ஒரிஜினல் சூப்

வழங்கியவர் : asiya omar
தேதி : ஞாயிறு, 10/05/2009 - 15:00
ஆயத்த நேரம் : 10 - 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
பரிமாறும் அளவு : 1 -2 நபருக்கு
- பாசிப்பருப்பு - ஒரு கைகுத்து
- கேரட் - 1
- பீன்ஸ் - 5
- கோஸ் - சிறிய துண்டு
- சின்ன வெங்காயம் - 5
- பூண்டு - 2 பல்
- தக்காளி - சிறியது 1
- ஏதாவது ஒரு கீரை - ஒரு கைகுத்து
- உப்பு - தேவைக்கு
- பாசிப்பருப்பை ஊறவைக்கவும். காய்கறிகள், கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
- குக்கரில் அனைத்தும் போட்டு, சிறிது உப்பு சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வெயிட் போடவும்.
- 2 விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
- ஆறியவுடன் சூப் வடிகட்டி விட்டு வேகவைத்த காய்கறி பருப்பை மிக்ஸியில் ஒருசுற்று சுற்றி கொள்ளவும். பேஸ்ட் ஆகக்கூடாது. இதனுடன் நாம் வடிகட்டிய சூப்பை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
- சுவையான சத்தான ஒரிஜினல் சூப் ரெடி. சூப்பில் விரும்பினால் மிளகுப்பொடி தூவிக்கொள்ளலாம். இதனை ப்ரட் டோஸ்ட் உடன் பரிமாறவும்.
Note:
இது பெட்டில் இருப்பவர்களுக்கு லேசான ஆகாரமும் சத்தானதும் ஆகும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
18 நிமிடங்கள் 56 sec முன்பு
48 நிமிடங்கள் 14 sec முன்பு
ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் முன்பு