பயத்தங்காய் வதக்கல் (சீன முறை)

வழங்கியவர் : Mahalakshmiprag...
தேதி : வெள்ளி, 08/05/2009 - 09:37
ஆயத்த நேரம் : 10 min
சமைக்கும் நேரம் : 10 min
பரிமாறும் அளவு : 4
- பயத்தங்காய் - 1/2 கட்டு (ஒரு அங்குலத்துண்டுகளாக நறுக்கியது)
- வெங்காயத்தாள் - 1 கட்டு (ஒரு அங்குலத்துண்டுகளாக நறுக்கியது)
- இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (மெல்லிய சதுரதுண்டுகளாக நறுக்கியது)
- பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் ( நீள துண்டுகளாக நறுக்கியது)
- வத்தல் மிளகாய் - 10 ( 2 துண்டுகளாக்கவும்)
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
- அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள் ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும். அடுத்து காய்ந்த மிளகாயை கிள்ளிப்போடு வதக்கவும்.
- அடுத்து பயத்தங்காயைப்போட்டு வதக்கவும். 3 நிமிடம் கழித்து சிறிது தண்ணீரை தெளித்து வேகவிடவும். மிதமான தீயிலேயே செய்யவும். தேவையான அளவு உப்பு போட்டு எல்லாமும் சேர்த்து கிண்டி இறக்கவும்.
Note:
பயத்தங்காயை லாங் பீன்ஸ் என்று அழைப்பர், இந்த காயை சமைக்கவும் செய்யலாம், அல்லது பீன்ஸின் உள்ளே இருக்கும் பருப்பை மட்டும் பயன்படுத்தலாம். பயத்தங்காயை கழுவி நறுக்கி தண்ணீரிலே போட்டு வைக்கவும், சமைக்கும் முன் தண்ணீரை வடித்தால் போதும். காய் ரொம்பவும் வெந்து விடக்கூடாது, தண்ணீர் ஊற்றக் கூடாது தெளிக்க வேண்டும். காய் குழைந்துப்போகக்கூடாது.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
சைனா மஹா... என்ன நீண்ட காலமாக ஆளையே காணவில்லை. உங்கள் பயற்றங்காய் வதக்கல் செய்தேன், நன்றாக வந்தது. பதில் போடத்தான் தாமதமாகிவிட்டது. படம் வெளிவந்ததைக்கூட நான் இப்போதான் பார்க்கிறேன்.
நன்றி அட்மின்....
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்