குழந்தைகள் தாங்களாகவே செய்யக்கூடிய அளவில் எளிமையான செய்முறை இது. இந்த ப்ரெட் புட்டிங் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

thirumadhi.asiriar.umar avargalukku vanakkam.thangaludaia kurippu miga arumai.anal enakku oru sandegam.bread putting seiya avan illaiendral gas stoveli eppadi seia vendum thaiavu seidu sollungalen nan pudhiadaga inaidu irukkum vasagi en kelvikku yarume padhil poduvadhillai pls.
radhikasuresh.

radhikasuresh

ஆசியா மேடம் புட்டிங் ரொம்ப சிம்பிளா இருக்கு, ட்ரை பன்னி பார்த்துட்டு சொல்றேன்.
ராதிகாசுரேஷ் எப்படி இருக்கீங்க,நீங்க என்ன கேள்வி கேட்டீங்க? நீங்க கேட்ட கேள்விக்கு பதில் இல்லனா,அந்த கேள்வியை யாரும் சரியா கவனிச்சிருக்கமாட்டாங்க,இல்லைனா அந்த கேள்வி பலமுறை மன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வியா இருக்காலாம்.ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் யாரும் சரியாக கவனிக்க வாய்ப்பில்லை,எந்த கேள்வியாக இருந்தாலும் தமிழில் கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்(இது த‌மிழ் தளம் என்பதால்),தமிழில் எழுத வேண்டுமென்றால் கீழே எழுத்தவினு இருக்கு பாருங்க அதை கிளிக் பன்னீங்கனா தமிழில் எழுத தேவையான விளக்கங்கள் இருக்கும், அடுத்த தடவை கேள்விக்கேட்கும்போது தமிழில் கேளுங்க சரியா:)

ஆசியா மேடம் புட்டிங் ரொம்ப சிம்பிளா இருக்கு, ட்ரை பன்னி பார்த்துட்டு சொல்றேன்.

ராதிகாசுரேஷ் எப்படி இருக்கீங்க,நீங்க என்ன கேள்வி கேட்டீங்க? நீங்க கேட்ட கேள்விக்கு பதில் இல்லனா,அந்த கேள்வியை யாரும் சரியா கவனிச்சிருக்கமாட்டாங்க,இல்லைனா அந்த கேள்வி பலமுறை மன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வியா இருக்காலாம்.ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் யாரும் சரியாக கவனிக்க வாய்ப்பில்லை,எந்த கேள்வியாக இருந்தாலும் தமிழில் கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்(இது த‌மிழ் தளம் என்பதால்),தமிழில் எழுத வேண்டுமென்றால் கீழே எழுத்தவினு இருக்கு பாருங்க அதை கிளிக் பன்னீங்கனா தமிழில் எழுத தேவையான விளக்கங்கள் இருக்கும், அடுத்த தடவை கேள்விக்கேட்கும்போது தமிழில் கேளுங்க சரியா:)

ஐயயோ 3 முறை பதிவாயிடுச்சு:)))

ராதிகா உங்களுக்கு நாந்தான் அதிகமா பதில் கொடுத்திருக்கேன் பாருங்க:)

இன்று இப்ப தான் நேரம் கிடைத்ததால் வந்து பார்த்தால் உங்கள் கேள்வி.குக்கரில் ஐந்து விசில் வைத்து எடுத்தால் புட்டிங் ரெடி.வேண்டுமானால் நெய்யில் முந்திரி வறுத்து போடலாம்.தேன் கூட விட்டு பரிமாறலாம்.
கவி மிக்க நன்றி.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் இன்று புட்டிங் பண்ணினேன் மிகவும் நன்றாக இருந்தது,மற்றும் ரொம்ப easy ஆ இருந்தது.குழந்தைகளும் செய்யலாம்னு இருந்ததால் தான் செய்தேன் அவ்ளோ எக்ஸ்பெர்ட் நான் சமையலில்.....அட நாம கூட புட்டிங் எல்லாம் செய்ரோமேனு ஒரே குஸி, அதை சொல்லவே புதிதாக உறிப்பினர் ஆனேன்....

Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That’s why we call it the present.

ஆசியா மிகவும் ஈசியான முறையில் செது காட்டியிருக்கிறீங்க. செய்துவிட்டுச் சொல்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

செய்து பார்த்து நல்ல வந்தது குறித்து மகிழ்ச்சி.அறுசுவை உறுப்பினர் ஆகிட்டீங்க,புட்டிங் என்ன இனி உங்களுக்கு பிரியாணி கூட ஈசியாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செய்து பாருங்க,செய்யும் போது ட்ரை ஃப்ரூட்ஸ்,நட்ஸ் கூட சேர்த்து கொள்ளலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

appu சகோதரி ஆசியா உமர்,தங்களின் ரெசிபியை நேற்றுதான் படிச்சேன்.உடனேவும் செய்திட்டேன்ங்க.ரொம்ப நல்லா இருந்தது.செய்முறையில் ஈஸி.சுவையோ அலாதிங்க.தங்களுக்கு வாழ்த்துக்கள்.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.நீங்க அறுசுவைக்கு புதிதா,உங்கள் பெயரை கொஞ்ச நாளாகத்தான் பார்க்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

appu அஸ்ஸலாமு அலைக்கும்.எப்படி இருக்கீங்க?ஆமாங்க நான் புதுசுதான்.சமையலில் ரொம்ப ஆர்வாமாக இருப்பேன்.இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேன்.இந்த துபைக்கு வந்து அடுத்தடுத்து மூன்று பிள்ளை ஆகி விட்டதால்,நேரம் கிடைக்காமல் போய்விட்டது.இப்போது இதற்காகவே நேர்த்தை ஒதுக்கிக்கொள்கிறேன். அதிலும் உங்களைப்போன்றவர்களிடம் உரையாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.என் சமையல் குறிப்பையும் பகிர்ந்துக்கொள்ளமுயச்சி செய்துக்கொண்டிருக்கிறேன்.தாங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாமா?

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஆசியா அக்கா நலமா??இன்று தான் என் கண்ணில் பட்டது,பிரெட் இருந்த தீர்க்க தேடினேன்,செய்தும் விட்டேன்,சுவை சூப்பர்,ரெம்ப நல்லா இருக்கு மதியம் கோகுல் வந்ததும் தரனும்,அவன் தான் ஸ்வீட் கேட்டுகிட்டு இருந்தான்,நினைத்தவுடன் செய்யளாம்

இன்னும் ஒன்று உங்க பேரை சத்தமில்லாமல் சொல்லிகிட்டே இருந்தான்,என்னடா என்றதும் அல் வாதா மால் போலாம் வா,அங்க நீங்க எல்லாரும் இருப்பீங்களாம்,இப்ப தனிஷா பேரை சொல்லிகிட்டு இருக்கான்

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிக்க மகிழ்ச்சி.கோகுல் எப்படி ஸ்கூலை என்ஞாய் பண்றான்,இனி நான் அங்கு விசிட்டில் வந்தாலும் அல் ஐன் தான்,நல்ல வேளை நாம் எல்லோரும் அல் வாதாமாலில் சந்தித்தோம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா மேடம் எப்படி இருக்கீங்க?நான் அருசுவைக்கு புதிது.உங்களுடை ப்ரெட் புட்டிங் செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.ரொம்ப ரொம்ப நன்றி.

ஆசியா எனக்கு ஒரு சந்தேகம் என்னிடம் மைக்ரோவன் இல்லை இந்த பிரட்புட்டிங்கை வேறு எப்படி செய்யலாம் என்று சொல்லவும்

வாழு இல்லை வாழவிடு

ஆசியா இன்று உங்கள் ப்ரெட் புட்டிங் செய்தேன் சூப்பரா இருக்கு நல்ல குறிப்பு குடுத்ததுக்கு நன்றி

நேற்று உங்க ப்ரெட் புட்டிங் தான் ட்ரை பண்ணினேன், நீங்க சொன்ன அதே அளவு தான் எல்லாமே கலந்தேன்... ஆனால் 6 நிமிஷம் கழிச்சு எடுத்தால் நடுவில் சுத்தமா வேகவே இல்ல, அப்புறம் கிட்டத்தட்ட 15 நிமிஷம் வச்சும் உள்ள எல்லாம் அப்படியே இருந்தது... எந்த இடத்தில் தப்பு நடந்திருக்கும்... எனக்கு பதில் சொன்னீங்கன்னா அடுத்த தடவை பண்றதுக்கு ஈஸியா இருக்கும்.... ஆசியா மேடம் வரலேன்னா, வேறு யாருக்காவது தெரிஞ்சாலும் சொல்லுங்கப்பா...

அனேக அன்புடன்
ஜெயந்தி

உங்களது ப்ரட் புட்டிங் இன்று ட்ரை செய்தேன். மிக நன்றாக வந்தது. என் குழந்தைக்கு இனிப்பு அவ்வளவாக பிடிக்காது. அவளே நன்றாக சாப்பிட்டாள். மிக்க நன்றி.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

ஆசியா உமர் அவர்களே,
நீங்கள் செய்த பிரெட் புட்டிங் ஈசியாக இருக்கு. ஆனால் மைக்ரோ-ஒவன் இல்லாதவர்கள் எப்படி செய்வது என்று கூறுங்கள்.
பீலீஸ்...................

seems to be quite interesting recipe. Can this be done without egg

mythuroy

அன்புத்தோழி ஆசியா,
உங்களது microwave bread pudding - இன்று fathers day-vai முன்னிட்டு செய்தேன். மிகவும் அருமை. எனது கணவர் மிகவும் விரும்பி சாப்பிட்டார். என் பெண் (ஒன்பது மாதம்) ரசித்து சாப்பிட்டாள். ரொம்ப நன்றி.

அன்புடன்
பிரியா குமார்