ஸ்ப்ரிங் ரோல் சமையல் குறிப்பு - படங்களுடன் - 12701 | அறுசுவை


ஸ்ப்ரிங் ரோல்

வழங்கியவர் : shadiqah
தேதி : Sat, 09/05/2009 - 15:37
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3
1 vote
Your rating: None

 

 • மைதா - 2 கப் + அரை கப்
 • கார்ன் ப்ளார் - அரை கப்
 • பச்சைபயறு - அரை கப்
 • கோஸ் - 100 கிராம்
 • கேரட் - ஒன்று
 • பீன்ஸ் - 6
 • குடை மிளகாய் - ஒன்று
 • ஸ்பிரிங் ஆனியன் - 4 பீஸ்
 • செலரி - சிறிதளவு
 • அஜினமோட்டோ - அரை தேக்கரண்டி
 • சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
 • க்ரீன் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி
 • மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
 • பிரட் க்ரம்ஸ் - அரை கப்
 • உப்பு - சுவைக்கு
 • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 

காய்கறிகள் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். முதல் நாளே பச்சை பயிறை நன்கு ஊற வைத்து முளைக்கட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட், பீன்ஸ், கோஸ் ஆகியவற்றை போட்டு வதக்கவும். காய்கள் எண்ணெயில் மட்டுமே வதங்க வேண்டும். காய்கறியில் உள்ள நீர் முழுவதையும் வற்ற வைக்கவும். காய்கள் அரை வேக்காடாக வெந்திருந்தால் போதும்.

அதன் பின்னர் சாஸ் வகைகள், அஜினமோட்டோ, உப்பு சேர்க்கவும். அதனுடன் பொடியாக நறுக்கின குடை மிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன், செலரி, முளைக்கட்டிய பயிறு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

மைதா மாவுடன் கார்ன் மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் நீரில் நனைத்த துணியை விரித்து வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கரைத்து வைத்திருக்கும் மாவில் மெல்லிய தோசை வார்க்கவும்.

தோசை சற்று கூட முறுகாமல் லேசாக வெந்ததும் திருப்பிப்போடாமல் ஈரத்துணியின் மீது போட வேண்டும். அப்படிப் போடும் போது வெந்த பகுதி கீழேயும் வேகாத பகுதி மேலேயும் இருக்குமாறு போடவும். தோசை, சுருங்கிப் போகாமல் விரித்தாற்போல போடவும். இந்த தோசை மீது காய்கலவையை போதுமான அளவு வைத்து பக்கவாட்டு பகுதி இரண்டையும் மடக்கவும்.

பிறகு தோசையின் ஆரம்பத்தில் இருந்து பாய் போல் ரோல் செய்யவும். ரோல் செய்யும் போது உள்ளே வைத்திருக்கும் காய் பிரியாத அளவுக்கு செய்ய வேண்டும். தோசையின் சூட்டிலேயே நன்கு ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு எல்லாத் தோசைகளையும் ரோல் செய்துக் கொள்ளவும்.

மைதாவை ஒரு தட்டில் அல்லது கிண்ணத்தில் தோசை மாவு பதத்தில் கரைத்து ரோல்களை அதில் நனைத்து எடுக்கவும்.

அதன் பின்னர் பிரட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.

ரோல்கள் எல்லாவற்றையும் டப்பாவில் வரிசையாக அடுக்கி வைக்கவும்.

இந்த ரோல்களை ப்ரீஸரில் வைத்துக் கொள்ளவும். ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் நன்றாக இருக்கும்.

தேவைப்படும் போது ரோல்களை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்ததும், எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது சிறுதீயில் வேகச் செய்தால் தான் மொறுமொறுப்பாக இருக்கும். சாஸுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அசத்தலான அசல் சைனீஸ் ரோல் இது. அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் <b> திருமதி. ஸாதிகா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள ஸ்ப்ரிங் ரோல் இது. நீங்களும் இதனை செய்து பார்த்து தங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அசைவம் விரும்புபவர்கள் மைதாமாவில் தோய்த்து எடுப்பதற்கு பதிலாக முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொண்டு அதில் தோய்க்கவும். தோசை தவாவில் இருந்து சுலபமாக எடுக்க வரவும், சுவை அதிகரிக்கவும் விரும்பினால் மாவில் முட்டை சேர்க்கலாம். நாண்ஸ்டிக் தவா எனில் இன்னும் சுலபம்.ஸ்ப்ரிங் ரோல்

ஸாதிகா மேடம் ரொம்ப நல்ல இருக்கு இதை சீக்கிரம் பன்னனும்...தோசை மாதிரி ஊற்றி பன்னுவது புதுசா இருக்கு நான் சப்பாத்தி மாவு மாதிரி தெய்த்துதான் பன்னுவேன்... ஆனா இது ரொம்ப ஈஸியா இருக்கு

ஆமாம் மேடம் அமீர் எங்கே கானும்!!!!!! :-)

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அருமையான ஸடாடர்ஸ்

வாவ் ஸாதிகா அக்கா கலக்கிட்டிங்க போங்க‌
எல்லோருக்கும் பிடித்த அருமையான ஸடாடர்ஸ்
சூப்பர்

Jaleelakamal

தங்கை ஹாஷினி

அன்பு ஹாஷினி,உடனே பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.சப்பாத்தி மாவில் செய்வது ஒரு டேஸ்ட்.தோசை மாவில் செய்வது இன்னொரு டேஸ்ட்.செய்து ஃப்ரீஸரில் வைத்துக்கொண்டால் திடீர் விருந்தினர்களுக்கு கொடுப்பதற்கு வசதியாக இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தங்கை ஜலிலா

அன்பு ஜலீலா,
பின்னூட்டத்திற்கு நன்றி.என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும்.பிரீஸர் நிறைய ரோலும்,எண்ணெய் நிரப்பிய எலக்ட்ரிக்கல் ஃபிரையரும் வைத்து விட்டு ஊருக்கு போய் விடுங்கள்.நான் ஒரு வாரத்தை சமாளித்து விடுவேன் என்பார்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

வாட் எ ரெசிப்பி !

சூப்பரோ சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆஸியா

அன்பு ஆசியா,பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.இப்பொழுதெல்லாம் முன்பு போல் அடிக்கடி வருவதில்லையே?ஏன்?குறிப்புகளும் கொடுத்து வெகு நாட்களாகி விட்டனவே?
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஷைனீஸ் ரோல்

ஷைனீஸ் ரோல்
ஸாதிகா அக்கா இந்த ரோல் கடையில் வாங்கிவந்து பொரிப்பேன். இதே முறையிலேயே மட்டின் ரோலும் செய்வது. எங்கள் வீட்டில் என்னைத்தவிர எல்லோரும் மட்டின் ரோல் செய்வார்கள்.

நானும் அதேமுறையிலேயே செய்து அறுசுவைக்கு போட நினைத்திருந்தேன். நீங்கள் அழகாகச் செய்து காட்டிட்டீங்கள். நானும் மட்டின் ரோல், சொல்லி வைத்து, பொரிக்காமல் வாங்கிவந்து, பிரீஸரில் வைத்து பொரித்துப் பொரித்துச் சாப்பிடுவோம்.

நன்றாக இருக்கு இப்போ நான் மீண்டும் 2 வாரம் சைவம்... எனவே ஒரு பார்ஷல் பிளீஸ்.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா

இனி கடையில் வாங்கிபொரிக்காதீர்கள்.நான் கொடுத்து இருக்கும் குறிப்பு வெஜ்.நீங்கள் மட்டனில் எப்படி செய்வீர்கள்?உங்களின் குறிப்பையும் எதிர் பார்க்கின்றேன்.பின்னூட்டத்திற்கு நன்றி அதிரா.
ஸாதிகா

arusuvai is a wonderful website