சென்னை சிக்கன் பிரியாணி

தேதி: May 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (32 votes)

 

சிக்கன் எலும்புட‌ன் - முக்கால் கிலோ
தரமான பாசுமதி அரிசி - அரை ப‌டி (4 ட‌ம்ள‌ர்)
பழுத்த தக்காளி - ஆறு
பெரிய வெங்காயம் - ஐந்து
இஞ்சி பூண்டு விழுது - நான்கு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - அரை கைப்பிடி
புதினா - கால் கைப்பிடி
பச்சை மிளகாய் - 8
தயிர் - 150 மில்லி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு (சிக்கன் தாளிக்கும் கூட்டுக்கு + வடிக்கும் அரிசிக்கு)
ரெட் கலர் பொடி - கால் தேக்கரண்டி
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
எலுமிச்சை ப‌ழ‌ம் - ஒன்று
எண்ணெய் - 200 மில்லி
ப‌ட்டை - 2 அங்குல‌ துண்டு இர‌ண்டு
கிராம்பு - நான்கு
ஏல‌க்காய் - மூன்று


 

அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். சிக்கனை கொழுப்பு நீக்கி சுத்தம் செய்து 6 அல்லது 7 முறை நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் 8 துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். ஓவ்வொரு முறை ஏதேனும் பொருட்க‌ள் சேர்த்து வ‌த‌க்கும் போதும் அடுப்பின் அன‌லை ந‌ன்கு குறைத்து வைத்து மூடி போட்டு விட‌வும் அப்போது தான் வாசனை ந‌ன்கு வ‌ரும்.
அதனுடன் தக்காளியை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், 4 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு தக்காளியை மசியவிடவும்.
த‌க்காளி ம‌சிந்த‌தும் சிக்க‌ன் ம‌ற்றும் த‌யிரை க‌ல‌க்கி சேர்த்து பிரட்டி விட‌வும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு தீயின் அளவை குறைத்து வைத்து வேக விடவும்.
இந்த கலவை நன்கு வெந்து தண்ணீர் வற்றி கெட்டியாகி எண்ணெய் மேலே திரிந்து வரும், அடிப்பிடிக்காமல் அவ்வப்போது பார்த்து கொள்ளவும்.
அரிசி வடிக்க உலை போடவும். நல்ல அகலமானதாக கஞ்சி சிக்காத பெரிய சட்டியாக வைத்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் அரிசியை வடித்து தட்டவும். முக்கால் பதம் வெந்தால் போதும். இப்பொழுது அதில் எலுமிச்சையை பிழிந்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய கண் வடிகட்டியில் வடிக்கவும். ( பாசுமதி அரிசி வேகும் நேரம் ஏழுலிருந்து எட்டு நிமிடங்கள்)
உடனே வடித்த அரிசியை சிக்க‌ன் கலவையில் கொட்டி க‌ஞ்சி த‌ண்ணீர் கால் ட‌ம்ள‌ர் எடுத்து அதில் ரெட் க‌ல‌ர் பொடி சேர்த்து சாத‌த்தின் மீது வ‌ட்ட‌ வ‌டிவ‌மாக‌ ஊற்ற‌வும்.
அதில் நெய்யை ஊற்றி லேசாக‌ பிர‌ட்டி விட்டு, அதன் மேல் நல்ல பொருத்த‌மான‌ மூடியை போட்டு மூடவும். வ‌டித்து வைத்துள்ள‌ க‌ஞ்சி த‌ண்ணீரை மேலே வைக்கவும். பாத்திரத்திற்கு கீழே அடுப்பின் மேல் த‌ம் போடும் க‌ருவி (அ) தோசை த‌வ்வாவை வைத்து தம் போடவும்.
20 நிமிடம் தம்மில் போட்டு வைத்திருக்கவும். தம் போடும் போது தீயை குறைத்து வைத்து விடவும். ( 20 நிமிட‌த்தில் ப‌த்து நிமிட‌ம் க‌ழித்து ஒரு முறை லேசாக‌ எல்லா ப‌க்க‌மும் பிர‌ட்டி விட்டு ம‌றுப‌டியும் ப‌த்து நிமிட‌ம் த‌ம்மில் வைக்க‌வும்).
சுவையான சிக்கன் பிரியாணி ரெடி. இத‌னுடன் சேர்த்து சாப்பிட எண்ணெய் க‌த்திரிக்காய், த‌யிர் ச‌ட்னி, சிக்க‌ன் ப்ரை பொருத்தமாக இருக்கும். அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

பிரியாணியில் முக்கியமான‌ நேர‌ம் த‌ம் போடுவ‌து தான் வெந்த‌தும் ச‌ரியான‌ ப‌த‌த்தில் வ‌டித்து த‌ம் போட‌ வேண்டும். ம‌ற்ற‌ப‌டி எல்லாம் செய்வ‌து ரொம்ப‌ ஈசி. பிரியாணி என்றால் தீயை குறைத்து வைத்தே செய்வ‌தால் ம‌ற்ற‌ அனைத்து வேலையும் அந்த‌ நேர‌த்தில் முடித்து விட‌லாம். சிக்கன் பிரியாணிக்கு எலும்புடன் உள்ள துண்டுகள் போட்டால் தான் நல்ல இருக்கும் லெக் பீஸ் போட்டால் மசாலா ஏராது. சிலர் அதைப் போல் போடுவார்கள். அப்படி சரியாக கவனிக்காமல் அரிசி நன்கு வெந்து விட்டது என்றால் தம் போடும் நேரத்தின் அளவை குறைத்து 10 நிமிடம் வைத்து ஆஃப் பண்ணி விட்டு சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்து பிறகு இறக்கவும். இதற்கு கரம் மசாலாவோ , தனியாத்தூளோ, தேங்காயோ சேர்க்க தேவையில்லை. அவை எல்லாம் சேர்த்தால் சிக்கன் சால்னாவில் பிரியாணியை விர‌வியது போன்ற சுவை இருக்கும். இது சென்னையில் இஸ்லாமிய இல்ல கல்யாணங்களில் தயாரிக்கும் மட்டன் பிரியாணியை சிக்கனில் செய்து இருக்கிறேன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

evvalavu arumaiyaana kurippu seidhadhu yaar? jaleela akka, asiya akka alladhu sadhiqa akka..
evargalil yaaravadhu dhaan.. yaar ena admin avargal podavum....

சென்னை சிக்கின் பிறியாணி என்றதும் அவசரமாகத் திறந்தேன், ஜலீலாக்கா அது நீங்கதானா? எங்கள் அட்மின் வெள்ளிக்கிழமை பார்த்துத்தான் சிக்கின் பிறியாணிகளைப் போடுகிறார்:).

அழகாகவும் ஆசையகவும் இருக்கு ஜலீலாக்கா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்க கைப்பக்குவம் தனிதான்.பார்த்தவுடன் இது உங்களோடது என்று தெரிகிறது.சூப்பர் ருசி.ஸ்பைசியாக இருக்குமா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சென்னை சிக்கன் பிரியாணி.
டியர் நிஞ்சு பாப்பு கீழே பெயர் பார்க்கவில்லையா யார் குறீப்பு என்று.

டியர் அதிரா நீங்கள் அடிக்கடி சிக்கன் தானே செய்வீர்கள் செய்து பாருஙக்ள் பரவாயில்லை இம்முறை மட்டும் தக்காளி சேர்த்து கொள்ளுங்கள்.

டியர் ஆசியா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, காரம் அதிகம் இருக்காது அது காஷ்மீரி சில்லி பொடி அதான் கலர் தூக்கலாக இருக்கும், தக்காளியும் பழுத்த ரெடி கலர் தக்காளி. இரண்டும் சேர்ந்தால் கலர் பார்க்க அமோகமாக இருக்கும்.
இன்னொரு விஷியம், அதில் உள்ள எண்ணை கத்திரிக்காய் உங்கள் குறிப்பு தான்.ரொம்ப நல்ல இருந்தது. வித்தியாசமாக.

Jaleelakamal

எண்ணெய் கத்திரிக்காய் செய்து பார்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் பிரியாணி செய்து பார்க்கிறேன்.இங்கு சமையலுக்கு ஆள் இருப்பதால் என் சமையலே எனக்கு மரந்துவிடுமோ என்று இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஜலீலா, உங்க பிரியாணி இன்று செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.நன்றி.
Save the Energy for the future generation

Save the Energy for the future generation

hai my friend jaleela akka. i am radhika nan ungakuda friendship vechikanumnu asai padran kidaikkuma ungala pathi solla mudiuma.
radhikasuresh.

radhikasuresh

1.டியர் ஆசியா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

2. இந்திரா எஸ் பிள்ளை சிக்கன் பிரியாணி செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி

Jaleelakamal

டியர் ராதிகா சுரேஷ் நான் எல்லோரிடமும் தான் பேசுகீறேன், உங்கலிடமும் பேசுவேன், இப்ப பிஸியாக இருக்கிறேன்.
அரட்டை பக்கம் வருவதில்லை, மன்றம் என்று இருக்கு அங்கு போய் எல்லோரிடமும் பேசுங்கள் குறீப்பு கீழ் அதன் சந்தேகம், அந்த குறிப்பு பிடித்திருந்தால் வாழ்த்துவது, செய்து பார்த்தால் தெரிவிப்பது போன்றவைக்கு தான் அங்கு பேச முடியாது.
நான் தனியாக திரெட் போட்டு வைத்துள்ளேன் அங்கு உங்களை பற்றி சொல்லுங்கள்.
எனக்கு எப்ப டைம் கிடைக்குதோ அப்போது பதில் போடுவேன்.

Jaleelakamal

ஜலீலா அக்கா உங்க பிரியாணி செய்தேன் நல்லா இருந்திச்சி ஆனால் என்க்கு எப்போதும் பொல பொலன்னு வர மாட்டுது அக்கா அதுக்கு என்ன ப்ண்ணனும்

பிரியாணி செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி பர்வீன்.

பொல பொலன்னு வர, உதியா முக்கால் பத்தில் வடித்து 20 நிமிடம் தம் போடனும்.

Jaleelakamal

Jaleela mam!இந்த பிரியாணிதான் இன்னைக்கு செய்தேன்.தம் பிரியாணி இப்பதான் ஃபஸ்ட் டைம் செய்தேன். அருமையாக வந்தது.Thank you for your wonderful receipe.

thanking you, its came very very tasty. thanks for arusuvai.com and Jaleela Banu akka.

டியர் ஜலிலா மெடம்
நான் அருசுவைகு புதுசு முதல் முரை உங பிரியனி தான் செய்தென்.ரொம்ப நல்ல வந்தது.இந்த முரை ரம்ழான்கு இதான் எஙல் வீட்டு ச்பெசல்.னன்ரி அக்கா

ஹலீமா, சுமித்ரா, திவ்யா சுரேஷ் , சென்னை சிக்கன் பிரியாணி செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி , சமீபத்திய பதிவு இல்லாததால் எந்த எந்த குறிப்புகளுக்கு பின்னூட்டம் வந்துள்ளதுஎன்று தெரியவில்லை.
எல்லோருக்கும் மிக்க நன்றி

ஜலீலா

Jaleelakamal

இன்று உங்கள் பிரியானி செய்தென்.மிகவும் அருமையாக இருந்தது.நன்றி.

Hi madam,

I'm new to this site. I have tried many of your recipes before registering this site, but now only I registered. I tried your chennai chicken biriyani last sunday. It was very yummy, my husband loved a lot. Thanks for such a wonderful recipe.

ஜலிலா மேடம் உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை எங்கள் வீட்டில் அனைவரும் உங்கள் விசிறிகள்

gods gift

http://www.arusuvai.com/tamil/node/12693

இந்த அளவின் படி மேலே உள்ல லிங்கை கிளிக் பன்னுங்கள்
முன்று மடங்கு செய்யுங்கள்.
எல்லாம் பெரிய ஆட்கள் என்றால்

8 டம்லருக்கு 2 1/2 கிலோ சிக்கன்,

ஒரு பெரிய நபருக்கு 3/4 டம்ளர் போடுஙக்.
சின்ன பசங்கள், பெண்களுக்கு 1/2 டம்லர் என்ர விததில் கணக்கு பண்ணி கொள்ளுஙக்ள், முதல் முறை என்பதால் , இரண்டு பாதியா செய்ய்ங்கள்.

ஜலீலா

Jaleelakamal

hello Akka,

Thanks a lot for ur tips. akka let me know how to cook the biriyani in the rice cooker, please explain. I am bachelor and cook myself, please help me.

உங்க பிரியாணி தான் செய்தேன் நன்றாக இருந்தது. இதே மாதிரி ஜீர சம்பா அரிசி சேர்த்து செய்யலாமா. அரிசி அரை பதம் வேக வைத்தா போதுமா.

"விடா முயற்சி வெற்றி தரும்"
......திவ்யாலோகேஷ்

ராம் 12345

ரைஸ் குக்கரில் செய்வதா இருந்தால்

4 டம்ளர் தயாரிக்கும் ரைஸ் குக்கர் என்றால்
அதில் 3 டம்ளர் தான் செய்யனும்

ஏனெனில் சிக்கன் கூட்டு ஒரு டம்ளர் அளவுக்கு வரும்.

சிக்கன் என்பதால் கேஸ் அடுப்பில் ரைஸ்குக்கர் பாத்திரத்தை வைத்து தாளித்து சிக்கன் வெந்ததும் தண்ணீர் (ஒன்றிற்கு 11/4 போதும்)

1 : 1 1/4 ஊற்றி அரிசி களைந்து போட்டு எப்பவும் சாதம் சமைக்கும் முறைப்ப்படி சமைகக்வும்.

இப்படிக்கு
என்றும் உங்கள்
ஜலீலாக்கா

Jaleelakamal

just now i prepared in home with mom's help. its really very tasty.just i felt my first preparation in home, is nice. thanks lot Jaleela Banu...:)

In God I Trust

அஸ்ஸலாமு அலைக்கும். சிக்கன் பிரியாணி நன்றாக இருந்தது .நான் அருசுவைக்கு புதிது .எனக்கு இதை உபயோகிக்க தெரியவில்லை .உதவுங்கள் .ப்ளீஸ்.

priyani kravi mathirai saithu pinbu sathathil kilaruvathu pola sollirukkeenga indha method la solt yappadi saerpathu kravi kku pothumana alavu munbu solt saerthal pinbu sadham pottathum solt kammiya irrukkumae... ithukku yenna pandrathunu sollunga ple...

Cooking is art

Hi akka.. 1 tumbler rice means how much kg.?

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா... நேற்று உங்கள் பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது... வீட்டில் எல்லோரும் பாராட்டினார்கள்... மிக்க நன்றி அக்கா.....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith